liver 10 1507622630
மருத்துவ குறிப்பு

உங்க கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள். அவசியம் படிக்க..

உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு சந்தையில் பல சுகாதார பொருட்கள் அறிமுகம் செய்ய படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட தீவிரமாக நச்சுக்களை விரட்டும் ஒன்று நம்மிடையே உள்ளது. அதுவும் நமது உடலிலே உள்ளது. அது என்னெவென்று தெரியுமா? அதுதான் கல்லீரல். கல்லீரல் சிறந்த முறையில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இரத்தத்தை சுத்தம் செய்யும் ஒரு பில்டர் போல் பயன்படுகிறது. இது மட்டுமல்ல , ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, ஆற்றலை சேமிக்கிறது, குடல் உணவை செரிமானம் செய்ய கூறுகளை உற்பத்தி செய்கிறது.

சில நோய்கள் தீவிரம் அடையும் வரை உடலில் எந்த ஒரு அறிகுறியும் இருக்காது. அந்த வகையில் “அமைதியான தொற்றுநோய்” என்று அழைக்கப்படுவது ஹெபடிடிஸ் – சி . ஹெப்படிட்டீசின் பலவகைகளும் கல்லீரல் நோயின் பொதுவான காரணங்களாகும். கல்லீரலில் பிரச்சனை , கல்லீரலில் கொழுப்பு படிவது அல்லது வேறு கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவது சிர்ஹோசிஸ் (cirrhosis) என்ற ஈரல் நோய் உடலில் ஏற்பட்டதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

நாள்பட்ட நோய் அல்லது காயத்தின் காரணமாக கல்லீரலில் ஏற்படும் ஒரு மோசமான பாதிப்பு தான் இந்த ஈரல் நோய். கல்லீரலில் ஏற்படும் கீல்வாதம் என்று இதனை கூறலாம். ஒருமுறை இந்த நோய் நம்மை ஆட்கொண்டுவிட்டால், நமது நிலை மோசமாகிறது. இந்த நோய் உண்டானவர்ளுக்கு புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஆகவே உறுப்பு மாற்று சிகிச்சை தேவைபடுகிறது.

கல்லீரலில் கொழுப்பு படிவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. உலகில் பலரும் இந்த கல்லீரல் பாதிப்பால் உடல் பருமன் அடைகின்றனர். மிதமான அளவு மது அருந்துவது, ஆரோக்கியமான உணவு முறையை கையாள்வது , அதிகமான உடற் பயிற்சி செய்வது போன்றவை கல்லீரல் நோய்க்கான தடுப்பு முறையாகும். கல்லீரலில் தோன்றும் சிறிய வலியையும் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நன்மை பயக்கும். கீழே மேலும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவையும் கல்லீரல் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இவற்றில் சிலவற்றை நீங்கள் உணரும்போது தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

வயிற்று வலி: அடிவயிற்றின் மேல்பகுதியில், புண், வீக்கம் அல்லது வலி தோன்றினால், கல்லீரலை பரிசோதிக்க வேண்டும். கல்லீரல் உங்கள் வயிற்று பகுதியின் பெரும்பாலான இடத்தை அடைத்து கொண்டிருக்கும். அதன் முனை, வயிற்றின் வலது பகுதியில் அமைத்திருக்கும். ஆகவே கல்லீரலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு உங்கள் வயிற்றின் வலது பகுதியில் வலி ஏற்படும்.

கண்களில் மற்றும் சருமத்தில் மஞ்சள் நிறம்: உடலில் பழைய இரத்த அணுக்கள் உடைக்கப்படும்போது பிலிரூபின் என்ற ஒரு மஞ்சள் கூறு உற்பத்தியாகிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்போது இந்த கூறுகள் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. அதே சமயம், கல்லீரலில் ஆரோக்கிய பிரச்சனை இருக்கும்போது, இவை மீண்டும் இரத்தத்தில் படிகின்றன, இதனால் உங்கள் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகின்றன. இதனைதான் நாம் மஞ்சள் காமாலை அல்லது ஜாண்டிஸ் என்று கூறுகிறோம். சிறுநீரில் அடர்த்தியான நிறம் இதன் மற்றொரு அறிகுறியாகும்.

மூட்டு வலி: கீல்வாதம் போன்ற மூட்டு வலி, குமட்டல், வாந்தி, சோர்வு, பசியின்மை போன்றவை கல்லீரல் நோயின் குறிப்பாக தன்னுடல் செறிவு ஹெப்பாடிட்டீஸ் (autoimmune hepatitis) நோயின் அறிகுறிகளாகும். இந்த நிலையில் , நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக கல்லீரலில் உள்ள அணுக்கள் மற்றும் திசுக்களை தாக்குகின்றன. இந்த நோய் பொதுவாக பெண்களை அதிகம் தாக்குகிறது.

சரும திட்டுகள்: கல்லீரல் சரியான முறையில் இரத்தத்தை சுத்தம் செய்யாதபோது, சருமத்தின் மேல்புறத்தில் இரத்தம் உறைந்து சில திட்டுகள் தோன்றும். இவை பெரும்பாலும் மார்பில் அல்லது தலைக்கு கீழ் பகுதியில் தோன்றும்.

குழப்பம்: நோயால் பாதிக்கப்பட்ட கல்லீரல், இரத்தத்தில் மற்றும் மூலையில் அதிகமான தாமிரத்தை உற்பத்தி செய்யும். இதனால் மன குழப்பம் அதிகரிக்கும். முற்றிய கல்லீரல் நோயின் அறிகுறியாக இது உணரப்படுகிறது. கல்லீரலின் ஆரோக்கியம் மொத்த உடலின் ஆரோக்கியம் என்பதை புரிந்து கொண்டு சீரான உணவையும் ஆரோக்கியமான பழக்கத்தையும் மேற்கொள்வோம்.

liver 10 1507622630

Related posts

இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

வாழ்க்கை தத்துவம் சொல்லும் முத்தான மூன்று கதைகள்…

nathan

குறட்டையைத் தடுக்க நவீன கருவி

nathan

டைப் 2 சர்க்கரை நோய் ஆண்கள் மற்றும் பெண்களில் யாரை அதிகம் பாதிக்கிறது? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க உடலில் கொலஸ்ட்ரால் அளவ குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

nathan

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் நடக்கும் அற்புதம் என்ன தெரியுமா?

nathan

பெண்கள் எந்த வகை ஆண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை

nathan

அவசியம் படிக்க..இம்யூனிட்டி ஹெல்த்தி வழிகாட்டி

nathan

தாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan