25.2 C
Chennai
Tuesday, Jan 14, 2025
blood 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்தும் அற்புதமான பழம்!!

இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். ரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருளான ஒக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்ப்பதாகும். அதேபோல் ரத்தமானது அனைத்து செல்களில் இருந்தும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.

ரத்தம் சுத்தமாக்குவதில் நுரையீரல் பெரும்பங்கு வகிக்கிறது. நுரையீரல் இதயத்திலிருந்து சுத்த ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்த நாளங்களின் மூலம் கடத்துகிறது.

அதே நேரத்தில், உடலின் அனைத்து பாகங்களில் இருந்து அசுத்த இரத்தத்தை இதயத்தின் வலது பாகத்திற்கு கொண்டு சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் பொழுது ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்பட்ட ஒக்ஸிஜன் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு ரத்தம் ஆக்சிஜன் கலந்த ரத்தமாக மாறுகிறது. இவ்வாறு இரத்தம் சுத்தமடைகிறது.தற்போது பெரும்பாலான நோய்களுக்கு ரத்த சுத்தமின்மை தான் காரணமாக உள்ளது. ரத்தம் சுத்தமாக இருந்தால்தான் நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கடத்தப்படும்.

கல்லீரல் உடலில் உள்ள கழிவுகளைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் உறுப்பாகும். ரத்தம் உடலின் கெட்ட பொருட்களை கல்லீரலுக்கு கடத்துகிறது. கல்லீரல் அதை வெளியேற்றுகிறது. மனிதனுக்கு வயது அதிகமாகும் பொழுது காலப்போக்கில் ரத்தம் தனது தூய்மையை இழக்கிறது.

அதன்பின்பு உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து அனைத்து நோய்களின் இருப்பிடமாக மனித உடல் மாறுகிறது. அதனால் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்று.ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல் தலை சுற்றல், கண் பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

ரத்தம் சுத்தமாக தண்டுக் கீரை மிளகு மஞ்சள் தேங்காய்பால் மருந்து
தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு சிறிது மஞ்சள் கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும் ரத்தமும் சுத்தமாகும்.நெல்லிக்காயைப் பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும்.

ஏன்… வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே ரத்தம் சுத்தமாகும்.புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும்.இந்த மருத்துவத்தை வேப்பிலை தளிரும் காலத்தில் ஒரு மாதம் முழுவதும் வருடத்திற்கு ஒரு முறை என பழக்க படுத்திக் கொண்டால் ஆயுளுக்கும் ரத்தம் சுத்தமாக இருக்கும்.ரத்தம் சுத்தமாக காசினிக் கீரையை பாதாம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். புத்துணர்ச்சி கிட்டும்.

முருங்கைக்கீரையை சுத்தம் செய்த பின் துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி பசும் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.அருகம்புல் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய ஓர் அதிசயம். நம் முன்னோர்கள் அதன் மகத்துவம் அறிந்தே அதனை விநாயகருக்கு மாலையாய் அணிவித்தனர். வெறும் அருகம்புல் சாறு அருந்தினாலே உடலில் பல அவஸ்தைகள் காணாமல் போகும். அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு ரத்தமும் தூய்மையாகும்.

ரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கி, ரத்தம் சுத்தமாக அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது.blood 1

Related posts

இரவில் பெற்றோர் அருகில் குழந்தைகளைப் படுக்க வைக்கலாமா?

nathan

ஆண்மை மற்றும் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் வியக்க வைக்கும் இயற்கை பொடிகள்!!!

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எளிய ஆயுர்வேத குறிப்புகள்!

nathan

சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும் இந்த கைவைத்தியங்கள்!.

nathan

உங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

காக்காய் வலிப்பு வரக்காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

nathan

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்

nathan

உங்களுக்கு தெரியுமா உள்ளாடை அணியும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள்?

nathan

டெங்கு காய்ச்சல் – வைத்தியர் பொ.மனோகரன்

nathan