26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 1513943698 2
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உடல் எடை குறைக்க வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய 20 உணவுகள்

காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள். அவை, தர்பூசணி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சைப் பழங்கள். மேலும் சுப்பர் பூட்ஸ் (super foods) என்று அழைக்கப் படும் கிரீன் டீ, முழு தானிய ரொட்டி வகைகள் மற்றும் மரக்கோதுமை ஆகும்.

உங்கள் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறதா? அதை பற்றி இனி கவலை கொள்ள வேண்டாம். உடல் எடையை குறைப்பதற்கு இனி ஜிம் செல்வதோ அல்லது கடுமையான டயட் இருப்பதோ தேவை இல்லை.

உங்களுக்காக சில உணவு பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காலையில் வெறும் வயிறில் உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை எளிதில் குறைக்கலாம். இதோ படியுங்கள் உங்கள் எடை குறைக்கும் உணவு பொருட்களை பற்றிய தொகுப்பை.

பப்பாளி : பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறைகிறது. பப்பாளியில் இருக்கும் பபைன் என்னும் கூறு, எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது. இந்த கூறு கொழுப்பை எரித்து, தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழித்து உடலில் உள்ள அதிகமான நீரை வெளியேற்றுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் விரைவில் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. பப்பாளி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளது.

ஓட்ஸ் நீர் : ஓட்ஸை திட உணவாக எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக, 1:3 என்ற அளவில் அதிக அளவு நீர் சேர்த்து திரவ உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு அதிக நார்ச்சத்து உள்ள உணவாக கருதப்படுகிறது. இந்த உணவை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் எடை குறைகிறது. இந்த ஓட்ஸ் நீர் , நார்சத்து நிறைந்த ஒரு திரவம் ஆகையால், எளிதில் வயிறு நிரம்புகிறது. பசி குறைகிறது. குடல் பகுதில் படிந்துள்ள கொழுப்பை, இந்த நார்ச்சத்து கரைக்க உதவுகிறது. இதனால் செரிமானம் எளிதாகிறது.

ஓட்ஸ் நீரில் லேசிடின் என்னும் ஓர் மாவுசத்து இயற்கையாக உள்ளது. இந்த சத்து, கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. இதனால் செரிமானம் சீராகிறது. வயிற்றில் கொழுப்பு சேர்வது குறைகிறது. உடலில் உள்ள அதிகமான நீரை வெளியேற்றுகிறது. இந்த அதிகமான நீர் கூட சில நேரங்களில் எடை அதிகரிப்பிற்கு காரணமாகின்றன. இவை வெளியேறும்போது உடல் எடை தானாக குறைகிறது.

கற்றாழை மற்றும் எலுமிச்சை: ஆலோ வெரா எனப்படும் கற்றாழை மற்றும் எலுமிச்சை சேர்ந்த ஒரு கலவை, எடை குறைப்பிற்கு முக்கிய பொருட்களாக பார்க்கபடுகின்றது. கற்றாழையில் இருக்கும் இலைகளில் ஒரு ஜெல் போன்ற திரவம் உள்ளது.

அந்த ஜெல்லில் அண்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை அதிகம் உள்ளது. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மற்றும் இது ஒரு சிறந்த அண்டி ஆக்ஸ்சிடென்ட் ஆகும். இவை இரண்டும் சேர்த்த ஒரு கலவை, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆகவே, காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை மற்றும் எலுமிச்சை கலந்த நீரை பருகுவதால் உடல் எடை குறைகிறது.

சாலட்: ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட ஒரு கிண்ணம் சாலட் சாப்பிடுவது ஒரு நல்ல காலையை உருவாக்குகிறது. இந்த வகை உணவில், நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எளிதில் வயிறு நிறைகிறது. கலோரிகளும் குறைவாக இருக்கிறது. வயிறு கனமாக இருப்பது போல் இல்லாமல், மிகவும் லேசாக உணர்வீர்கள். மேலும் பழம் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணுவதால், அவற்றில் உள்ள அண்டிஆக்ஸ்சிடென்ட் மற்றும் வைட்டமின் , மினரல்கள் போன்றவற்றால் உடலுக்கு சக்தியும் கிடைக்கிறது.

காய்கறி ஜூஸ் : காய்கறி ஜூஸ் விரும்பி சுவைக்கும் ருசி இல்லாமல் இருந்தாலும், உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடியதாகும். உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் இதன் முக்கிய பணியாகும். அதிகமான காலை உணவை சாப்பிடுவதற்கு மாற்றாக இந்த ஜூசை பருகலாம். இஞ்சி ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், கேரெட் ஜூஸ், ப்ரோகோலி பீட்ரூட் ஜூஸ், ஆப்பிள் மற்றும் இஞ்சி ஜூஸ், செலெரி மற்றும் தக்காளி ஜூஸ் பாகற்காய் ஜூஸ் போன்றவை எளிதில் தயாரிக்கக் கூடியதாகும். இவை மேற்கூறிய நன்மைகளையும் கொண்டது.

ஆப்பிள் : தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் உடல் வலிமை அதிகரிக்கிறது . மேலும் இதன் ஊட்டச்சத்துகள் உடல் எடை குறைப்பில் பெரிதும் உதவுகின்றன. ஆப்பிளில் அதிக நீர்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த சத்துகள், வயிற்றை எளிதில் நிரப்பி, உடல் எடை குறைய உதவுகிறது. மேலும் இதன் கலோரிகள் மிகவும் குறைவு.

பாதாம்: தினமும் நீரில் ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி உட்கொள்வது மூளை செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. ஆனால் பாதாம் எடை குறைப்பிற்கு உதவும் என்பதை அறிவீர்களா? ஆம், வெளிநாட்டு பத்திரிகை ஒன்று , உடல் பருமன் குறித்த ஒரு ஆய்வை நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்களில், நாள் முழுதும் பாதாம் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள்,அதிக மாவுசத்து உணவை எடுத்துக் கொண்டவர்கள் ஆகிய இருவருக்கும் கலோரிகள் அளவு ஒன்றாக இருந்தது. ஆனால் பாதாம் உட்கொண்டவர்கள் ஆறு மாதத்தில் 18% எடை குறைந்திருந்தனர். ஆகவே கலோரிகள் அளவில் ஆரோக்கியம் நிர்ணயிக்கபடுவதில்லை; ஆரோக்கிய கொழுப்பு உணவை எடுத்துக் கொள்வதனால் உடல் ஆரோகியம் அதிகரிக்கிறது.

அருகம் புல் ஜூஸ்: அருகம் புல் ஜூஸில் இரும்புசத்து,மக்னிசியம் , ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மற்றும் அதிக அளவு வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் உள்ள அதிக அளவு ஊட்டச்சத்தினால் பசி கட்டுப்படுகிறது. வெறும் வயிற்றில் இதனை பருகுவதால் எடை குறைப்பு அதிகரிக்கிறது.

மரகோதுமை : இந்த மரகோதுமை, கோதுமை அல்லது அரிசிக்கு மாற்றாக பயன்படுதும் ஒரு உணவு பொருள். இந்த குறைந்த கலோரி தானியம், குறைந்த கொழுப்பு உணவாகவும் இருப்பதால் பசி கட்டுப்படுகிறது. காலை உணவில் மாவுச்சத்து உணவை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள், மரகோதுமையை பயன்படுத்தலாம். இதன்மூலம் நிச்சயம் எடை குறையும் வாய்ப்புகள் உண்டு.

பட்டை தூள் நீர் : இன்சுலின் போல ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், கொழுப்பை கட்டுப்படுத்தவும், பட்டை தூள் உதவுகிறது. நீங்கள் எடை குறைய வேண்டும் என்று விரும்பினால், காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில், ஒரு கிளாஸ் பட்டை தூள் நீர் அருந்துவது நல்ல பலனை தரும். வெதுவெதுப்பான நீரில், 1/2 ஸ்பூன் பட்டை தூளை சேர்த்து இதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகவும்.

முட்டை : முட்டை என்பது அதிக புரத அளவு கொண்ட உணவாக கருதப்படுகிறது. முட்டையை காலை உணவாக சாப்பிடுவதால் வயிறு நிரம்பி, தினசரி கலோரி உட்கொள்ளல் அளவு 400க்கும் குறைவாக மாறுகிறது. தினமும் 2 மஞ்சள் கருவிற்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில், இது இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது.

சோள உணவு கஞ்சி : எடை குறைப்பிற்கான வழிகளை மேற்கொள்ளும்போது, சோள கஞ்சி மிகவும் ஏற்புடையதாகிறது. வெறும் வயிற்றில் சோள கஞ்சி பருகுவதால், உடல் எடை குறைகிறது. ஆரோக்கியம் அதிகரிக்கிறது. க்ளுடேன் இல்லாத ஓர் தானியமாக இருக்கிறது. நார்சத்து மற்றும் மினரல்கள் இருப்பதால் வயிறு எளிதில் நிரம்புகிறது.

கருந்திராட்சை : கருந்திராட்சை, அன்டி ஆக்ஸ்சிடென்ட் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ள ஒரு பழம். இதன் கலோரி மிகவும் குறைவானது. ஆகவே இவற்றை உங்கள் காலை உணவாக எடுத்துக் கொள்வதால் உங்கள் வயிறு எளிதில் நிரம்புகிறது.

தர்பூசணி : தர்பூசணி, நார்சத்து மற்றும் நீரால் ஆனா ஒரு பழம். காலையில் வெறும் வயற்றில், இந்த பழத்தை எடுத்துக் கொள்வது, 2 பெரிய கிளாஸ் தண்ணீர் குடித்து வயிறை நிரப்புவதற்கு சமம். ஆகவே எடை குறைப்பிற்கு ஒரு சிறந்த மாற்றாக இந்த பழம் இருக்கிறது.

முழு தானிய ப்ரெட் : வெள்ளை ப்ரெட் அல்லது பழுப்பு பிரெட்டை விட முழு தானிய ப்ரெட், சிறந்தது. இந்த ப்ரெட், குறைந்த கொழுப்பு அடங்கிய தானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆகவே, வெறும் வயிற்றில், இந்த பிரெட்டை காலை உணவாக உண்ணும்போது, வயிறு எளிதில் நிரம்புகிறது.

க்ரீன் டீ : தற்காலத்தில், ஆரோக்கிய வட்டத்தின் சிறந்த தீர்வாக க்ரீன் டீ உள்ளது. எடை குறிப்பில் இது ஒரு நல்ல பலனை தருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே ஒரு நாளில் 3 அல்லது 4 முறை க்ரீன் டீ பருகலாம்.

கோதுமை தவிடு: வெள்ளை ப்ரெட் தயாரிப்பில், வெளியாகும் கோதுமை தவிடு, அதிக ஊட்டச்சத்துகளை கொண்டது. 2 டேபிள் ஸ்பூன் கோதுமை தவிட்டில், 1.5 கிராம் அளவு கொழுப்பு உள்ளது. 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. 4 கிராம் புரதம் உள்ளது. மற்றும் அதிகளவு புரதம் மற்றும் மினரல்கள் உள்ளது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கூறு இதில் உள்ளது. ஆகவே தினசரி கோதுமை தவிடை எடுத்துக் கொள்வதால் உங்கள் எடை குறைந்தாலும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

நட்ஸ்: ஆரோக்கிய ஊட்டச்சத்துகளும் , கொழுப்புகளும் அடங்கியது நட்ஸ். தினமும் காலையில் வெறும் வயிற்றில் நட்ஸ் உட்கொள்ளும்போது விரைவில் எடை குறையும் வாய்ப்புள்ளது.

தேன் : தேன் என்பது ஐந்து விதமான சர்க்கரையை உள்ளடக்கியது. ஆகவே 1 ஸ்பூன் தேனை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மீறில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் உடல் விரைவில் இளைக்கும்.

தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு: 1 டம்ளர் தண்ணீருடன் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறை சேர்த்து பருகுவதால் உங்கள் எடை விரைவில் குறையும். எலுமிச்சை சாறில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் எளிதில் உடல் எடை குறைகிறது. எடை குறைப்பிற்கான பல்வேறு வழிகளை இங்கே பகிர்ந்திருகிரோம். நீங்களும் முயற்சித்து மற்றவர்களுக்கு இந்த நற்செய்தியை பரப்பலாம். விரைவில் உங்கள் எடை குறைய எங்கள் வாழ்த்துகள்!

22 1513943698 2

Related posts

கோடையில் கவனம் தேவை… இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

nathan

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புதங்கள்

nathan

வீட்டிலேயே இதுபோன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை கொண்டு பிரட் தயாரிக்கலாம்.

nathan

கோடை காலங்களில் நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடிய பானங்கள்!….

nathan

இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் தீயக் கொழுப்பை நீக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்கும் 10 அருமையான உணவுகள்!!!

nathan

உலகில் இத்தனை வகையான வாழைப்பழங்களா..? அத்தனையும் நோயை குணமாக்கும்..!

nathan

தாமரை தண்டில் இவ்வளவு நன்மையா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan