திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை என்றாலோ, ஐ.யூ.ஐ. என்ற சிகிச்சையை 6 முறை எடுத்து தோல்வி கண்டவர்களுக்கோ, விந்தணு எண்ணிக்கையில் முன்னேற்றம் கிட்டாதவர்களுக்கோதான் இவ்வித சிகிச்சை பொருந்தும்.
அதே போல் பெண்களிடத்தில் ஒரு பிரிவு பெண்களுக்கு கருமுட்டை வெடிப்பதில் பிரச்சினை இருந்தாலோ, சினைக் குழாயில் அடைப்பு இருந்தாலோ, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டாலும், மீண்டும், மீண்டும் கருக்குழாயில் கட்டிகள் தோன்றினாலோ இவ்வித சிகிச்சையில்தான் பலன் பெற இயலும்.
ஹார்மோன் ஊசி மூலம் கரு முட்டையை உற்பத்தி செய்து, குறிப்பிட்ட நாளில் அதை ஸ்கேன் மூலம் பரிசோதித்து எடுத்து வைத்துக் கொண்டு, அதனுடன் கணவனிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவை சுத்திகரித்து சேமித்து வைத்திருப்பதை இணைப்போம். இதன் மூலம் ஆரோக்கியமான விந்தணுவும், கரு முட்டையும் ஒன்றிணையும் வாய்ப்பை உருவாக்குகிறோம். ஒரு சிலருக்கு ஆரோக்கியமான விந்தணுவின் நீந்தும் திறன் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் போது, அதனை கரு முட்டையில் நேராக ஊசி மூலம் செலுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பையும் உருவாக்கப்படும்.
கருத்தரிப்பு நடந்த பின் அந்த கரு முட்டையை இன்குபெட்டரில் வைத்து கண்காணிக்கப்படும்.. அதன் பிறகு கருவை பெண்ணின் வயிற்றில் பொருத்தி கருவுற வைத்து பிரசவிக்கிப்படும்.
20 முதல் 50 வயது வரை வரை உள்ள பெண்களின் ஏகோபித்த ஆசை தாய்மை அடைவது. அதே சமயத்தில் குழந்தையின்மைக்கான காரணத்தை கண்டறிந்து அது ஆண்களிடத்தில் இருந்தாலும் சரி, பெண்களிடத்தில் இருந்தாலும் சரி. அதனை முதலில் கண்டறிவது தான் முதல் கட்ட சிகிச்சை.