23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
KT
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சமையல் குறிப்பு டிப்ஸ்

# மைசூர்பாகு, தேங்காய் பர்பி ஆகியவற்றைச் செய்யும் போது சமையல் சோடாவைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் துண்டு போட வராமல் தூள் தூளாக உடையும்.

# மிக்சருக்காக அவல் பொரிக்கும்போது சிதறிப் போகும். இதைத் தவிர்க்க கைப்பிடியோடு கூடிய வடிகட்டியில் அவலைப் போட்டு, கொதிக்கும் எண்ணெயில் முக்கிப் பொரிக்க வேண்டும்.KT

# ரவை உருண்டை, பயத்த மாவு உருண்டை செய்யும் போது பொடித்த சர்க்கரையையும் நெய்யையும் நன்றாகக் குழைத்து ஒரு தட்டில் தடவுங்கள். பின் மாவை அதில் போட்டுக் கலந்து உருண்டை பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்..

# பட்சணம் செய்யும் போது எண்ணெய் பொங்காமல் இருக்க ஒரு சொட்டு வினிகர் விட வேண்டும்..

# அவியல் செய்யும்போது அரைத்த தேங்காய் விழுதைத் தயிரில் கலக்காமல் வேகவைத்த கறிகாய்களுடன் சேர்த்துப் பிறகு தயிர் சேர்த்தால் அவியல் நீர்த்துப் போகாது.

# வாணலியை லேசாக சூடாக்கி அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாகப் புரட்டிய பிறகு தோல் உரித்தால் சுலபமாக உரிக்க முடியும்.

# தேங்காய்த் துவையல் அரைக்கும்போது சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

# சப்பாத்தி மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்துக் கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி பூப்போல் இருக்கும்.

# சூடான பாலில் வாழைப்பட்டையைப் போட்டு ஒரு டீஸ்பூன் தயிர் ஊற்றினால் விரைவாக தயிராகிவிடும்.

# தயிர் புளிக்காமல் இருக்க அதில் சிறு துண்டு தேங்காயைப் போட்டுவைக்கலாம்.

# தண்ணீரில் ஒரு டீஸ்பூன் புளித்த தயிர் அல்லது மோரை தண்ணீரில் கலந்து அதில் வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கிப் போட்டால் நிறம் மாறாது.

# வெண்டைக்காய் சீக்கிரம் வதங்கவும் கொழகொழப்புத் தன்மை குறையவும் அதில் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்கலாம்.

# அவரைக்காய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய், மிளகாய் ஆகியவற்றில் வற்றல் போடும் போது காய்ந்த பிறகு புளித்த தயிரில் ஊற வைத்து மீண்டும் காயவைத்தால் ருசி கூடும்.

# வெண்ணெயை உருக்கும்போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

# நன்கு புளித்த தயிரைத் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி வளர்வதுடன் பளபளப்பாகவும் இருக்கும். பொடுகு குறையும்.

# கருணைக் கிழங்கைப் புளித்த தயிரில் ஊறவைத்துச் சமைத்தால் சாப்பிடும்போது அரிப்பு இருக்காது.

# வெள்ளிப் பொருட்களைப் புளித்த தயிரில் ஊறவைத்துச் சுத்தம் செய்தால் பளீரென இருக்கும்.

Related posts

புட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

nathan

குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண் வாழ்க்கைத் துணையானால் ஏற்படும் பேராபத்து!

nathan

ஜாக் கிரதை! உள்ளாடையில் இந்த சிறிய தவறை செய்கிறீர்களா?

nathan

ஒரு குழந்தை மட்டும் உள்ள பெற்றோரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தெரிந்துகொள்வோமா? எலும்பு முறிவை சீக்கிரம் சரி செய்யணுமா?

nathan

சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறதா?…..

sangika

வெயிலுக்கு மொட்டை அடிக்கலாமா? – ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

nathan

உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும்!…

sangika