23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
06 1507275174 2
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா மஞ்சளை யாரெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது ?

மஞ்சளை பற்றி நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். இதில் அதிகளவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள முக்கிய பொருளான குர்குமின், சிறந்த நோயெதிர்ப்பு பொருளாக உள்ளது. இது இயற்கையாகவே தொற்றுகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்பட கூடியது தான்.

அதுமட்டுமின்றி மஞ்சள் இருதய பாதிப்புகள் மற்றும் கேன்சர் செல்களுடன் போராடக்கூடிய வல்லமை பெற்றுள்ளது. மஞ்சள் உங்களது மூளையை பாதுகாக்கும் திறனையும் பெற்றுள்ளது. இது பல நோய்களுக்கு மருந்தாகிறது. மஞ்சளை மருந்துக்கு பதிலாக பயன்படுத்துவது சிறந்தது தான். ஆனால் மஞ்சளை மருந்துடன் சேர்த்து பயன்படுத்துவது சரியாக இருக்குமா?

மஞ்சளை பற்றி..! மஞ்சள் 4000 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த மிகச்சிறந்த மருத்துவ பொருளாகும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆராய்ச்சிகளில் மஞ்சள் ஒரு இயற்கை மருந்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆரோக்கிய குறைப்பாட்டை சரிசெய்யும் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது, அதனுடன் மஞ்சளை உபயோகப்படுத்த கூடாது. ஏனெனில் இது பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பகுதியில், எந்தெந்த மருந்துகளுடன் மஞ்சளை சேர்த்து உபயோகப்படுத்த கூடாது என்பது பற்றி காணலாம்.

1. பிளட் தின்னெர்ஸ் (Blood Thinners) பிளட் தின்னெர்ஸ்கள் ஆன்டிகோகுலன்ட் அல்லது அண்டிப்பிலேலேட் மாத்திரைகள் (anticoagulant or antiplatelet drugs) எனவும் அழைக்கப்படுகின்றன. இது அதிகமாக, இருதய பிரச்சனை உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்தில் இருக்கும் ஆன்டிகோகுலன்ட் தன்மையானது மஞ்சளிலும் இருக்கிறது. எனவே இந்த மாத்திரையையும், மஞ்சளையும் ஒன்றாக சாப்பிட்டால், மருத்துவ தன்மை அதிகமாகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமுன் நஞ்சு தான். எனவே தான், மஞ்சளையும், இந்த மருந்துகளையும் ஒன்றாக சாப்பிட கூடாது.

பிளட் தின்னெர் மருந்து வகைகள் 1. ஆஸ்பிரின் (Aspirin) 2. கிலோபிடோஃரேல் (Clopidogrel (Plavix) 3. டிபியரிடமோளே (Dipyridamole (Persantine) 4. வார்பாரின் (Warfarin (Coumadin, Jantoen) 5. ஏனோஸ்ப்பரின் (Enoxaparin (Lovenox)

2. அன்டசிட்ஸ் (Antacids) அன்டசிட்ஸ் மருந்துகள் உங்களது வயிற்றில் இருக்கு அதிக அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது. நீங்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது மஞ்சளையும் எடுத்துக்கொண்டால், மருந்தும் மஞ்சளும் வினைபுரிந்து அமிலத்தன்மை அதிகரித்துவிடும். இதனால் குடலில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

அன்டசிட்ஸ் மருந்துகள் சிமெடிடைன் (Cimetidine) ஃபேமோட்டீன் (Famotidine (Pepcid) ரனிடிடின் (Ranitidine (Zantac) ஒமெப்ரஸ்ஸொளே (Omeprazole)

3. சர்க்கரை நோய் மருந்துகள் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது மஞ்சளை சேர்க்க கூடாது. ஏனெனில் மஞ்சளுக்கும் சர்க்கரையை குறைக்கும் தன்மை உள்ளது. மருந்தும், மஞ்சளும் சேர்ந்து சர்க்கரையை குறைத்தால், உங்களது உடலில் சர்க்கரையின் அளவு மிக குறைவாகிவிடும். சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்தால், வியர்வை, மயக்கம், கண் மங்கலாக தெரிவது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

06 1507275174 2

Related posts

சூப்பர் டிப்ஸ்! தோல் பிரச்சனைகளைப் போக்கும் துளசி

nathan

மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் சாப்பிடக்கூடாத மாத்திரைகள்!!!

nathan

தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

ஆயுர் வேதமும் அழகும்

nathan

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

nathan

பல் எந்த விதத்தில் நாம் பராமரிக்காததால் நம்முடைய உள்ளுறுப்புகளை பாதிக்கும்….

sangika

உங்களுக்கு தெரியுமா புற்றுநோயை குணமாக்கக்கூடிய இயற்கை மருத்துவம்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை …

nathan

தூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

nathan