பழங்காலத்தில் மஞ்சள் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரிசெய்ய பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கல்லீரல் மற்றும் மூளை இரண்டிற்கும் நன்மை விளைவிக்கும் ஓர் பொருள் என்னவென்று தெரியுமா? நிச்சயம், இதை மஞ்சள் செய்யும்.
இதற்கு மஞ்சளில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம். மூளை மற்றும் கல்லீரலின் ஆரோக்கியம் மேம்பட மஞ்சளை எப்படி எடுக்க வேண்டும் எனத் தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தேவையானப் பொருட்கள்: மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் – ஒரு டம்ளர் தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். பின்னர் அதை குளிர வைத்து சிறிது நேரம் கழித்து குடியுங்கள். இந்த கலவையை அப்படியே குடிக்கப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சாப்பிடும் ஏதாவது ஒரு உணவில் கலந்து சாப்பிடலாம்.
மற்றொரு முறை: தேவையானப் பொருட்கள் தண்ணீர் – ஒரு டம்ளர் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை: கொதிக்கும் நீரில் மஞ்சள் தூளை சேர்த்து 5-10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். பின்னர் அந்த நீரை குளிர வைத்து குடிக்க வேண்டும்.
எப்படி வேலை செய்யும்? மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் எனும் பொருள் அல்சைமர் நோயை ஏற்படுத்தும் பீட்டா-அமிலோயிட் பிளேக்குகளை மூளையில் சேராமல் தடுக்கும். மேலும், மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும்.
அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மஞ்சள் தூளில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூளையில் ஏற்படும் பிற பிரச்சனைகளைக் குறைக்க உதவும். மேலும், மன அழுத்தத்தையும் குறைக்கும்.
பிற நன்மைகள் மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை எளிதில் தடுத்து, அதனால் வேறு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும்.