28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201803141201439401 2 homeclean. L styvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே உங்க வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்..

நம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம் செய்து அழகாக வைப்பது நமது கடமை. எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எப்படி அட்டவணை போட்டுக் கொண்டு செயல்படுவது என்பதைப் பார்க்கலாம்…

தினமும்…

கிச்சன்: பாத்திரங்களைக் கழுவி ஸிங்க்கை சுத்தம் செய்யுங்கள். சமையல் திண்டையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்

பாத்ரூம்: வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் கழுவுங்கள். பொருட்களை அவற்றிற்குரிய இடங்களில் வையுங்கள்

வரவேற்பறை மற்றும் பிற அறைகள்: அறையை ஒழுங்குபடுத்துங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள். தேவைப்பட்டால் தரையைப் கூட்டித் துடையுங்கள், அல்லது வாக்யூம் க்ளீனரால் சுத்தம் செய்யுங்கள்

வாரம் ஒரு முறை…

பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள். தேவைப்பட்டால் தரையைக் கூட்டித் துடையுங்கள் அல்லது வாக்யூம் செய்யுங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள்

கிச்சன்: ஸ்டவ்வையும், திட்டின் மேல் வைக்கப்படும் மிக்ஸி போன்ற சாதனங்களையும், பாத்திரம் கழுவுகிற ஸிங்க்கையும் சுத்தம் செய்யுங்கள். தரையைத் துடைத்து சுத்தம் செய்யுங்கள்

பாத்ரூம்: சுவர்கள், வாஷ் பேஸின் போன்றவற்றைக் கழுவிவிடுங்கள். டாய்லெட்டையும், ஷெல்ஃபையும், மற்ற இடங்களையும் சுத்தம் செய்வதற்குக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள். டவல்களைத் துவையுங்கள். தரையைப் கூட்டிவிட்டுத் துடையுங்கள்

மாதம் ஒரு முறை…

பாத்ரூம்: சுவர் முழுவதையும் நன்றாகக் கழுவிவிடுங்கள்

வீடு முழுவதும்: கதவு நிலைகளைச் சுத்தம் செய்யுங்கள். சோஃபாவை வாக்யூம் செய்யுங்கள், அல்லது நன்கு தூசிதட்டி விடுங்கள்

தோட்டம், முற்றம், கார் ஷெட்: தேவைப்பட்டால் கூட்டி சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை கழித்துவிடுங்கள்

ஆறு மாதத்திற்கு ஒரு முறை…

பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை, தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி துவைத்து, காய வைத்து மடித்து பராமரியுங்கள்.

கிச்சன்: ஃபிரிட்ஜை காலி செய்துவிட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்

பாத்ரூம்: ஷெல்ஃபுகளையும் டிராயர்களையும் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற அல்லது பழைய மருந்து, மாத்திரைகள், கெமிக்கல்கள் போன்றவற்றைத் தூக்கிப்போடுங்கள்

வீடு முழுவதும்: லைட், ஃபேன், கூண்டுவிளக்குகள் ஆகியவற்றையெல்லாம் சுத்தம் செய்யுங்கள். ஸ்கிரீன்களைத் துவையுங்கள். கதவுகளையும் ஜன்னல்களையும், ஜன்னல் நிலைகளையும் கழுவுங்கள்.201803141201439401 2 homeclean. L styvpf

Related posts

திருமண வாழ்க்கை கலகலப்பா இருக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

nathan

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கி நன்மைகள் நடைபெற ! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிந்துகொள்வோமா? உங்களின் அழிவுக்கும், தோல்விக்கும் காரணம் உங்களுக்கு இருக்கும் இந்த குணம்தான்…!

nathan

சமையலில் ஏற்படும் சில தவறுகள்! ஏற்படும் பெரும் பாதிப்புக்கள்!

sangika

வாய்ப்புண்ணை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்!!இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இப்படி ப்ளான் பண்ணி வேலைப் பண்ணா, அலுவலக மன அழுத்தமே வராது!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

பித்தப்பை கல் கரைய மூலிகை

nathan

மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!

nathan