23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl52698972
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

வெஜ் சாப்சி

என்னென்ன தேவை?

நூடுல்ஸ் – 2 பாக்கெட்,
வெங்காயம், குடைமிளகாய், கேரட் – தலா 1,
பீன்ஸ் – 2,
கோஸ் – 2 கப்,
வெங்காயத்தாள் – 1 கப்,
பச்சைமிளகாய் – 1,
பூண்டு, இஞ்சி – தலா 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் விழுது – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய், சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள் – தேவைக்கு,
தக்காளி சாஸ், சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு, வினிகர் – சிறிது,
சோள மாவு – 1 கப்.

sl52698972

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் வேகவைத்த நூடுல்ஸ், சோள மாவு கலந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், கோஸ், பச்சைமிளகாய் சேர்த்து சிறிது வதக்கி, தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

பின்பு காய்ந்தமிளகாய் விழுது, சோயா சாஸ், தக்காளி சாஸ், வினிகர், சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். வெங்காயத்தாளை போட்டு கிளறி இறக்கவும். தட்டில் வறுத்த நூடுல்ஸ் போட்டு, அதன் மேல் காய்கறி கலவையை ஊற்றி சூடாக பரிமாறவும்.

Related posts

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika

கருப்பு உளுந்து மிளகு தோசை

nathan

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

சுவையான உப்பு சீடை

nathan

உழுந்து வடை

nathan

ஸ்நாக்ஸ்: மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி

nathan

10 நிமிஷத்தில் தித்திப்பான ஸ்வீட் ரெடி

nathan

சுவையான … இறால் வடை

nathan