29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
20180120 210026
மருத்துவ குறிப்பு

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க!சூப்பர் டிப்ஸ்…

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க…
அப்புறம் பாருங்க நடக்கின்ற அற்புதத்தை..!

கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, கோலைன், விட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

கொய்யா இலையின் டீயின் மருத்துவ நன்மைகள்!

கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வந்தால், அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, மூக்கு அழற்சிகளை குணமாக்குகிறது.

கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.

கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்துகிறது.

30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.

கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்குகிறது.

எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அதை வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தீராத வயிற்று வலி குணமாகும்.

கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதை உணரலாம்.

மறக்காமல் எங்களின் இந்த முகனூல் பக்கத்திற்கு தங்களின் மதிப்பீட்டை (Rating) வழங்கிடுங்கள், இன்னும் உங்களுக்கு நல்ல சேவை புரிந்திட இது எங்களுக்கு மிகவும் உதவும்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி20180120 210026

Related posts

காதல் பார்வை பற்றி பெண்களின் கருத்து

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…உயர் ரத்த அழுத்த ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

ஆண்களை விட பெண்கள் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான 9 காரணங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்கள் தினமும் செய்யும் இந்த செயல்கள் விந்தணுவை அழிக்கும் tamil medical tips

nathan

கருப்பட்டி வெல்லம் செய்யும் அற்புதங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க… கருப்பை புற்றுநோயாக இருக்கலாமாம்!

nathan

கட்டியோ கழலையோ காணப்பட்டால் கவனம்!

nathan

மனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி? மனநல நிபுணர்

nathan