மருத்துவ குறிப்பு

காலையில் காபி குடித்தால் தான் மலம் வருகிறதா? அதற்கான காரணம் இவை தான்!!!

நிறைய பேர் காலை வேளையில் காபி குடிப்பதே "வெளிக்கு" செல்ல தான். ஏனோ, அவர்களுக்கு காபி குடிக்காமல் மலம் கழிக்க வராது. ஆனால், என்ன அதிசயமோ, காபி குடித்த சில வினாடிகளில் கழிவறைக்கு ஓடிவிடுவார்கள். நம்மில் நிறைய பேருக்கு கூட இந்த வழக்கம் இருக்கும். பெரும்பாலும் ஆண்களுக்கு தான் இந்த பழக்கம் என்பது ஒருபக்கம் இருந்தாலும். ஏன், எப்படி என்ற கேள்வி எழுகிறது.

பல வீடுகளில் அம்மாக்களுக்கும், மனைவிகளுக்கும் இது புரியாத புதிராக இருக்கும். இந்த புதிருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. ஆம், உண்மையில் இது ஒரு அறிவியல் சார்ந்த விஷயம்…..

வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கிறது காபி பொதுவாகவே காபி குடித்தால் மனநிலை அதிகரிக்கும் என கூறுவார்கள். உண்மையில் இது வயிற்றில் அமிலத்தையும் சேர்த்து அதிகரிக்கிறது என்பது தான் நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்த உண்மை.

காப்ஃபைன் தான் காரணம் காபியில் காப்ஃபைன் இருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இந்த காப்ஃபைன் தான், மலமிளக்க தன்மையை தூண்டுகிறதாம். பத்தில் மூன்று நபர்களுக்கு இவ்வாறு நடக்கிறதாம்.

ஆச்சரியம் ஆனால், ஆராய்ச்சியில் காப்ஃபைன் நீக்கப்பட்ட காபியிலும் கூட மலமிளக்க தன்மையை தூண்டும் திறன் இருக்கிறது என கூறுகிறார்கள்.

டயட் கோக் டயட் கோக்கிலும் கூட காப்ஃபைன் அளவு இருக்கிறது ஆனால், டயட் கோக் குடிப்பதால் இந்த மாற்றம் ஏற்படுவது இல்லை.

அமெரிக்க கெமிக்கல் சமூகம் இதுக் குறித்து அமெரிக்க கெமிக்கல் சமூகம், இணையத்தில் ஓர் காணொளிப்பதிவு வெளியிட்டுள்ளனர். இதில், காபி குடிப்பதால், வயிற்றில் அதிகரிக்கும் அமிலம், வயிற்றில் இருந்து குடலுக்கு கழிவு பொருள்களை அழுத்தம் தந்து நகர்த்துகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தான் மலமிளக்க உணர்வு ஏற்படுகிறது.

க்ளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid) காபியில் இருக்கும் மற்றொரு மூலப்பொருளான க்ளோரோஜெனிக் அமிலமும், வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்கிறதாம். இது, வயிற்றில் குவிந்திருப்பவற்றை குடலுக்கு நகர்த்த அழுத்தம் தருகிறதாம். இதனாலும் கூட மலமிளக்க தன்மை ஏற்படுவதாய் அந்த காணொளிப்பதிவில்

நான்கு நிமிடத்தில்
இந்த மலமிளக்க நிகழ்வு, காபி குடித்த நான்கு நிமிடத்தில் நடப்பதாய், ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். காபி குடித்த நான்கு நிமிடத்தில் உங்கள் பெருங்குடலில் இம்மாற்றம் ஏற்பட்டு, மலமிளக்க தன்மை உண்டாகிறதாம்.

முழு சாப்பாட்டிற்கு சமமானது ஓர் முழு சாப்பாட்டை ஒருவர் தனியாளாக சாப்பிட்டால் வயிற்றில் எந்த அளவிற்கு ஓர் அழுத்தம் ஏற்படுமோ, அந்த அளவிற்கான அழுத்தம் காபி குடித்த நான்கு நிமிடத்தில் ஏற்படுகிறது என கூறுகிறார்கள்.

ஆயிரம் வகையான பொருள்கள் நாம் குடிக்கும் காபியில் ஆயிரம் வகையான கலவைகள் இருக்கின்றனவாம். அவற்றில் ஒரு சில மூலப்பொருள்கள் தான் இந்த மலமிளக்க தன்மையை தூண்டுகிறது.

செரிமானத்திற்கும் உதவுகிறது காபி காபி, நமது உடலில் இருக்கும் வாயு மற்றும் செரிமானம் சம்மந்தப்பட்ட ஹார்மோன்களை தூண்டி, உணவை செரிக்க வைக்கவும் உதவுகிறது.

12 1439366526 10

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button