பிரண்டை
இதன் மறு பெயர்கள்: தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, கிரண்டை, அரிசிணி
வளரும் இடங்கள்: இந்தியாவில் அனைத்து வெப்பமான பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது; தோட்டங்களில் கூட வளர்க்கப்படுகிறது. தெற்காசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வளர்கிறது.
பயன் தரும் பகுதிகள்: இளம் தண்டு, இலை, வேர்கள் ஆகிய அனைத்துமே பயன் தருகிறது.
பொதுவான தகவல்கள் : பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும்.
பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தப் பிரண்டை உடைந்த எலும்புகளை இணைக்கும் தன்மை உடையது. இதனைப் பதப்படுத்தி உண்ண விந்து உற்பத்தியாகும். எனினும் பித்தத்தையும் வளர்க்கும். ஆனால் வாத கபங்களைத் தணிக்கும்.
மூன்று பட்டைகளைக் கொண்ட பிரண்டையை திரிதார என்று அழைப்பார்கள். இந்த வகைப் பிரண்டை இனிப்புச் சுவையையும் இலகு குணமும் வறட்சித் தன்மையும் கொண்டு இருக்கும்.
நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டையை சதுர்தார என்று அழைப்பார்கள். இது உஷ்ண வீரியம் உள்ளது.
பிரண்டையில் உருண்டை, சதுர வட்டை, முப் பிரண்டை, மூங்கிற் பிரண்டை, கோப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
வாய், உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய இவைகளில் ஏற்படும் அனைத்து வகை பிணிகளுக்கும் பிரண்டை நல்ல மூலிகை மருந்தாக உள்ளது.
பிரண்டையின் மருத்துவப் பயன்கள்:-
* தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே போவது பிரண்டை.சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுக் கம்பிகளும்,மடலான இலைகளும் கொண்டிருக்கும்.
இதன் சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி. வாருங்கள் இதன் முக்கிய மருத்துவப் பயன்களைக் காண்போம்.
* இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும்.
* பிரண்டை சாற்றில் புளி,உப்பு,கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி,அடிபட்ட வீக்கம்,எலும்பு முறிவு,வீக்கம் தீரும். கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி,சீதபேதி,நுரைத்த பச்சை பேதி தீரும்.
* பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு தீரும்.
* பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை புண்கள்,தீராத நாட்பட்ட வயிற்றுவலி,மூலம்,மூல அரிப்பு,மலத்துடன் சீழ்,இரத்தம் வருதல் தீரும்.
* சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி, பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.
* பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
* பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து அந்த அளவில் கால் பங்கு புளியும், கால் பங்கு உப்பும் சேர்த்துச் சுண்டைக் குழம்பு போல காய்ச்சி இறக்கி அதனை இளசூட்டுடன் அடிபட்ட வீக்கத்தின் மேல் கனமாகப் பூசி வந்தால் வீக்கம் வாடும். சுளுக்கு, உடல் வலி போன்றவை கூட நிவர்த்தியாகும்.
* பிரண்டை உப்பு இரண்டு அரிசி எடை எடுத்துப் பாலில் கலந்து மூன்று வேளை குடித்து வர சிறு குழந்தைகளின் பேதி, வாந்தி, சீதபேதி நுரைத்த பச்சை பேதி நிற்கும்.
* மிளகு அளவு பிரண்டை உப்பை பசும் வெண்ணையில் குழைத்து 2 வேளை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு, இரத்தம் தடைபடுதல், குத்துக் கடுப்பு ஆகிய அனைத்தும் குணமாகும்.
* பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வர அஜீரணம் குணமாகும்.
* பிரண்டையை நெய் விட்டு வறுத்து, அரைத்துக் கொட்டைப்பாக்கு அளவு 8 நாள் காலை, மாலை சாப்பிட கருவாயின் தினவும், குருதிப் போக்கும் ஒழியும்.
இவ்வளவு குணநலங்கள் கொண்ட பிரண்டையின் பயன்பாடு மிகவும் குறைந்து போய் விட்டது வருத்தமான ஒன்று.
பிரண்டையின் இதர பயன்பாடு:-
1. பிரண்டையைக் கொண்டு சட்டினி மற்றும் வடகம் செய்யலாம்.
2. இந்துக்களின் மரண நல்லடக்கங்களில் சவக்குழியில் பிரண்டை நடப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி