29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
pic
மருத்துவ குறிப்பு

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஆரோக்கியமான பற்களுக்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

உங்கள் சிரிப்பு ஆரோக்கியமானதாகவும் பிரகாசமாகவும் இருக்க உங்கள் வாய் வழி சுகாதாரம் மிகவும் முக்கியமானது. பெரிய தன்னம்பிக்கையுடன் வாழ்வின் உயரத்தை தொட ஆரோக்கியமான பற்கள் பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான பற்கள் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை விதைக்கிறது. ஆரோக்கியமான பற்கள் மூலம் உங்கள் வாய் மட்டும் அல்ல உங்கள் மொத்த உடலும் ஆரோக்கியமடைகிறது. அதிர்ஷ்ட வசமாக உங்கள் முத்து போன்ற பற்களை

ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில குறிப்புகள் உண்டு. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டு முறை பல் துலக்குங்கள் :

தினசரி பற்களை பாதுகாக்க ஒரு முக்கியமான வழி, தினமும் பல் துலக்குவது. பற்களும் ஈறுகளும் சேரும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் ஈரல் நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. பற்களின் மேல்பரப்பை சுத்தமாக வைத்துக் கொள்வதால் கிருமிகள் வராமல் தடுக்கப்படுகிறது.

ஒரு நாளில் 2 முறை மென்மையான ரோமங்களை கொண்ட பிரஷால் பல் துலக்குவதால் உங்கள் வாய் சுகாதாரம் காக்கப்படுகிறது என்று அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன் தெரிவிக்கிறது. மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் பிரஷை மாற்றுவதும் பரிந்துரைக்கப்படுகிறது.

சரியான பற்பசையை தேர்ந்தெடுக்க வேண்டும்:

இன்றைய நாட்களில், பற்பசை வாங்கச் செல்பவர்களுக்கு எந்த பற்பசையை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. உங்கள் பற்களுக்கு ஏற்ற பசையை தேர்ந்தெடுத்து வாங்குவது உங்கள் பற்களுக்கு நன்மையை தரும். சென்சிடிவ் பற்கள் உடையவர்கள் பற்கூச்சத்தை தடுக்கும் பற்பசையை வாங்குவது நல்லது. சாதாரண பற்பசையை அவர்கள் வாங்குவதால் அவர்களுக்கு பற் கூச்சத்தில் இருந்து தீர்வு கிடைக்காது. அதுவே பர்கூச்சத்தை தடுக்கும் பற்பசை அவர்களின் பற்களை பாதுகாக்க உதவுகிறது.

பல்நாடா :

பல் துலக்க பிரஷ் பயன்படுத்துவது போல், ஒரு மெல்லிய நூலைக் கொண்டு பற்களுக்கு இடையில் சுத்தம் செய்வதையும் பழக்கப்படுத்த வேண்டும். இதனால் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. பிரஷ் சுத்தப்படுத்த முடியாத இடங்களையும் இந்த மெல்லிய நூல் சுத்தம் செய்கிறது. உணவு துகள்கள் பற்களில் படிந்திருப்பதை இவை போக்குகின்றன. ஒரு நாளைக்கு ஒரு முறை மெல்லிய நூல் அல்லது நாடாவால் பற்களை சுத்தம் செய்ய அமெரிக்க டென்டல் அசோசியேஷன் கூறுகிறது.

சர்க்கரை :

ஒவ்வொரு பருவத்திலும் ஆரோக்கியமான உணவு பழக்கம், பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதிலும், சர்க்கரை அல்லது இனிப்பு உணவுகள் பற்கள் அழுக காரணமாக உள்ளன என்று அறியப்படுகிறது. நாம் உண்ணும் இனிப்புகளை கிருமிகள் உடைக்கும்போது, அதிக அளவு அமிலம் சுரக்கப்பட்டு, பற்களின் எனாமலை தேயச் செய்கின்றன.. இதனால் பற்கள் அழுகும் நிலை உண்டாகிறது. ஆகவே அதிக அளவு சர்க்கரை அல்லது அமிலம் உள்ள பானங்களை பருகுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பல் மருத்துவர்:

பல் தொடர்பான பிரச்சனைகள் ஆழமாக செல்லும் வரை எந்த ஒரு அறிகுறியும் ஏற்படுவதில்லை. ஆகையால் 3-6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதால் ஈறு தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. ஈறு பிரச்சனைகள் வாய் புற்று நோய்க்கு அறிகுறியாக இருக்கலாம்.pic

Related posts

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா முதுகுவலியை நிரந்தரமாக விரட்டும் பூண்டுப்பால்… செய்வது எப்படி?

nathan

இதயத்தை இயக்கும் துணை அமைப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்

nathan

ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் -தெரிஞ்சிக்கங்க…

nathan

மூலிகை இல்லம் – 12 பார்வையை கூர்மையாக்கும் ஜூஸ்!

nathan

கசகசாவில் இருக்கும் வியக்கத்தக்க டாப் 5 மருத்துவ குணங்கள்!!!

nathan

மூலம் – நிர்மூலமாக்கும் சித்த மருந்துகள்

nathan

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்

nathan