26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 1524052451
ஆரோக்கிய உணவு

மருத்துவர் கூறும் தகவல்கள் உண்மையாவே பலாப்பழம் கேன்சருக்கு நல்லதா?

 

பலாப்பழம் என்றால் உங்களுக்குக் கொள்ளைப் பிரியமா?… பெரும்பாலும் பலாப்பழத்தைப் பிடிக்காதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முக்கனிகளில் மிகவும்இனிப்பான கனி. ஒருவேளை உங்களுக்கு பலாப்பழம் பிடிக்காதென்றால், தயவுசெய்து உடனே அந்த முடிவை மாத்திக்கோங்க… பலாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஆற்றலும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. அதோடு நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு அதில் ஆரோக்கியம் இருக்கிறது. அதனால் பலாப்பழ சீசன் வந்தால் கட்டாயம் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.

பலாப்பழம் கதகல், சக்கைப்பழம், பலாப்பழம், ஹலசினா ஹன்னு என இந்திய மொழிகளில் வேறுவேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த பலாப்பழம் பெரும்பாலானோரின் ஃபேவரட் பழமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பலாப்பழம் பார்த்ததுமே நம்மை மஞ்சள் நிறத்தில், உள்ளே பிரௌன் நிறத்தில் ஒரு மீடியம் சைஸ் விதையோடு இருக்கும். இந்த பலாக்கொட்டை இந்தியா முழுக்க சீசுனின் போது, சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புற்றுநோய் பலாப்பழமும் அதன் கொட்டையும் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்று ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் என்பது மிக்க கொடிய நோய் என்பது நமக்குத் தெரியும். ஒருமுறை புற்றுநோய் செல்கள் வந்துவிட்டால், அவை அதோடு நின்றுவிடாமல் பல ஆயிரக்கணக்கான செல்களாக வளர்ந்து பரவ ஆரம்பித்துவிடும். அதனால் உண்டாகும் விளைவுகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் பெரும் வேதனையைத் தரக்கூடியதாக இருக்கும். அதோடு இந்த புற்றுநோய் செல்கள் ஹார்மோன்களையும் திசுக்களையும் கூட அழிக்க ஆரம்பித்துவிடும்.

சந்தேகம் பலாப்பழம் புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கும் என்று சொன்னால் நம்மில் பல பேர் அதை நம்புவதில்லை. அதெப்படி பலாப்பழம் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கிறது என்ற கேள்வியும் சந்தேகமும் உண்டாகிறது. ஆனால் உண்மையிலேயே பலாப்பழத்திலும் அதன் கொட்டையிலும் கேன்சரைத் தாக்கி அழிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. சில கடினமாக, தீர்க்க முடியாத கேன்சர் செல்களைக் கூட பலாப்பழத்தால் மிக எளிதாக அழித்துவிட முடியுமாம். அவை பற்றிய சில உண்மைகளை இப்போது பார்க்கலாம்.

உண்மை 1 பலாப்பழத்தில் ஏராளமான இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பைட்ரோ நியூட்ரியன்கள் உள்ளன. அவை இயற்கையாகவே புற்றுநோய் வராமலும் புற்றுநோய் செல்கள் அதிகமாகப் பரவாமலும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

உண்மை 2 பலாப்பழத்தில் ஏராளமான இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பைட்ரோ நியூட்ரியன்கள் உள்ளன. அவை நம்முடைய ரத்தத்தின் நிலையை சமநிலைப்படுத்து, முறையாக சுத்தம் செய்கிறது. தட்பவெப்பநிலையை சீராக வைத்து, புற்றுநோய் கள் பரவுவதற்கான தட்பவெப்பநிலையை எட்ட விடாமல் தடுக்கிறது

உண்மை 3 சிலரோ சில நாள் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இது கட்டுக்கதை என்று சொல்வார்கள். ஆனால் இது மிக மெதுவாகத் தான் கேன்சர் செல்களை அழிக்கத் துவங்கும். ஆனால் நிரந்தரமாக அந்த செல்களை வளரவிடாமல் தடுத்துவிடும். குறிப்பாக, பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது

உண்மை 4 பலாப்பழத்தில் நார்ச்சத்து மிக அதிகம். இது உடலில் உள்ள டாக்சின்களையும் அழித்து உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. எப்போது உங்களுடைய உடல் டாக்சின்கள் இல்லாத சுத்தமான உடலாக இருக்கிறதோ அப்போ கேன்சர் உண்டாகும் வாய்ப்பே வராது

உண்மை 5 பலாப்பழத்தில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் நிரம்பியிருக்கின்றன. அவை செல்களை சிதைவடையாமல் பார்த்துக் கொள்வதால், கேன்சர் உண்டாவது தடுக்கப்படுகிறது

உண்மை 6 பலாப்பழத்தில் சப்போனின் என்னும் மூலக்கூறு மிக அதிகமாகக் காணப்படுகிறது. இந்த சப்போனினில் உள்ள மூலக்கூறுகளால் கோலன் கேன்சர் வராமல் தடுக்க முடியும்.

உண்மை 7 பலாப்பழத்தில் பல்வேறு விட்டமின்களும் மினரல்களும் நிரம்பியிருக்கின்றன. அவை உங்கள் உடலை வலிமையாக்குவதோடு, நோயெதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. அதனால் புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் மேலும் வளர்ச்சியடையாமலும் தடுக்க முடியும். அதனால இப்போ தான் சீசன் ஆரம்பிச்சிடுச்சே… தினமும் 4 பலாச்சுளையும் அப்பப்போ பலாக்கொட்டையில் ஏதாவது சமையலும் செய்து ருசியா சாப்பிடுங்க. கேன்சரிலிருந்து பாதுகாப்பா இருங்க.1 1524052451

Related posts

குழந்தைகளின் உடல் நலனை பாதுகாக்கும் இந்த பொடி பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan

கம்பு, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது -எப்படி செய்வது தெரியுமா?

nathan

நீங்கள் நீண்ட காலத்திற்கு பால் பொருட்களைத் தவிர்க்கும்போது உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்?

nathan

தெரிந்துகொள்வோமா? யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது? பப்பாளி சாப்பிடும் போது செய்யக் கூடாதவைகள் என்ன தெரியுமா?

nathan

சாப்பிடக்கூடாத காய்கறிகள் என்னென்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளையெல்லாம் நீங்க தள்ளி வச்சுடுங்க!!

nathan

காபி குடிக்கும் போது இந்த பொருட்களை தெரியாமல் கூட சாப்பிட்ராதீங்க! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு!கல்லீரல் கோளாறுகளுக்கு சிறந்த பீட்ரூட் சூப்.

nathan

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!!

nathan