25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tmpooja jaggry online mega pooja store
ஆரோக்கிய உணவு

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சூப்பர் டிப்ஸ்…

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்துகொள்வதால் கிடைக்கும் நன்
கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்து வந்தால் இடுப்பு வலிப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும். சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம்.

சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

நாம் உண்ணும் எளிதில் செரிமானம் ஆக உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியை சிறிது உட்கொண்டால் செரிமானம் எளிதில் நடைபெறச் செய்யும்.

அதுவும் கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சீராக நடைபெற்றால், குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும்.

குப்பமேனிக் கீரையுடன் கருப்பட்டியை சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல் நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். கருப்பட்டி கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். மேலும் கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி சுத்தம் செய்ய உதவும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.tmpooja jaggry online mega pooja store

Related posts

உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானதுதானா?

nathan

சூப்பர் டிப்ஸ்! இந்த ஒரு பொருள் வீட்டில் இருக்கும்போது நீரிழிவு வியாதி பத்தி கவலைப்படலாமா?

nathan

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

இது சத்தான அழகு

nathan

சுவையான பேசன் ஆம்லெட்

nathan

5 நிமிட கஞ்சி….. யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்!

nathan

ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

nathan

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களை அடிக்கடி வாங்குபவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கொழுப்பு, உடல் எடை குறைக்கும்… கொள்ளு தரும் 8 அபார மருத்துவப் பலன்கள்!

nathan