25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
breakfast 07 1507366934
ஆரோக்கிய உணவு

உங்கள் கவனத்துக்கு காலை உணவை புறக்கணிப்பதால் உண்டாகும் ஆபத்து என்ன தெரியுமா?

இன்றைய அவசர யுகத்தில் எல்லா வேலைகளையும் நாம் மாலை வேலைகளுக்கு அல்லது விடுமுறை நாட்களுக்கு ஒத்தி போடுகிறோம். பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, உடற்பயிற்சி செய்வது, கடைக்கு போவது என்று எந்த வேலையையும் காலையில் செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. நீண்ட தூரம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால், கிளம்புவதற்கான ஆயத்த பணிகள் ஏராளம் இருப்பதால் பல காலை வேலைகளை புறக்கணிக்கிறோம். இவற்றுள் முக்கியமான ஒன்று காலை உணவு. காலை உணவை புறக்கணிப்பது ஆபத்தான விளவை உண்டாக்கும். இதனை பற்றியது தான் இந்த தொகுப்பு

சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியின் முடிவு ஒன்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு மற்றும் வாத நோயின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. காலை உணவை தவிர்க்கும் பெரியவர்களுக்கு தமனியில் அடைப்பு ஏற்படுவதற்கான இரண்டு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று அறியப்படுகிறது. இதனை தமனி தடிப்பு என்று கூறுகின்றனர். இரத்தம் மற்றும் ஆக்சிஜென் ஓட்டத்தை இது குறைக்கிறது.

தொடர்ச்சியாக காலை உணவை புறக்கணிக்கிறவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையும் ஆரோக்கியமற்றதாக விளங்குகிறது . ஆகவே இந்த பழக்கத்தை மாற்றும்போது இதய நோய் மற்றும் பல நோய்கள் வரும் ஆபத்து தவிர்க்கப்படுகிறது. இதய நோய், சிறுநீரக கோளாறு போன்ற நாட்பட்ட வியாதிகள் இல்லாத ஆண் மற்றும் பெண்களை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களின் உணவு பழக்கங்கள், காலை உணவு முறைகள் போன்றவற்றை, அவர்கள் எடுத்துக் கொள்ளும் எனர்ஜி அளவை கொண்டு அளவிடப்பட்ட ஒரு வினா பட்டியல் தயாரிக்கப்பட்டது. விடைகளின் படி மூன்று தனி குழுக்கள் பிரிக்கப்பட்டது.

5% குறைவாக காலை உணவை எடுத்துக் கொள்ளும் ஒரு குழு, இவர்கள் காலை உணவை புறக்கணிப்பவர்கள். 20% மேல் காலை உணவை எடுத்துக் கொள்ளும் ஒரு குழு. இவர்கள் காலை உணவை எடுத்துக் கொள்பவர்கள். 5% முதல் 20% வரை காலை உணவை எடுத்துக் கொள்ளும் ஒரு குழு.இவர்கள் குறைந்த ஆற்றல் கொடுக்கக்கூடிய காலை உணவை எடுத்துக் கொள்பவர்கள் என்று பிரிக்கப்பட்டனர்.

மொத்தம் 4052 பேர் கலந்துகொண்டதில் 2.9 % காலை உணவை புறக்கணிப்பவர்கள், 69.4% குறைந்த ஆற்றல் காலை உணவை எடுத்து கொள்கிறவர்கள். 27.7% சரியான காலை உணவை எடுத்துக் கொள்கிறவர்கள். தமனி தடிப்பு ஏற்படும் வாய்ப்பு காலை உணவை சரியாக எடுத்துக் கொள்பவர்களை விட மற்ற குழுவினருக்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்டியோ மெட்டபாலிக் அபாயம் இதே குழுக்களுக்கு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு இருந்தது.

காலை உணவை தவிர்ப்பவர்கள் பெரும்பாலும், அதிக எடையுடன் , உயர்த்த இரத்த அழுத்தத்துடன், அதிகமான க்ளுகோஸ் அளவுடன், இருந்தனர். அவர்களின் மொத்த உடல்நலத்தில் பல்வேறு குறைகள் தென்பட்டன. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்களும் கொண்டிருந்தனர்.

இந்த ஆய்வுகள் ஆதார பூர்வமாக ஒரு விஷயத்தை உறுதி செய்கின்றன. காலை உணவை புறக்கணிப்பவர்ளுக்கு இதய நோய் ஏற்படும் என்பது நேரடி உண்மை. அவர்களின் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் தமனி தடிப்பு அதிகரிக்கப்படுவது மறைமுக மாற்றமாகும்.

காலை உணவை புறக்கணிக்கும் நடுத்தர வயதினருக்கு உடல் பருமன் ஏற்படுவதாகவும் இதய சம்மந்தமான நோய்கள் உண்டாவதும் நிரூபிக்கப்பட்டது. சிறு வயதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் கெட்ட உணவு முறைகளில் மாற்றம் ஏற்படாவிடில் வயது அதிகரிக்கும்போது பல தீங்குகள் உடலுக்கு ஏற்படும். சிறு குழந்தைகள் காலை உணவை புறக்கணித்து சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்வதால் இன்று பல குழந்தைகள் உடல் பருமனுடன் இருக்கின்றனர்.

உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவை தவிர்ப்பவர்கள் நாளின் இறுதியில் பசியின் தாக்கத்தால் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஹார்மோன் சமசீரற்ற தன்மை ஏற்படுகிறது. இதனால் ஒரு நாளின் சுழற்சி பாதிக்கப்படுகிறது. ஆகவே காலை உணவு என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்பதை மனதில் கொண்டு இனியும் காலை உணவு புறக்கணிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்போம்.breakfast 07 1507366934

Related posts

இதோ எளிய நிவாரணம்! மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் நார்ச்சத்து உணவுகள்

nathan

சூப்பரான வெங்காய ஊறுகாய்

nathan

எச்சரிக்கை! இதெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாதா..?

nathan

கிரீன் டீ எடை குறைக்குமா ?

nathan

நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள்!!

nathan

வெள்ளரி…உள்ளே வெளியே

nathan

எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா?

nathan

எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்? 10 காரணங்கள்

nathan

வறுத்து அரைச்ச முட்டை குழம்பு -கேரளா ஸ்டைல்

nathan