28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
6 1524202252
ஆரோக்கிய உணவு

வாழைப்பழம் எடையைக் குறைக்குமா? கூட்டுமா?அப்ப உடனே இத படிங்க…

நாம் வாழ்க்கையில் பல குழப்பமான விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறோம். சில பொருட்களை பயன்படுத்துவதற்கான சரியான காரணம் தெரியாமல் இருந்து வந்திருக்கிறோம். எலும்பும் தோலுமான ஒருவரை பார்க்கும்போது, வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிட்டால் விரைவில் குண்டாக மாறலாம் என்று கூறுவோம். குண்டாக இருப்பவர் டயட்டில் இருக்கும்போது, ஊட்டச்சத்து நிபுணர் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுமாறு கூறுவார். ஆக, எடை அதிகரிக்கவும் வாழைப்பழம், எடை குறைக்கவும் வாழைப்பழம், என்ன தலை சுற்றுகிறதா? வாழைப்பழம் சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா அல்லது எடை குறையுமா என்பது ஒரு மாயமாகவே உள்ளது.

சரி, விளக்கத்திற்கு இப்போது வருவோம். வாழைப்பழத்தால் எடை குறைக்கவும் செய்ய முடியும். எடையை அதிகரிக்கவும் செய்ய முடியும். இரண்டு விஷயங்களிலுமே வாழைப்பழத்தை நம்பி கையில் எடுக்கலாம். எடை குறைப்பா அல்லது அதிகரிப்பா என்பது நாம் உண்ணும் வாழைப்பழத்தின் எண்ணிக்கையில் உள்ளது.

வாழைப்பழத்தைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் இருந்தால் தானாகவே உங்கள் எடை குறையும். நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுடன் சேர்த்து ஐந்து அல்லது ஆறு வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது உங்கள் எடையை அதிகரிக்கும். எப்படி சாப்பிட்டாலும், வாழைப்பழம் என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒரு உணவுப் பொருள்.

ஆயுர்வேத வழியில் வாழைப்பழம் தினும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரின் தேவை இருக்காது என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. ஆனால் ஆயுர்வேதம் சொல்வது வேறு ஒன்று. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்களிடம் எந்த ஒரு நோயும் நெருங்காது என்று கூறுகிறது ஆயுர்வேதம்.

ஆயுர்வேதத்தின் படி, வாதம் மற்றும் பித்தத்தை சீராக்க வாழைப்பழம் உதவுகிறது. ஆனால் செரிமானம் ஆகாத வாழைப்பழம், கபத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வாதம் , கபம் , பித்தம் என்ற மூன்று தோஷங்களையும் சீராக வைக்க வாழைப்பழம் உதவுகிறது என்று சுஸ்ருத சம்ஹிதா மற்றும் வஸ்து குண தீபிகா என்ற ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. இதனால் உடல் குளிர்ந்த நிலையில் இருக்கிறது. உடல் பருமனைக் குறைக்க வாழைப்பழம் உதவுகிறது என்பது மற்றொரு சுவாரஸ்யமான தகவல். அதே சமயம், தசைகளை பலமாக்கவும், வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள், வாழைப்பழம் சாப்பிடுவதால், ஹீமோக்ளோபின் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

எடை குறைப்பு ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரிகள் உள்ளன. இவை 18 கிராம் கார்போஹைட்ரேடிற்கு சமம் ஆகும். உடல் உறுப்புகள் சீராக செயலாற்ற கார்போ ஹைட்ரேட் மிகவும் அவசியம். அதே சமயம் அதிகரித்த கார்போ சத்து, உடல் எடையை அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் வைட்டமின்கள், மினரல்கள், மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (பேசிக் மெட்டபாலிக் ரேட்- பி எம் ஆர்) மேம்படுகிறது. அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும்போது, உடல் எடை தானாக குறைகிறது. சாதாரணமாக உடல் எடை குறையும் நேரத்தை விட மிகவும் விரைவாகக் குறைகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பெக்டின் என்ற கூறு, நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வைத் தருகிறது.

ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் குறைந்த க்ளைகமிக் குறியீடு உள்ளது. இதனால் உடல் எடை குறைப்பிற்கு இது உதவுகிறது. பெரும்பாலான பழங்களில் வைட்டமின் பி 6 இருப்பதில்லை. ஆனால் வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி 6 , கடுமையான உடற் பயிற்சிக்கு பிறகும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வைட்டமின் பி 5 மற்றும் போலிக் அமில குறைப்பாடு, இதய தொடர்பான நோய்களை தோற்றுவிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் இதய நோய் தடுக்கப்படுகிறது . உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வரலாம்.

உணவுகளை ஜீரணிக்க குடலுக்கு தேவைப்படும் நேரத்தை குறைப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டை வேகப்படுத்துகின்ற என்சைம்களை வாழைப்பழங்கள் கொண்டிருக்கின்றன. இது எடை இழப்புக்கு மிகவும் பொருத்தமான வளர்சிதை மாற்றத்தைக் கொடுக்கின்றது . வாழைப்பழம் இனிப்பு சுவையைக் கொண்டிருப்பதால் நாவில் உள்ள சுவை மொட்டுக்கள் இந்த பழத்தை எடுத்துக் கொள்வதால் ஒரு வித திருப்தியை உணர்கின்றன. இத்தகைய குணங்களைக் கொண்டதால் வாழைப்பழம் உடல் எடை குறைப்பு அட்டவணையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

எந்த வகைகள் சாப்பிடணும்? விரைவான எடை குறைப்பிற்கு சில வித வாழைப்பழங்கள் அதிகமாக உதவுகின்றன. பேபி வாழைப்பழம் என்று அழைக்கப்படும் சிறிய வாழைப்பழங்கள் விரைந்து எடை குறைப்பில் செயல்படுகின்றன. இவை அமெரிக்காவில் அதிகமாகக் கிடைக்கும். இவற்றில் வைட்டமின் பி 6 மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். பர்ரோ வாழைப்பழம், காவெண்டிஷ் வாழைப்பழம், சிவப்பு வாழைப்பழம், மற்றும் ப்லண்டையின் வாழைப்பழம் போன்ற வகை வாழைப்பழங்கள் எடை குறைப்பிற்கு உதவுகின்றன. இவை உலகின் பல நாடுகளில் கிடைத்தாலும், அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

எடை அதிகரிப்பு வாழைப்பழத்தில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இவை எடை அதிகரிப்பிற்கு பல காலங்களாக பரிந்துரைக்கப்படுகிறது. 6 இன்ச் வாழைப்பழத்தில் 90-95 கலோரிகள் உள்ளன. ஒரு சிறிய இனிப்பை எடுத்துக் கொள்ளும்போது கிடைக்கும் கலோரிகளை விட இது மிகவும் குறைவானதாகும். ஸ்மூதி அல்லது மில்க் ஷேக் போன்ற விதத்தில் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி 6 அதிகமாக இருப்பதால், இவை உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இதனால் ஆரோக்கியமான இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் அதிகம் உள்ள மாங்கனீஸ், செரிமானத்தை ஊக்குவிக்கிறது. குடல் இயக்கங்களைச் சீராக்குகிறது மற்றும் எலும்பு நோய்களைத் தடுக்கிறது. வாழைப்பழத்தில் காணும் மற்றொரு முக்கியமான மூலப்பொருள் பொட்டாசியம் . இந்த பிரபலமான பழத்தில் பொட்டாசியம் உள்ளடக்கம் மிகவும் அதிகமாக உள்ளது, இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளில் இவை பெரிதும் உதவுகின்றன மற்றும் அணுக்களில் ஆற்றலின் உற்பத்திக்கு உதவுகின்றன. உடலின் தினசரி பொட்டாசியம் தேவையின் 10% ஒரு பெரிய வாழைப்பழம் பூர்த்தி செய்கிறது.

எப்படி அதிகரிக்கிறது? வாழைப்பழங்கள் மூலமாக எடை அதிகரிக்க வேண்டும் என்றால், முழு வாழைப்பழங்களாக நிறைய எண்ணிக்கையில் உட்கொள்ள வேண்டும். அப்படி செய்தாலும், உடலின் செயலாற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பொறுத்தே உடல் எடை அதிகரிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் சாப்பிடும் வாழைப்பழங்கள், உடலுக்குள் சென்றவுடன் அதில் இருக்கும் இயற்கை சர்க்கரை அல்லது கார்போஹைட்ரேட் , உடனடியாக க்ளுகோசாக உடைந்து விடுகின்றன.

உடல் செயல்பாடுகளுக்கு ஆற்றலைத் தர, க்ளுகோஸ் உதவுகிறது. தேவைக்கு அதிகமான க்ளுகோஸ், கல்லீரல் மற்றும் தசைகளில் க்ளைகொஜெனாக சேமித்து வைக்கப்படுகிறது. தேவை ஏற்படும்போது சேமித்து வைக்கப்பட்ட க்ளுகோஸ் பயன்படுத்தப்படுகிறது. சேமிப்பு அளவைத் தாண்டி க்ளைகொஜென் சேமிக்கப்படுபோது அவை கொழுப்பாக மாற்றம் பெறுகிறது. ஒரு நாளில் 5 அல்லது 6 க்கு மேற்பட்ட வாழைப்பழங்களை சாப்பிடக் கூடாது என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் மலச்சிக்கல் ஏற்படலாம் அல்லது குடல் இயக்கம் பாதிப்படையலாம்.

சாப்பிட சிறந்த முறைகள் மற்ற பழங்களுடன் சேர்த்து பழ சாலட் போல் சாப்பிடலாம். வாழைப்பழத்தின் மேல், சிறிது கருப்பு உப்பைத் தூவி, அதன் சுவையை அதிகரிக்கச் செய்யலாம். குறைந்த கொழுப்பு யோகர்டுடன் வாழைப்பழத்தைச் சேர்த்து ஸ்மூதி செய்யலாம். வாழைப்பழத்தை வெட்டி, மசித்து சான்ட்விச்சுடன் சேர்த்து சாப்பிடலாம். இப்படி பல வழிகளில் சாப்பிட மற்ற எந்த பழங்களை விடவும் வாழைப்பழம் தான் பொருத்தமாக இருக்கும்.

வாழைப்பழ ஷேக் ரெசிபி 1 – 2 வாழைப்பழம் 1/2 – 1 கிளாஸ் பால் சர்க்கரை (தேவைபட்டால்) வெனிலா சாறு ஐஸ் க்ரீம் (தேவைப்பட்டால்) 4-5 பாதாம்

செய்முறை: ஒரு ப்ளெண்டரில் நறுக்கிய வாழைப்பழம், பால் மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும். ஐஸ் கிரீம் ஒரு கரண்டி சேர்க்கவும். பாதாமைச் சேர்க்கவும். இந்த கலவையை கெட்டியான சாறு போல் வரும்வரை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு க்ளாசில் ஊற்றி தேவைபட்டால் சர்க்கரை சேர்த்து பரிமாறவும். பல்வேறு ஐஸ்க்ரீம் ப்லேவரை சேர்த்தும் இதனைச் செய்யலாம். உலர் திராட்சை, வால்நட், , முந்திரி போன்ற உலர் பழங்கள் சேர்த்தால் இதன் சுவை இன்னும் அதிகரிக்கும். மேலும் ஊட்டச்சத்தும் அதிகரிக்கும். வாழைப்பழத்தை உலகமே உண்ணுவதற்கான காரணங்களை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.

6 1524202252

Related posts

சூப்பர் டிப்ஸ்- இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.

nathan

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி….!

nathan

உங்களுக்கு தெரியுமா உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…பிளாக் டீ குடிப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

டயாபடீக் டிரிங்க்… ஹேர் கண்டிஷனர்… பலவித பலன்கள் தரும் வெண்டைக்காய்!

nathan

சுவையான வல்லாரை கீரை சாம்பார்

nathan

சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்ய…!

nathan

மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும் உணவுகள்!!!

nathan

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி!

nathan