27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
16 1497594045 2
ஆரோக்கிய உணவு

உடல் சோர்வை நீக்ககி நரம்புகளின் வலிமையை உறுதியாக்க தினமும் இத சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவு தினசரி பழக்கத்தில் சேர்த்துக் கொண்டதில்லை. அரிசு உணவென்பது விழாக் காலங்களில் சேர்த்துக் கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகளை தான். அதனால் தான் அவர்கள் நாம் இன்று அஞ்சு நடுங்கும் நோய்களை பற்றி எல்லாம் அறியாமலே இயற்கை மரணம் அடையும் பாக்கியம் பெற்றிருந்தனர். சரி, இனி வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி சோர்வை நீக்க முடியும், நரம்புகளின் வலிமையை அதிகரிக்க முடியும் என இங்கு காணலாம்…

3000 ஆண்டுகள்! இந்தியாவில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரகு எனும் சிறுதானியத்தை பயிர் செய்து வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு தான் நமது உணவு பழக்கத்தில் மாற்றங்கள் உண்டாகின. இதன் பிறகு தான் மக்களின் ஆரோக்கியத்திலும் கேடுகள் அதிகரிக்க துவங்கின.

அமினோ அமிலங்கள் (புரதம்) மொத்தம் 12 அமினோ அமிலங்கள் உள்ளன. அதில் 11 வரகில் இருக்கிறது. அமினோ அமிலங்கள் தான் புரதம் என்று நாம் கூறுகிறோம். பயிறு மற்றும் பருப்பு வகை உணவுகளை சேர்த்து சமைத்தால் தான் முழு புரதசத்து உடலுக்கு கிடைக்கும்.

கழிவுகள் வெளியேறும்! சிறு தானியங்களில் இருக்கும் காரத்தன்மை எளிதாக செரிமானாகி இரத்தத்தில் சத்துக்கள் உடனடியாக சேர உதவுகிறது. மேலும், இது மூளையின் செல்கள் ஆரோக்கியமாக வேலை செய்ய தூண்டுகிறது.

நுண்ணுயிர் கிருமிகள்! நமது உடலில் இரண்டு வகையான கிருமிகள் உயிர்வாழும். ஒன்று உடல் பாகங்களுக்கு உதவி செய்யும். மற்றவை கேடு விளைவிக்கும். சிறுகுடல், பெருங்குடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர் கிருமிகளை அளிக்காமல் மற்ற நச்சுக்களை மற்றும் அழித்து நீக்கும் தன்மை கொண்டுள்ளது வரகு.

பிற நன்மைகள்! உடல் சோர்வை நீக்கும் நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும் மூட்டு வலி தடுக்கும் கண் பார்வை ஆரோக்கியம் அதிகரிக்கும் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் கொலஸ்ட்ரால் குறைக்கும் உயர் இரத்த அழுத்தம் தடுக்கும். செல்களின் அழிவை குறைக்கும்.

நயாசின்! வரகில் இருக்கும் நயாசின் தான் இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், இதனுடன் மக்னீசியம் சேர்ந்து இரத்த குழாய் விரிந்து, சுருங்கும் தன்மையை அளித்து இரத்த அழுத்தம் வராமல் இருக்க உதவுகிறது.

16 1497594045 2

Related posts

ஏன் காலை 9 மணிக்கு முன் எப்போதுமே காபி குடிக்கக் கூடாது?

nathan

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது முட்டை!

nathan

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

வித்தியாசமான சுவையுடன் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு துண்டு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

nathan

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி

nathan

கோதுமை பாயாசம் செய்வது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதற்கான 6 காரணங்கள்!!!

nathan