மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா?

பிறந்த பச்சிளம் குழந்தைகள் மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள்; குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள், சிறு விஷயங்களால் கூட பாதிக்கப்படும் அளவிற்கு மிகவும் பலவீனமாக இருப்பார்கள்; குழந்தைகள் வளர வளர தான் அவர்கள் தாய்ப்பால் மூலம், தாய் கொடுக்கும் சத்தான உணவுகள் மூலம் பலம் பெறுவர்.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தலையணை பயன்படுத்துவர்; ஆனால் அது பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அவர்கள் அறிந்து இருக்க மாட்டார்கள். குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

தலையணை தேவையா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொள்ளும் ஒரு பழக்க வழக்கம், படுக்கும் பொழுது தலையணை வைத்து கொள்வது. தலையணை வைத்து படுப்பதால், உடலின் இரத்த ஓட்டம் முக்கியமாக தலையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். ஆனாலும் தலையணை இல்லாமல் நம்மால் தூங்க முடியாத அளவுக்கு தலையணை பழக்கத்தை நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆக்கி விட்டோம்.!

குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டுமா?

குழந்தைகளுக்கு தலையணை என்பதை நாம் பயன்படுத்த காரணமாக இருப்பது, அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையே. குழந்தைகள் கட்டிலில் உறங்கும் பொழுது, அவர்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க பெற்றோர்கள் தலையணையை வைப்பது வழக்கம். ஆனால் பல பெற்றோர்கள் குழந்தை பிறந்தவுடனேயே அவர்களை தலையணையில் படுக்க வைப்பது உண்டு.

இது தவறான விஷயம்; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தலையணையில் படுக்க வைப்பதை தவிர்ப்பது அவசியம்.

ஏன் குழந்தைகளுக்கு கூடாது?

குழந்தைகள் பிறந்த பின்னும் கூட, அவர்களின் உடல் வளர்ச்சி நிலையில் தான் இருக்கும். குழந்தைகள் பிறந்த ஒரு சில மாதங்கள் வரை அவர்களின் தலை நேராக இருக்காது; குழந்தைகளின் தலை நிலைபெற குறைந்தது 3 மாதங்கள் ஆவது ஆகும். குழந்தைகளின் தலை மற்றும் கழுத்து என இரண்டு பாகங்களும் நிலைபெறும் வரை அவர்களுக்கு தலையணையை பயன்படுத்த கூடாது.

தலையணை பயன்படுத்துவது குழந்தைகளின் தலை வடிவத்தை அல்லது தலை மற்றும் கழுத்துக்கு இடையேயான இணைப்பை பாதிக்கலாம்.

மற்றொரு காரணம்..!

குழந்தைகளுக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது; பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் தலையணை சுத்தமானதாக இல்லை என்றாலோ அல்லது அதில் ஏதேனும் தூசி, அழுக்கு போன்ற விஷயங்கள் படிந்து இருந்தாலோ அவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த இரண்டு காரணங்களுமே குழந்தைகளுக்கு சற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடியவை!

பாதுகாப்புக்கு வைப்பவை..

குழந்தைகளின் பாதுகாப்புக்கு வைக்கும் தலையணைகளோ அல்லது குழந்தை எங்கும் சென்று விடாமல் இருக்க அதன் பாதுகாப்பிற்காக வைக்கும் தலையணைகளோ எதுவாக இருந்தாலும் அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிரத்தை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு பயன்படுத்தும் சிறு சிறு விஷயங்களும் மிகச்சரியானதாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தலையணை வேண்டுமெனில்..!

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தலையணையை பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அல்லது குழந்தைகளுக்கு தலையணை அவசியமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு மிகவும் தட்டையாக இருக்கும் தலையணை வகைகளாக பார்த்து வாங்கி கொடுக்க வேண்டும். தட்டையான தலையணைகள் தரையில் விரிக்கும் விரிப்பினை போன்று மிகவும் தட்டையானதாக இருக்க வேண்டியது அவசியம்.5 15393

மருத்துவ ஆலோசனை!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எது சரி எது தவறு என்பதை எப்பொழுதுமே மருத்துவரின் ஆலோசனைப்படி முடிவு செய்வது நல்லது. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மருத்துவ ஆலோசனைப்படி வாங்கி உபயோகித்து வருதல் நலம் அளிக்கும். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான விஷயம் என்பதால், அதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி, அவர்களை கவனித்துக் கொள்ளுதல் நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button