25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 1521893574
மருத்துவ குறிப்பு

ஜாக்கிரதையா இருங்க… உங்களுக்கு இப்படி அடிக்கடி வருதா?… அப்போ அந்த நோயா இருக்கலாம்…

கண்களில் உள்ள ஆரோக்கியமான செல்களில் பிறழ்ச்சி அல்லது உருமாற்றம் ஏற்பட்டு அது திசுக்களாக கட்டியாக மாறும். இதுவே கண் புற்று நோய் என்று அழைக்கப்படுகிறது. அதைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கண் புற்று நோயின் வகைகள், எப்படி கண்டறிவது, அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகச்சை முறைகள் இவற்றை காணலாம். கண்ணில் வலியோ வீக்கமோ இருந்தால் அதை எளிதாகக் கடந்து செல்லாதீர்கள்.

கண் புற்றுநோய் வகைகள் நமது கண்களில் உள்ள ஆரோக்கியமான செல்களில் பிறழ்ச்சி அல்லது உருமாற்றம் ஏற்பட்டு அது திசுக்களாக கட்டியாக மாறும். இது முதன்மை கண் புற்று நோய் என்றும் மற்ற உறுப்புகளில் புற்று நோய் செல்கள் வளர்ந்து அது கண்களை தாக்கி புற்று நோயை ஏற்படுத்தினால் அது இரண்டாம் கண் புற்று நோய் என்றும் அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள் முதலில் உங்கள் பார்வையில் குறைபாடு ஏற்படும். ஒளி, ப்ளாஷ் போன்றவை ஏற்படும். ஒரு கண்ணில் ஏதாவது கருப்பு புள்ளிகள் அல்லது அதன் கருவிழிகளின் வடிவம் அல்லது அளவு மாறி விடும். பொதுவாக கூடிய விரைவில் எந்த வித அறிகுறிகளும் தெரிவதில்லை.

உவெல் மெலனோமா இது முதன்மை கண் புற்று நோய் வகையைச் சார்ந்தது. உவியா பகுதி என்பது விழி நடுப்படலம்- கண்களுக்கு இரத்தத்தை அனுப்புதல் , சிலியரி தசைகள்- பார்ப்பதற்கு உதவுதல் , கருவிழி- நிறத்தை பார்ப்பதற்கு என்ற மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. இதில் செல்கள் மாற்றமடைந்து புற்று நோய் கட்டிகளை தோற்றுவிக்கிறது.

ரெட்டினோபிளாஸ்டோமா இது பொதுவாக 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடம் காணப்படும் ஒரு புற்று நோய் வகை. அமெரிக்க போன்ற நாடுகளில் ஒரு வருடத்திற்கு தோராயமாக 200-300 குழந்தைகள் இந்த நோயால் பாதிப்படைகின்றனர். இந்த புற்று நோய் குழந்தை கருவில் இருக்கும் போதே ஆரம்பித்து அவர்கள் வளர வளர இந்த ரெட்டினோபிளாஸ்டுகளும் வளர்ந்து புற்று நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முதலில் காட்சிகளை பார்ப்பதில் மாற்றம் ஏற்பட்டு கருவிழி படலத்தில் உள்ள கண்ணின் மணி தோற்றம் மாறிக் காணப்படும்.

இன்ட்ராக்குலர் லிம்போமா நமது கண்களில் உள்ள நிணநீர் மண்டலம் நிணநீர் முடிச்சுகளால் ஆக்கப்பட்டுள்ளது. இதில் வடியும் நீர் தான் கிருமிகள், கழிவுகள் போன்றவற்றை கண்களிலிருந்து வெளியேற்ற உதவுகிறது. ஆனால் இந்த நிணநீர் அமைப்பில் புற்று நோய் ஏற்படும் போது அதை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில் இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

கன்ஜுன்க்டிவிவல் மெலனோமா கண் விழிக்கு வெளியேயும் கண்ணிமைக்கு உள்ளே உள்ள பகுதி கன்ஜுன்க்டிவா என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் கரும்புள்ளிகள் போன்று புற்று நோய் கட்டிகள் வளர்ந்து நமது நிணநீர் மண்டலம் மூலமாக மற்ற உறுப்புகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதை எளிதாக கண்டறியவும் குணப்படுத்தவும் இயலாது.

கண்ணீர் சுரப்பி புற்று நோய் இந்த புற்று நோய் நமது ஒவ்வொரு கண்களில் உள்ள கண்ணீர் சுரப்பிகளை தாக்குகிறது. இது ஓரு அரிதான புற்று நோயும் கூட. பொதுவாக 30 வயதை அடைந்தவர்களுக்கு இது ஏற்படுகிறது. அடிக்கடி கண்ணில் நீர் வடிந்து கொண்டிருந்தால் நீங்களாகவே ஏதாவது மருந்து வாங்கிப் போட்டுக் கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று காட்டுங்கள். அது கண் புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

கண்ணிமை புற்று நோய் இந்த வகை புற்று நோய் கண்ணிமைகளின் உள்ளே வளருகிறது. இது அதிகமாக கீழ் இமைகளை தாக்குவதால் பேசல் செல் கார்சினோமா என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழிப்பவர்கள், வெளிறிய தோல் உடையவர்களை இது அதிகம் தாக்குகிறது. இதை விரைவில் கண்டறிந்துவிட முடியும்.

இரண்டாம் நிலை கண் புற்று நோய் பொதுவாக கண்களில் புற்று நோய் ஏற்படுவதில்லை. ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய், ஆண்களுக்கு ஏற்படும் கல்லீரல் புற்று நோய் மூலம் கண்களிலும் புற்று நோய் பரவுகின்றன. எனவே இதை இரண்டாம் நிலை புற்று நோய் என்கிறோம். அப்படியே இது மற்ற உறுப்புகளான சிறுநீரகம், தோல் சருமம், குடல் மற்றும் தைராய்டு சுரப்பி போன்றவற்றிற்கும் பரவுகிறது.

கண்டறிதல் உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள், மற்றும் பார்வை திறன் கொண்டு மருத்துவர் பரிசோதனை செய்வார். பெரிய லென்ஸ்களை பயன்படுத்தி பார்வை திறன், அல்ட்ரா சவுண்ட் மற்றும் எம். ஆர். ஐ ஸ்கேன் மூலம் புற்று நோய் கட்டிகள் படத்தை எடுத்தும், பயோப்ஸி அதாவது நுண்ணோக்கியை கொண்டு கட்டிகளை ஆராய்ந்தும் புற்று நோய் இருப்பதை கண்டறிவார்கள்.

அறுவை சிகிச்சை சுமார் 10 மி. மீ அல்லது 3 மி. மீ அளவிலோ அல்லது பரவத் தொடங்குகிறதா என்பதை கவனமாக கண்காணித்து புற்று நோய் கட்டிகளின் அளவை பொருத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. புற்று நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலோ அல்லது கண் முழுவதுமாகவோ அறுவை சிகிச்சை செய்யப்படும்.

X – கதிரியக்க சிகிச்சை அறுவை சிகிச்சைக்கு பிறகு X கதிர்களை செலுத்தி இன்னும் மீதமுள்ள புற்று நோய் செல்கள் இருந்தால் அழிக்கப்படும். ஆனால் இதில் ஆரோக்கியமான செல்களும் பாதிப்படைவதால் கண்கள் வறண்டு, இமைகள் உதிர்ந்து, பார்வை மங்கலாக தெரியவும் வாய்ப்புள்ளது.

லேசர் அறுவை சிகிச்சை லேசர் சிகிச்சையில் மிகவும் பொதுவான வகை, டிரான்ஸ்பையூலிலர் தெர்மோமெதிரி (TTT) என்று அழைக்கப்படுவது, அதாவது குறுகிய அகச் சிவப்பு கதிர்களை கண்களில் செலுத்தி மிகவும் சுருங்கிய புற்று நோய் கட்டிகளை அழிக்க பயன்படுகிறது. மெலனோமா புற்று நோய் செல்கள் இந்த கதிர்களை ஏற்றுக் கொள்வதால் அதற்கு இது சிறந்தது. ஆனால் இன்ட்ராக்குலர் லிம்போமா புற்று நோயுக்கு இது ஏற்றது அல்ல.ஆனால் மற்ற சிகச்சைகளை காட்டிலும் லேசர் தெரபியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைவு.

cover 1521893574

Related posts

மார்பு சளி குறைய யூகலிப்ட்ஸ் தீர்வு

nathan

சூப்பரா பலன் தரும்!! ஆஸ்துமாவை விரட்டும் மூலிகை..!!

nathan

உடம்பு எடையை நீங்க குறைக்கணுமா? இந்தத் தவறுகளை செய்யாதீங்க!!

nathan

வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!!

nathan

கழுத்துவலி மூட்டுவலி தீர இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வாருங்கள்…..

sangika

சூப்பர் டிப்ஸ்! பாத மசாஜ் மூலம் கிடைக்கும் பலன்கள்

nathan

ஆண்மை குறையாமல் இருக்க, முருங்கைப்பூ எப்படி பயனளிக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan

இலைகளின் மருத்துவம்

nathan