29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் அற்புதமான ஒரு இலை எது தெரியுமா?சூப்பர் டிப்ஸ்

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.

தடுப்பது எப்படி : அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

துத்தி கீரை : பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்கள் என எல்லா இடங்களிலும் வளரும். அதனை மூல வியாதிக்கு பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கு காண்போம்

வழிமுறை -1 : துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சைமைப்பதுபோல் செய்து தினமும் மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட்ட வேண்டும்.

வழிமுறை -2 : காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.

வழிமுறை -3 : துத்திஇலையை விளக்கெண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.

வழிமுறை-4 : காரமான உணவு தவிர்க்கவும். வாரம் ஒருமுறை எண்னெய் குளியல் எடுக்க வேண்டும். இவ்வாறு மேலே சொன்னபடி தொடர்ந்து 40 நாட்கள் செய்துவந்தால் மூலநோய் குணமாகும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றம்.. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் சந்திக்கும் அபாயம் என்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் மூசு முட்டுவது போல் உணர்வது ஏன்?ச்

nathan

மனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி? மனநல நிபுணர்

nathan

வைட்டமின் குறைபாடு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

nathan

தும்மலை தடுக்க முயற்சி செய்யாதீர்கள்

nathan

காய்ச்சல் மற்றும் சளியை தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டியவை!

nathan

எளிய மருத்துவம்-இய‌ற்கை வைத்தியம்!

nathan

உங்களுக்கு தெரியுமா பற்களின் மஞ்சள் கரையை வெண்மையாக்கும் அற்புத இலை

nathan

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

nathan