25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
herring
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இதை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறையும் ???

அமெரிக்காவில் சுமார் 70% குழந்தைகள் வைட்டமின் டி குறைபாட்டினால் அவஸ்தைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இது பல நோய்களான புற்றுநோய், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும்.

எனவே ஒவ்வொருவரும் அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி கிடைக்கும்படி செய்ய வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. அதில் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது, அதிகாலை சூரியக்கதிர்கள் உடலில் படும்படி உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

வைட்டமின் டி
வைட்டமின் டி கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின். மற்ற வைட்டமின்களை விட இது முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த வைட்டமின் டி இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படும்.

எப்படி வைட்டமின் டி குறைபாட்டை அறிவது?
வைட்டமின் டி குறைபாட்டை இரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
வைட்டமின் டி சத்தானது மீன்கள், பால் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால், செரில்கள், மாட்டின் கல்லீரல், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

ஹெர்ரிங்
இதுவும் ஒரு வகையான கடல் மீன். இந்த கடல் மீனிலும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.

வைட்டமின் டி அவசியம்
வைட்டமின் டி உடலில் போதுமான அளவில் இருந்தால், அது எலும்புகளால் எளிதில் கால்சியத்தை உறிஞ்ச உதவும். ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு தீவிரமாக ஆரம்பித்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் வைட்டமின் டி குறைபாடு குறிப்பிட்ட சில நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இப்போது அது என்ன பிரச்சனைகள் என காண்போம்.

ஆஸ்துமா
அன்றாடம் போதிய அளவு வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைத்தால், அது நுரையீரலை வலிமைப்படுத்தும் மற்றும் சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ்
வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, வலிமைப்படுத்தும். இதனால் எலும்புகள் பலவீனமாவது மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவது தடுக்கப்படும்.

உட்காயம்
வைட்டமின் டி குறைபாடு இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அதனால் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படக்கூடும்.

இதய ஆரோக்கியம்
இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் வைட்டமின் டி குறைபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே இப்பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் வைட்டமின் டி கிடைக்குமாறு செய்யுங்கள்.

மன இறுக்கம்
முக்கியமாக உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மன இறுக்கத்தால் அவஸ்தைப்படச் செய்யும்.herring

Related posts

உங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா பாஸ்தா?

nathan

40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan

காளானை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

nathan

எப்போதும் வெந்நீரில் துணி துவைப்பதால் ஏற்படும் குறைபாடுகள் என்ன?

nathan

கலப்பட உணவுகளை எவ்வாறு கண்டறிவது?

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

பிரக்டோஸ் மற்றும் மார்பக கேன்சர் வர வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது. அதுவும் பால் அதிகமாக அருந்தும்போது ஏற்படும்.

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்நலத்திற்குப் பத்துவித பயன்தரும் வாழைப்பழம்!

nathan