23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
06 1512538727 2 cucumberjuice
எடை குறைய

உங்க நீர் உடம்பை எளிதில் குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து பருமனுடன் காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் பருமன் குறையாது. இந்த நிலையை நீர்க்கட்டு அல்லது திரவக் கோர்வை என்று அழைப்பர். உங்கள் பாதம், கை கால் விரல்கள், கைகள் மற்றும் மூட்டுக்கள் காரணமின்றி வீங்கி காணப்படுகிறதா? அப்படியெனில் கவனமாக இருங்கள்.

பொதுவாக இம்மாதியான நிலையை கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திப்பார்கள். மேலும் உடலுழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் இம்மாதிரியான பிரச்சனை வரக்கூடும். சரி, ஒருவருக்கு திரவக் கோர்வை எந்த காரணங்களால் வரக்கூடும்? உப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் உணவுகளை உட்கொள்வது, போதிய அளவு நீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றால் வரும்.

சரி, நீர் தேக்கத்தால் உடல் பருமனடைவதை எப்படி தடுப்பது என்று கேட்கலாம். நிச்சயம் ஒருசில உணவுகளின் மூலம் நீர் உடம்பைக் குறைக்க முடியும். கீழே நீர் உடம்பைக் குறைக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் உடல் பருமனைக் குறைக்கலாம்.

முட்டை முட்டையில் உள்ள அதிகப்படியான புரதம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளது. உடலில் அதிக அளவில் நீர் உள்ளவர்கள் தினம் முட்டையை காலை உணவாக மிகச் சிறந்தது. ஏனெனில், முட்டை உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றி உடலை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும். குறிப்பாக வேக வைத்த முட்டையை சாப்பிடுவது சிறந்தது.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் ஒரு நீர் காய். தினந்தோறும் உணவில் வெள்ளரிக்காயை ஜூஸாகவோ, சாலட் ஆகவோ சாப்பிடுவது உடலில் நீர்சத்து குறையாமல் தக்க வைக்க உதவும். மேலும், உடலில் இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மூங்கில் தண்டு மூங்கில் தண்டில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இதனை சாப்பிடும் போது உடலில் உள்ள சோடியத்தை அளவை குறைப்பதோடு, உடலில் இருந்து சிறுநீரகம் வெளியேறுவதை அதிகப்படுத்தி உடலை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. மேலும், உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்ற உதவக்கூடியது.

கிரான்பெர்ரி கிரான்பெர்ரியில் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. உடலில் அதிகப்படியான நீர் தேங்கியதால் பருமன் ஏறி அவதிப்படுபவர்கள் கிரான்பெர்ரியை சாப்பிட, நீர் வெளியேறி உடல் பருமன் குறையும். கிரான்பெர்ரியை ஜூஸாகவோ, பழமாகலோ, உலர் பழமாகவோ சாப்பிடலாம்.

ராஸ்ப்பெர்ரி ஆன்டிஆக்ஸிடன்ட், அதிகப்படியான பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6 ஆகியவற்றை உள்ளடக்கிய பழம் ராஸ்பெர்ரி. இந்த சத்துக்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும்.

செர்ரி செர்ரி பழத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள நீர்த்தேக்கத்தை அகற்றுவதோடு, அதனால் ஏற்படக்கூடிய உடல் பருமனை தடுக்கிறது.

கூனைப்பூ கூனைப்பூக்களில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதோடு, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகளவிலும் உள்ளது. இவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையால், நீர்த்தேக்க பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பீட்ரூட் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் நிறைந்த பீட்ரூட், உடலில் உள்ள தேங்கியுள்ள அதிகளவு நீரைக் குறைக்க உதவும். எனவே உடம்பில் நீர் அதிகம் சேர்ந்து உடல் பெருந்திருந்தால், அத்தகையவர்கள் தங்களது உணவில் பீட்ரூட்டை அடிக்கடி சேர்த்து வர, உடல் பருமன் குறையும்.

தர்பூசணி பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் வளமான அளவில் நீர்ச்சத்தும் உள்ளது. என்ன தான் இதில் நீர் இருந்தாலும், அது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவும். ஆகவே நீர் உடம்பு கொண்டவர்கள் எடையைக் குறைக்க, அன்றாடம் சிறிது தர்பூசணியை சாப்பிடுங்கள்.

செலரி செலரியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது. அதோடு செலரியில் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. எனவே இந்த செலரியை டயட்டில் அடிக்கடி சேர்க்க நீர் உடம்பு குறையும்.

அவகேடோ அவகேடோ பழம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றே. இதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் மற்றும் பொட்டாசியம், அதிக நீர் தேக்கத்தால் உருவான தொப்பையைக் குறைக்க உதவும். அதற்கு அவகேடோ பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் வடிவில் உட்கொள்ளலாம்.

இஞ்சி இஞ்சி, நீர் உடம்பு கொண்டவர்களுக்கு மிகவும் சிறப்பான ஓர் உணவுப் பொருள். இஞ்சியில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அதிகப்படியான நீரை, சிறுநீர் வழியே வெளியேற்றும்.

கிட்னி பீன்ஸ் கிட்னி பீன்ஸை ஒருவர் தங்களது டயட்டில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், நீர்த்தேக்கத்தால் உடல் பருமனடைவதை தடுக்கலாம். இதற்கு கிட்னி பீன்ஸில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசிய சத்துக்கள் தான் முக்கிய காரணம்.

கருப்பு பீன்ஸ் கருப்பு பீன்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதோடு, இதில் பொட்டாசியம் மற்றும் மக்னீயம் அதிகம் உள்ளது. எனவே இந்த கருப்பு பீன்ஸை அன்றாட உணவில் சிறிது சேர்க்க, நீர் உடம்பைக் குறைக்கலாம்.

அன்னாசி அன்னாசியில் உள்ள முக்கிய உட்பொருளான அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பொட்டாசியம், அதிக நீர் தேக்கத்தால் உடல் குண்டாவதைத் தடுக்க உதவும். எனவே அன்னாசிப் பழம் கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

வாத்து கறி நீர் தேக்கத்தால் உடல் பருமனடைவதைத் தடுக்க வாத்துக் கறி உதவும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தான் காரணம். ஆகவே நீர் உடம்பைக் குறைக்க வாத்துக் கறியை சாப்பிடுங்கள்.

கேரட் கேரட்டில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியத்தைத் தவிர, ஏராளமான அளவில் பீட்டா கரோட்டீன் சத்துக்களும் உள்ளது. எனவே நீர் உடம்பு கொண்டவர்கள் கேரட்டை ஜூஸ் வடிவிலோ அல்லது சாலட் வடிவிலோ சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆப்ரிகாட் ஆப்ரிகாட்டில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், ஒரு நல்ல சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு, சிறுநீரின் வழியே அதிகளவு நீரை வெளியேற்றும். அதோடு இதில் பீட்டா-கரோட்டீன் சத்துக்களும் நிறைந்துள்ளன.

பீன்ஸ் உடலில் உள்ள அதிகளவு நீர்த்தேக்கத்தை பீன்ஸ் மூலம் தடுக்கலாம். பீன்ஸில் உள்ள வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் நீர்த் தேக்க பிரச்சனையைப் போக்கும்.

பாதாம் பாதாமில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஒரு நல்ல கொழுப்புக்கள். அதோடு இதில் நல்ல அளவில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இது உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றும்.

எலுமிச்சை தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸினுடன், அதிகப்படியான நீரும் வெளியேறும்.

பார்லி நார்ச்சது, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்த பார்லியை ஒருவர் அன்றாட உணவில் சிறிது சேர்த்து வருவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் வெளியேறி, நீர் உடம்பு வருவதைத் தடுக்கலாம்.

இறைச்சி இறைச்சி உடலுக்கு நல்லதல்ல என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நீர் உடம்பு உள்ளவர்களுக்கு இறைச்சி மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் ஒமேகா-3 கொழுப்பு, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள், உடலில் உள்ள அதிகளவு நீர்த்தேக்கத்தைத் தடுக்கும்.

அத்திப்பழம் அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம், நீர் உடம்பு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. அதற்கு அத்திப்பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் வடிவிலோ அல்லது உலர்ந்த வடிவிலோ உட்கொள்ளலாம்.

பட்டை பட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும். எனவே சிக்கென்ற உடல் வேண்டுமென்றால், அன்றாட உணவில் பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை பட்டை தூள் கலந்து தினமும் குடியுங்கள்.

அமரந்த் உங்களுக்கு கோதுமை அலர்ஜி என்றால், அதற்கு சிறந்த மாற்றாக அமரந்த் விளங்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் ஏராளமாக உள்ளது. எனவே நீர் உடம்பு கொண்டவர்கள், இதை உணவில் சேர்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மரவள்ளிக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் க்ளுட்டன் இல்லை. இதை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வர, நீர் உடம்பு வருவதைத் தடுக்கலாம்.

வெண்டைக்காய் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் நிறைந்த வெண்டைக்காய், உடலில் உள்ள நீர்த்தேக்கத்தை எதிர்த்துப் போராட உதவும். எனவே நீர் உடம்பைத் தவிர்க்க வெண்டைக்காயை அவ்வப்போது டயட்டில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அஸ்பாரகஸ் அஸ்பாரகஸில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. உடல் பருமன் கொண்டவர்கள், இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் அதிக நீர் தேக்கத்தால் பருமனடைந்த உடலை எளிதில் குறைக்கலாம்.

மாம்பழம் மாம்பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே குண்டாக இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிட அச்சம் கொள்ள வேண்டாம். சொல்லப்போனால், இது உடல் பருமனைக் குறைக்கத் தான் செய்யும்.

காளான் காளானில் நீர்த் தேக்கத்தால் உடல் பருமனைக் குறைக்கத் தேவையான சத்துக்களான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் காளானை சாப்பிடுங்கள்.

முட்டைக்கோஸ் முட்டைக்கோஸில் வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற அதிகளவு நீர்த் தேக்கத்தை வெளியேற்ற உதவும் சத்துக்கள் உள்ளன. ஆகவே முட்டைக்கோஸை பச்சையாகவோ, சாலட் வடிவிலோ சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

பருப்பு வகைகள் பருப்புகளில் புரோட்டீன், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. இதை அளவாக உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நீர் குறைந்து, உடல் பருமனும் குறையும்.

பக்வீட் (Buckwheat) அதிக நீர் தேக்கத்தால், உடல் பருமனடைந்திருந்தால் அதிலிருந்து பக்வீக் விடுபட உதவும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது.

பூனை மீன் பூனை மீனில் ஒமேகா-3, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற நீர்த்தேக்கத்தைக் குறைக்க உதவும் உட்பொருட்கள் உள்ளது. மேலும் இந்த மீன் நீர் உடம்பைக் குறைக்க உதவுவதோடு, இதயத்திற்கும் நல்லது.

வாழைப்பழம் பொட்டாசியம் அதிகம் நிறைந்த வாழைப்பழம், உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவும். எனவே தினமும் 1-2 வாழைப்பழத்தை நீர் உடம்பு கொண்டவர்கள் சாப்பிட வேண்டும்.

ஆப்பிள் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் பெக்டினுடன், பொட்டாசியமும் உள்ளது. எனவே உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். இதனால் நீர் உடம்பு வேகமாக குறையும்.

டேன்டேலியன் கீரை இந்த கீரையை பொரியல் செய்தோ அல்லது சாலட்டில் சேர்த்தோ உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள அதிக நீர் வெளியேறி, உடல் பருமன் வேகமாக குறையும்.

டார்க் சாக்லேட் டார்க் சாக்லேட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளுடன், வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற நீர்த்தேக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் சத்துக்களும் அடங்கியுள்ளன. அதற்கு தினமும் 1-2 துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

பீட்ரூட் கீரை பீட்ரூட் கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை வளமான அளவில் உள்ளது. இது நீர் உடம்பைக் குறைப்பதோடு, இரத்த சோகை பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவும்.

06 1512538727 2 cucumberjuice

Related posts

ஊளைச்சதைக் கோளாறு

nathan

எடை குறைக்கும் இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ்

nathan

நீங்கள் செய்யும் இந்த 7 தவறுகள் தான் உங்கள் எடையை குறையவிடாமல் தடுக்கிறது எனத் தெரியுமா?

nathan

உடல் கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இது ஈசியான மருந்து..!

nathan

தேவையற்ற கொழுப்புகள் கரைந்துதொப்பையை குறைக்க சில டிப்ஸ்….

sangika

சாப்பிடாமலே வெயிட் போடுதா? அப்ப இத படிங்க!

nathan

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்

nathan

உடல் எடையை குறைக்க நினைக்கும்போது பொதுவாக செய்யும் தவறுகள்

nathan

தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்

nathan