மூட்டு வலி, சிறுநீரக கல் உட்பட பல பிரச்சனைகளை நாவல் பழச்சாறு குணப்படுத்தும் என்று நியூசிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள ப்ளான்ட் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் ஹர்ஸ்ட் தலைமையிலான குழுவினர், மனித உடலுக்கு நாவல் பழம் அளிக்கும் நன்மைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தனர்.
நாவல் பழச்சாறை தொடர்ந்து 10 பேருக்கு அளித்து, பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், செய்த பிறகும், நாவல் பழச்சாறு சில சொட்டுகள் மட்டும் சாப்பிட்டவர்களுக்கு தசைகளில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தசைப்பிடிப்பு, அழுத்தமும் ஏற்படவில்லை. தவிர, உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படும் உடல்வலி துளியும் இல்லாதது தெரிய வந்தது. தவிர, நாவல் பழச்சாறை 3 வாரங்களுக்கு சிறிதளவு சாப்பிட்டு வந்தவர்களுக்கு மூட்டு வலி குணமானதும், சிறுநீரக கல் கரைந்து போனதும் சோதனையில் தெரிந்தது.
மேலும், உடல் சோர்வு, வலிகளையும் நாவல் பழம் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுபற்றி ஹர்ஸ்ட் கூறுகையில், மூட்டு வலி, உடல் வலி, சோர்வு, சிறுநீரகக் கல், நுரையீரல் பாதிப்புகளை நாவல் பழச்சாறு அற்புதமாக குறையச் செய்கிறது. எனினும், இதற்கு அந்தப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி காரணமல்ல.
அதில் உள்ள பளேவனாய்டு என்ற பொருள்தான் இந்த அற்புதங்களை செய்கிறது. ஆந்தோசயனின்ஸ் என்ற பொருள்தான் நாவல் பழத்திற்கு ஊதா நிறத்தை அளிக்கிறது. அதுவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். தசைகளில் ஏற்படும் எரிச்சலை நாவல் பழம் குறைப்பதாக ஏற்கனவே பல ஆய்வு முடிவுகளில் தெரிய வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது
ஆண்கள் மலட்டுத் தன்மை
ஆரோக்கியமான வாழ்வு முறையையும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் உட்கொள்ளுவதன் மூலம், ஆண்கள் மலட்டுத் தன்மையை தவிர்க்க முடியும். உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் உடலை உறுதிப்படுத்தி வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தையும், சுகாதாரத்தையும் நிலைநாட்ட முடியும். புகைப் பழக்கம், மலட்டுத்தன்மை வர முக்கியமான காரணமாக உள்ளது. புகைப் பழக்கத்தினால் மலட்டுத் தன்மையும், செயல்பாட்டில் பயமும் ஏற்படும்.
மேலும், அதீதமான அளவிற்கு ஆல்கஹால் குடிப்பதும் மலட்டுத் தன்மையை உருவாக்கும். சில நேரங்களில் சுகாதாரமற்ற உணவு, உயிரணுக்களின் தரம் மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றாலும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும் உணவை உட்கொள்வதன் மூலம் மலட்டுத் தன்மையை குறைக்கவும், செயல்பாட்டை உத்வேகப்படுத்தவும் முடியும்.
வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் போலிக் அமிலம் ஆகியவை தரமான உயிரணுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாக உதவி செய்கின்றன. இந்த வைட்டமின்களில் பெரும்பாலானவை பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, தக்காளி, பீன்ஸ் போன்றவற்றில் கிடைக்கின்றன. இந்த காய்கறிகளை அதிகளவில் தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உங்களுக்கு மலட்டுத் தன்மை வருவதை பெருமளவு குறைக்க முடியும்.