22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
17 1445070732 1 dates
ஆரோக்கிய உணவு

தினமும் ஆண்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் பெறும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளது. பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றம் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

எனவே ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். இங்கு பேரிச்சம் பழத்தை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்துக்கள்
பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிரறந்துள்ளது.

செரிமானம் சீராகும்
பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

சிறந்த ஆற்றல் கிடைக்கும்
பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேத்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலம்
பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பக்கவாதம் தடுக்கப்படும்
ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

இரத்த சோகை நீங்கும்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும்
பேரிச்சம் பழம் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். அதற்கு இரவில் படுக்கும் போது ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

எடையை அதிகரிக்கும்
ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்17 1445070732 1 dates

Related posts

சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா திராட்சையை அடிக்கடி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!

nathan

இந்த உணவுகளை உண்பதற்கு முன்/பின் தெரியாம கூட பாலை குடிச்சுடாதீங்க..

nathan

சத்தான டிபன் கேழ்வரகு பணியாரம்

nathan

மணம்.. குணம்.. ஆரோக்கியம்.. சக்தி தரும் கடுகு

nathan

பூண்டுப்பால் அருந்துவதனால் என்ன பலன் தெரியுமா? படியுங்க….

nathan

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!

nathan