வீட்டை எவ்வளவு அழகுபடுத்தியிருந்தாலும் வீட்டில் நல்ல வாசனை எதுவும் இல்லை யென்றால் அது எவ்வளவு செலவு செய்து அழகுபடுத்தியிருந்தாலும் வீணாகிவிடும். வீட்டை எப்போதும் வாசனையாக வைத்துக் கொள்ள இதோ சில குறிப்புகள்.
நல்ல வீட்டு உபயோகப் பொருட்களும் அழகான, புதுமையான அலங்காரங்களும் மட்டுமே ஒரு சிறந்த வீட்டிற்கான தோற்றத்தைத் தந்துவிடாது. நன்கு வடிவமைக்கப்பட்ட வீடானது அழகான தன்மையுடன் பிறரைக் கவரும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வீட்டை பிறர் ஈா்க்கும் வகையில் வைப்பதற்கு வாசனை என்பது முக்கியம்.
உங்களுடைய வீட்டை அழகாக வைத்துக் கொள்வதில் அவற்றை வாசனையாக வைத்துக் கொள்வதற்கும் தனி இடமுண்டு. ஆயில் டிப்யூஸர்களில் தண்ணீரை நிரப்பி அதில் உங்களுக்குப் பிடித்த மணமுடைய வாசனை திரவியத்தை இரண்டு துளிகள் விட்டுக் கலக்கவும். அவற்றை அப்படியே திறந்து வைத்தால் அவை காற்றோடு கலந்து வீடு முழுவதும் வாசனையைப் பரப்பும்.
ஆயில் டிப்யூஸர்கள் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். மரபு சார்ந்த முறையிலேயே இவற்றைச் செய்ய முடியும். ஸ்பிரே பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி அதில் 15-20 துளிகள் வரை உங்களுக்குத் தேவையான மணமுடைய வாசனை திரவியத்தைக் கலந்து ஸ்பிரே செய்யவும்.
ஸ்பிரே செய்தவுடன் மின்விசிறியைச் சுழலவிட்டால் அந்த வாசனை விரைவாகப் பரவி வீடு முழுவதையும் மணமணக்கச் செய்யும். இது பிற துர்நாற்றங்களை வீட்டினுள் பரவவிடாமல் தடை செய்யும்.
லாவண்டர் வாசனையே பெரும்பாலும் இதில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த சுவைகளான எலுமிச்சை மற்றும் திராட்சை சுவையுடைய திரவங்களும் மிகச் சிறப்பாக வேலை செய்யும்.
உங்கள் வீடுகளில் விளக்குகள் இருந்தால் அதைப் பயன்படுத்தியே வீட்டைமணமாக , பளிச்சென வைத்துக் கொள்ளலாம். விளக்குகளை அணைத்துவிட்டு வெனிலா மணமுடைய வாசனை திரவத்தை விளக்குகளில் பூசிவிடவும். பின்னர் விளக்குகளைப் போட்டால் விளக்குகள் சூடேற சூடேற வாசனையும் அறை முழுவதும் பரவும். இந்த முறையையே பல வசதியான விடுதிகளில் பின்பற்றுகின்றனர்.
மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றுவதால் உங்களுடைய வீட்டை வாசனைமிக்கதாகவும் பளபளப்பாகவும் பிறர் விரும்பும் வகையிலும் வைத்துக் கொள்ளலாம்.-Source: tamil.eenaduindia
* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…