26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
3 1521006124
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு ரெட்டை குழந்தை எப்படி உருவாகும்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

இரட்டை குழந்தையை பெற்ற பெற்றோரா நீங்கள்? கடவுள் உங்களைக் கூடுதலாக ஆசிர்வதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இரண்டு குழந்தையையும் ஒரே நேரத்தில் எப்படி சமாளிப்பது என்றும் நீங்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். இரட்டை குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் சவாலான வேலை தான். அவர்களை சமாளிப்பது எப்படி எனக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

திட்டமிடுதல் அட்டவணை போட்டுக் கொள்ளுங்கள் தினசரி குழந்தைகளுக்காக செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து பணிவிடைகளை செய்யுங்கள். குறிப்பாக, ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நாப்கின் மாற்றுவது, குளிக்க வைப்பது, உணவு கொடுப்பது போன்றவற்றை ஒரே நேரத்தில் செய்யுங்கள். அப்போதுதான் இரண்டு குழந்தையின் மீதும் சமமான அக்கறையும் கவனமும் இருக்கும்.

சுகாதாரம் முக்கியம் ஒரு குழந்தை என்றாலே பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கும். இரண்டு குழந்தைகள் ஒரே வீட்டில் வளரும்போது நோய் தொற்றுக்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரட்டை குழந்தைகளைப் பொருத்தவரையில், ஒரு குழந்தைக்கு எதாவது உடல்நலக் கோளாறு தோன்றினால் மற்றொரு குழந்தைக்கும் பரவிவிடும். அதனால் இருக்கும் இடம், உணவு என எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் இரண்டு குழந்தைகளையும் தனித்தனி அறையில் வைத்து வளர்ப்பது நல்லது. மருத்துவ நிபுணர்களும் இதையே பரிந்துரைக்கிறார்கள்

தனித்தனி நபராக பார்க்க வேண்டும் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதுவும் குறிப்பாக, இரட்டைக்குழந்தைகள் என்றால் ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் அது முற்றிலும் தவறான அணுகுமுறை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கும். அதனால் இருவரையும் வேறு வேறு நபராக தனித்தனியே அணுகுங்கள். இருவருக்கும் உள்ள தனித்தனியான விருப்பு, வெறுப்புகளை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒப்பிடுவதை தவிர்க்கவும் நிச்சயமாக ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் குழந்தைகளை எரிச்சலூட்டும். அதனாலேயே ஒருவரை மற்றொருவர் வெறுத்துவிடுவார்கள். அது நாளாக, நாளாக பகையாகக்கூட மாறிவிடும். அதில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இவற்றையெல்லாம் சரியாக செய்து வந்தால் போதும். இரட்டைக் குழந்தைகளை மிக எளிதாக உங்களால் சமாளிக்க முடியும்.

மெய்சிலிர்ப்பு நமக்கு தெரிந்த எவருக்காவது ரெட்டைக் குழந்தை பிறந்தால் மிக ஆச்சர்யத்தோடு பார்ப்போம். ஏதோ நமக்கே அந்த குழந்தைகள் பிறந்தது போன்ற மெய்சிலிர்ப்பு உண்டாகும். ஏதோ ஒருவித மகிழ்ச்சி உண்டாகும். அதற்கெல்லாம் காரணம், பொதுவாக எல்லோருக்கும் ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை மட்டும் பிறக்க சிலருக்கு மட்டும் ரெட்டை குழந்தை பிறப்பது தான். அந்த ரெட்டை கரு எவ்வாறு உருவாகி, வளர்கிறது என்று நம் தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடு தான் அது.

ரெட்டை குழந்தை உருவாகும்விதம் இரட்டை குழந்தை பிறப்பது அபூர்வமான நிகழ்வெல்லாம் கிடையாது. அது ஒரு இயற்கையான நிகழ்வே. இந்த ரெட்டை குழந்தை எல்லோருக்குமே பிறப்பதில்லை. அவ்வாறு பிறப்பது கருமுட்டை மற்றும் விந்தணுவைப் பொருத்தது. அதோடு பெண்ணின் பரம்பரையில் யாருக்கேனும் ரெட்டைக் குழந்தை பிறந்திருந்தால் அதற்கான வாய்ப்புகள் அந்த பெண்ணுக்கும் உண்டு. கருவுறுதலின் போது, ஆண்களிடம் இருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரு விந்து செல் மட்டும் பெண்களின் கருப்பையில் உள்ள அண்டத்துடன் இணைந்து கருமுட்டையை உருவாக்குகிறது.

மொருலா இவ்வாறு ஆண், பெண் இணைந்த கரு முட்டை இரண்டு இரண்டாகப் பிரிந்து, ஆயிரக்கணக்கான செல்கள் கொண்ட கரு முட்டைகளாக மாறுகின்றன. இது மொருலா என்று அழைக்கப்படுகிறது. இந்த மொருலா வளர்ச்சியடைந்த பின், அதன் குறிப்பிட்ட பகுதிகள் குழந்தைகளின் உடலுறுப்புகளாக மாறுகின்றன. மொருலாவானது அதனுடைய வளர்ச்சிக்கு முன்பாகவே இரண்டாகப் பிரிந்தால், பிரிந்த இரண்டு மொருலாக்களும் இரண்டு குழந்தைகளின் உடலாக, தனித்தனியே வளர்ச்சிபெறத் தொடங்குகிறது. அவை முழு வளர்ச்சியடைந்து ரெட்டைக் குழந்தைகளாகப் பிறக்கின்றன. இவ்வளவு தான் ரெட்டை குழந்தை ரகசியம்.

ஆரோக்கிய உணவுகள் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிரும் ரெட்டைக் குழந்தையென்றால் அதீத கவனம் தேவை. இரண்டு குழந்தைகளுக்குமான உணவு, நீர், சுவாசம் என அத்தனையையும் தாய் நிறைவேற்ற வேண்டும். அதனால் நேரத்துக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் சிகிச்சை முறைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாந்தி ரெட்டை குழந்தைகளை சுமர்ப்பவர்களுக்கு அதிக அளவில் வாந்தியும் குமட்டலும் வந்து அலைக்கழிக்கும். அதிகாலையில் தூங்கி எழும் முன்பே இந்த தொல்லை ஆரம்பித்துவிடும். வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசையிருந்தாலும் வாந்தியால் சாப்பிடவே வேண்டாம் என்பது போல் ஆகிவிடும். வாந்தி என்பது கர்ப்ப காலத்தில் சகஜமாகக் காணப்படுகிற ஒன்று தான் என்றாலும், இரட்டைக் கருவை சுமப்பவர்களுக்கு அந்த உணர்வு மற்றவர்களை விட மிக அதிகமாகவே இருக்கும். அந்த வாசனைகளை சகித்துக் கொள்ள முடியாததால் விருப்பமான உணவுகளைப் பார்த்தால் விலகி ஓடிவிட வேண்டும் போல் தோன்றும். கர்ப்பம் உறுதியாகிற வரை மிகவும் பிடித்திருந்த உணவின் வாசனை, கர்ப்பம் தரித்த பிறகு மிக மோசமான வாசனையாகத் தோன்றும். இந்த லிஸ்ட்டில் காபி, டீக்கு முதலிடம்.

எடை அதிகரிப்பு இரட்டைக் கரு உருவாகியிருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப நாள்களிலேயே கர்ப்பிணிகளின் எடையில் கூட ஆரம்பித்துவிடும். அப்படி அதிகரிக்கிற எடை என்பது வெறும் குழந்தைகளின் எடை மட்டுமின்றி, உடலில் சேருகிற அதிகப்படியான திசுக்கள், திரவம் மற்றும் ரத்தம் ஆகியவற்றையும் சேர்த்தது தான்.

வயிறும் மார்பும் வழக்கமாக கர்ப்பிணிகளுக்கு நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு தெரிய ஆரம்பிக்கிற வயிறு, இரட்டைக் கர்ப்பம் சுமப்பவர்களுக்கு இன்னும் சீக்கிரமே தெரியும். அடுத்தடுத்த மாதங்களிலும் வயிற்றின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும். உள்ளாடை அணிய முடியாத அளவுக்கு மார்பகங்கள் மிகவும் மென்மையாகும்.

சிறுநீர் சோதனை அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்ப காலத்தில் சகஜம். ஆனாலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது, அந்த உணர்வு இன்னும் தீவிரமாகும். அளவுக்கு மிஞ்சிய களைப்பு உண்டாகும். ஒவ்வொரு நாளையும் கடத்துவதென்பதே போராட்டமாகத் தெரியும். பிரசவ ஹார்மோன் என்று சொல்லக்கூடிய Chorionic Gonadotropin Hormone அளவு மிக அதிகமாக இருக்கும். இது கர்ப்பத்தை உறுதிப்படுத்துகிற முதல் சிறுநீர் சோதனையிலேயே தெரியும். கர்ப்பப்பை விரிவடைவதன் விளைவாக, இரட்டைக்கரு உருவான பெண்களுக்கு கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு மாதிரியான உணர்வு உண்டாகும்.

இதயத்துடிப்பு இதயத்துடிப்பில் வேகம் தெரியும். சாதாரண நிலையில் 70 முதல் 80 வரை இருக்கும் இதயத்துடிப்பானது, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு 95 முதல் 105 வரை கூட எகிறும். காரணமே இல்லாமல் திடீரென அழுகை, தடுமாற்ற மனநிலை போன்றவையும் உண்டாகும் வாய்ப்பு உண்டு. ஒரு குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு அளவோடு இருக்கும் இந்த உணர்வுகள், இரட்டைக் குழந்தைகளை சுமப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாகவே தென்படும். குழந்தைகளின் அசைவைக் கூட சீக்கிரமே உணர்வார்கள் இரட்டைக் கருவைச் சுமக்கும் பெண்கள்.

3 1521006124

Related posts

இரண்டாவது குழந்தை கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களும் குடும்பத்தினரும் கண்டிப்பாக படியுங்கள

nathan

பெண்கள் எந்த வகை ஆண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டிடுமாம்!

nathan

அமிலத்தை குடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது?

nathan

தற்கொலை எண்ணம் வரக்காரணம் என்ன?

nathan

பிரசவ வலி இல்லாமல் 15 நிமிடத்தில் குழந்தை பிறக்க ..!

nathan

பிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவும் உருளைக்கிழங்கு ஜூஸ்!

nathan

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மனிதர்களுக்கு கிறுக்கு பிடிப்பது ஏன் என்று தெரியுமா?

nathan