24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
06 1507268128 1
ஆரோக்கிய உணவு

பாத்தா ஷாக் ஆவீங்க சத்தானது என நீங்கள் நினைக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஆரோக்கியம் விஷயத்தில் முக்கியத்துவம் அளிக்கும் நபர்கள் பலரும் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் அடங்கியிருக்கிறது எவ்வளவு சாப்பிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். நாம் சாப்பிடும் உணவுகளில் சத்து மிகுந்தது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்கள் உண்மையில் சாப்பிடக்கூடியது தானா? எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும் போது அது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திடும்.

ஸ்மூத்தி : பல்வேறு பழங்கள், சுவையூட்டிகள், இனிப்பூட்டிகள் மற்றும் சில நட்ஸ் வகைகள் சேர்த்து தயாரிக்கப்படும். இதனை சொந்தமாக நீங்களே வீட்டில் தயாரிக்கிறீர்கள் என்றால் செயற்கையான விஷயங்களை தவிர்த்து உங்களுக்கு தேவையான இனிப்பை மட்டும் சேர்ப்பீர்கள். சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்க்கலாம். இதே வெளியிடங்களில் குடிக்கும் பட்சத்தில் இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில் கொள்ள முடியாது. எல்லா ஸ்மூத்தியிலும் கலோரி அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. தேர்ந்தெடுக்கும் பழங்கள் கலோரி குறைந்தவையாக இருக்கலாம். சாதரணப் பாலுக்கு பதிலாக இனிப்பில்லாத பாதாம் பால் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் : நீங்கள் நினைப்பது போல தேங்காய் எண்ணெய் மிகவும் உடலுக்கு நன்மை தருவதல்ல. தேங்காய் எண்ணெயில் இருந்து கிடைக்க கூடிய 15 சதவீத கொழுப்பு ட்ரிக்லைசெரைட்ஸ் ( triglycerides).இது மட்டும் தான் உங்களுக்கு எனர்ஜியாக மாறுகிறது . இதைத் தவிர மற்றவை கெட்ட கொழுப்பாக உடலில் சேர்கிறது. இதனால் தேங்காய் எண்ணெய் உணவுகளில், சமைக்க பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது அமெரிக்காவில் இருக்கும் இதயநோய் தொடர்பான அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

தேன் : உணவு விஷயத்தில் எல்லாரும் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. தேன் இயற்கையானது என்று சொல்லி எவ்வளவு வேணாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையோ செயற்கையோ சர்க்கரை… சர்க்கரை தான். அதில் இனிப்புச்சத்து கிடைக்கிறது. நீங்கள் சாப்பிடக்கூடிய ஓவ்வொரு உணவிலும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தினால் அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல மாறாக அது கண்டிப்பாக உங்களின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் இதனால் பாதிப்பு உண்டாகும்.

ப்ரோட்டீன் பார் : ஐடியில் பணியாற்றும் பலரும் காலை உணவாக இதனை உட்கொள்கிறார்கள். சில ப்ரோட்டீன் பார்கள் சாக்லேட் சுவையில் இருக்கும். அதில் அதிகப்படியான சர்க்கரை சிறிதளவு ப்ரோட்டீன் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும். இதனை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலில் பாதிப்பு உண்டாகும். ப்ரோட்டீன் பார் சாப்பிடும் போது அவை 200 கலோரிகளுக்கு உட்பட்டவையாக இருக்கிறதா என்று பாருங்கள் அத்துடன் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும்.

நட்ஸ் : நட்ஸ் வகைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதற்காக அதனை ஸ்நாக்ஸாக அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளக்கூடாது. பெரும்பாலும் நட்ஸ்களில் அதிகப்படியான கலோரிகள் இருக்கும். ஒரு கைப்பிடியளவு பாதாம் பருப்பில் 160 கலோரி இருக்கும்.

க்ளூட்டான் ஃப்ரீ : பாக்கெட் உணவுகளில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக க்ளூட்டான் ஃப்ரீ,லோ கார்ப் போன்ற விஷயங்களை மிகவும் பூதாகரமாக காட்டியிருப்பார்கள். க்ளோட்டான் ஃப்ரீ பிஸ்கட் என்றவடன் அது மிகவும்ச் சத்தானது என்று அர்த்தமன்று. பிஸ்கட் செய்ய மூலப் பொருளான மாவு தேவை. அதைத் தவிர சில சுவையூட்டிகளை நிச்சயம் சேர்த்திருப்பார்கள். அதனால் இது போன்ற பொருளை வாங்குவதற்கு முன்னர் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் என்னென்ன என்று சரிபாருங்கள்.06 1507268128 1

Related posts

கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

வெளியான உண்மை- தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சுவையான… ரவா ரொட்டி

nathan

குழந்தை பிறந்த உடன் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

இரத்த அழுத்தம் குறைந்து இருதய நோய் வராமல் தடுக்கும் பலா சூப்பர் டிப்ஸ்….

nathan

கோதுமை ரவையில் கருப்பட்டி பாயாசம் செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழத்தை இவ்வாறு செய்து சாப்பிடலாமாம்!…

sangika

இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பிளம்ஸ்

nathan