26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
brushing baby teeth 1 e1449635140400
ஆரோக்கியம்வீட்டுக்குறிப்புக்கள்

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை வைத்திருக்கும் பெற்றோரா நீங்கள் அப்ப உடனே இத படிங்க…

உறங்கும் அறை:

“குழந்தைகளுக்கான உணவு எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு அவர்கள் வசிக்கும் இடம் சுத்தமாக இருப்பது முக்கியம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை அடிக்கடி சிறுநீர் மலம் கழிப்பது ஆரோக்கியமான அறிகுறி. ஆனால், அவற்றை நாம் சரியாகச் சுத்தப்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். பலர் குழந்தைகள் சிறுநீர் கழித்த இடத்தை மேட் போட்டு துடைத்து, அந்த மேட்டை குழந்தை இருக்கும் ரூம் வாசலில் போட்டு விடுவார்கள். குழந்தை தவழ்ந்து அந்த மேட் மீது கைவைத்தாலோ, அதில் கால் பட்டாலோ அதிலிருக்கும் கிருமியினால் தொற்று ஏற்படும்.

குழந்தைகள் இருக்கும் இடத்தை/ரூமை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சுத்தமாகத் துடைத்து எடுப்பது அவசியம்.சிறுநீர் அல்லது மலம் கழித்த இடத்தை உடனடியாக டெட்டால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

brushing baby teeth 1 e1449635140400

 

டயப்பர்:

குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. முடியாதபட்சத்தில், அமோனியம் சேர்க்காத டயப்பர்களை வாங்கிப் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்திய டயப்பரை (சிறுநீர் கழிக்காவிட்டாலும்கூட) ஒருமணி நேரம் கழித்து மாற்றிவிடுங்கள். சிறுநீர் கழித்திருந்தால், டயப்பர் கழட்டியவுடன் சுத்தமான தண்ணீரில் நனைத்த பருத்தித் துணியால் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துடைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் தேய்த்துவிட்டு பிறகு புது டயப்பரை மாற்றவும். இம்முறையால், டயப்பரினால் வரக்கூடிய ஒவ்வாமை வராமலிருக்கும். சோப்புப் போட்டு குளிக்க வைப்பதற்கு பதிலாக வீட்டிலேயே தயாரித்த குளியல் பொடி கொண்டு குளிக்க வைக்கலாம்.

 

உணவு:

குழந்தைகளுக்கான திட உணவென்பது எளிதில் ஜீரணமாகக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஓர் உணவு கொடுத்த ஒரு மணி நேரத்திலேயே அடுத்த திட உணவைக் கொடுப்பது நல்லதல்ல. ரெடிமேட் உணவுகளைவிட, வீட்டிலேயே அரிசிக் கஞ்சி, ஆப்பிள் அவித்தது, அவித்த உருளைக்கிழங்கு, கஞ்சி வகையறாக்களைச் சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். ஓர் உணவு கொடுத்த இரண்டு மணி நேரம் கழித்தே அடுத்த திட உணவை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான செரிமானம் என்பது சற்று தாமதமாகத்தான் நடைபெறும். எனவே கவனம்.

முட்டை:

முட்டையைப் பொறுத்தவரை 7 அல்லது 8 மாதங்களில் மஞ்சள் கருவைச் சிறிது சிறிதாகக் கொடுக்க ஆரம்பிக்கலாம். முட்டையின் மஞ்சள் கரு ஒத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டால், ஒரு வயதுக்குப் பிறகு வெள்ளைக்கருவை கொடுக்க ஆரம்பிக்கலாம்.

பொம்மைகள்:

கையில் வைத்து சப்பும் பொம்மைகளை அல்லது உருட்டி விளையாடும் பொம்மைகளை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சுடுநீரில் நன்கு அலசி எடுத்து உலர வைத்து பிறகு விளையாட கொடுக்கலாம். தரையில் படிந்திருக்கும் தூசு, கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் பொம்மையில் உட்கார்ந்து அவை அப்படியே குழந்தையின் நாக்கு வழியாக உடலுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனம் அவசியம். ஒன்பது மாசம் ஆகும்போது வாரம் ஒருமுறை பொம்மைகளைக் கழுவி குழந்தைகளிடம் கொடுக்கலாம்.

ஒருமுறை வாங்கிய காய்ச்சல், சளிக்கான மருந்தை மறுமுறை உபயோகப்படுத்த வேண்டாம். மூடியைத் திறக்கும் மருந்துகள் அதனுடைய பலனை சீக்கிரம் இழக்க ஆரம்பிக்கும். எனவே, மருத்துவரைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் புது மருந்துகள் வாங்கி பயன்படுத்துங்கள்.

Related posts

டீன்ஏஜ் பெண்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika

பல் எந்த விதத்தில் நாம் பராமரிக்காததால் நம்முடைய உள்ளுறுப்புகளை பாதிக்கும்….

sangika

விதைகளைப் பாதுகாப்பது என்பது உயிர்களை பாதுகாப்பதற்கான ஒரு முன் கூட்டிய நடவடிக்கை

sangika

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!…தெரிஞ்சிக்கங்க…

nathan

வைட்டமின் ஏ குறைபாடு உள்ள ஒரு நபர் அடிக்கடி நோய்த்தொற்றுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.. தவிர்க்க தினமும் என்ன செய்யணும் தெரியுமா?

nathan

முயன்று பாருங்கள் நரம்புச்சுருட்டலுக்கு மிகச்சிறந்த நிவாரணி

nathan

தேங்காய் உடைப்பதை வைத்து சகுணம் பார்ப்பது எப்படி?

nathan

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

sangika