25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
admin panel image a6b12806 57f1 4b5f b6e6 5b12d00027e9 1513947476368
தலைமுடி சிகிச்சை

நீங்கள் தொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம்.

40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது.சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும் மற்றொரு காரணமாக உள்ளது.

சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது.

தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.

தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.

தொடர்ந்து டை அடிப்பதால், சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும்.

பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். “தலைமுடி சாயம்” உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய தலைமுடி சாயம் பாக்கெட்டுடன் மருத்துவரை சந்திக்கவேண்டியது அவசியம்.

ஹேர் டை உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம். எனவே இயற்கை முறையிலான டை வகைகளை பயன்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது நன்மை பயக்கும்.

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்……admin panel image a6b12806 57f1 4b5f b6e6 5b12d00027e9 1513947476368

Related posts

முகத்தில் உள்ள பரு,அம்மை தழும்புகள் நீங்க சில டிப்ஸ்

nathan

முடி வேகமாக வளர தயிரோடு ‘இந்த’ பொருட்களை சேர்த்து தயாரிக்கும் பேஸ்டை யூஸ் பண்ணுங்க…!

nathan

தலைமுடி உதிர்வு காரணங்கள்… தீர்வுகள்?

nathan

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.

sangika

ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க சூப்பர் டிப்ஸ்!

nathan

ஏன் இளமையிலேயே தலையில் வழுக்கை விழுகிறது என்று தெரியுமா?

nathan

மோசமான கூந்தல் அமைப்பா? முடி உதிர்தலா? மயோனைஸ் ரெசிபி ட்ரைபண்ணுங்க!!

nathan

பொடுகு தொல்லையை எளிமையாக இயற்கை முறையில் போக்கும் வழிகள் – தெரிந்துகொள்வோமா?

nathan

முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்!!!

nathan