25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201803020859469131 Sperm Embryo Donation SECVPF
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கருமுட்டை தானம் எப்படி செய்யப்படுகிறது?

கருமுட்டை தானம் எப்படி செய்யப்படுகிறது… யாரிடமிருந்து முட்டைகளைப் பெறலாம்? கொடுப்பவருக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கருமுட்டை தானம் எப்படி செய்யப்படுகிறது
குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டை தானம் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதம். ஏதோ ஒரு வகையில் குழந்தை தன்னுடைய ரத்தம் என சொல்லிக் கொள்வதையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு கருமுட்டை தானம் சரியான சாய்ஸ்.

கருமுட்டை தானம் எப்படி செய்யப்படுகிறது… யாரிடமிருந்து முட்டைகளைப் பெறலாம்? கொடுப்பவருக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

‘‘தத்தெடுப்பதை விடவும் கருமுட்டை தானம் மூலமாக குழந்தை பெறுகிற பெண்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. கருமுட்டை தானம் மூலம் விரைவில் குழந்தை பெறவும் முடிகிறது. இதில் யாருடைய கருமுட்டை யாருக்கு வைக்கப்படுகிறது என்பதைக் கட்டாயம் சொல்வார்கள். இவர்களுடைய குணங்கள் பிடித்திருக்கிறது… அவரிடமிருந்து பெறுகிற முட்டையை வைத்தால் நன்றாக இருக்கும் என தானம் பெறுவோர் விரும்பினால், அந்த நபரை அவர்கள் அறிந்திருந்தால் அவரிடமிருந்தும் கருமுட்டையை சேகரிக்கலாம்.

கொடுப்பதா வேண்டாமா என்பது தானம் தருபவரின் சுதந்திரம். தகுதியுள்ள பெண்ணின் கருமுட்டைகள்தான் தானமாகப் பெறப்படும். குழந்தை வேண்டும் என நினைக்கிற பெண்கள் உடன்பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள், தோழிகள் என யாரிடமும் கருமுட்டைகளைத் தானமாகப் பெறலாம்.

வயது முதிர்ந்த பெண்ணிடமிருந்து பெறப்படும் கருமுட்டையை ஏற்றுக் கொள்வதில்லை. கருத்தரிக்கும் வாய்ப்பும் கரு நிலைத்திருக்கும் வாய்ப்பும் குறைவாக இருக்கும் என்பதே காரணம். பாரம்பரிய குறைபாடுள்ள குடும்பத்தில் பிறந்தவர்களது கருமுட்டைகளையும் தானமாகப் பெற முடியாது. மருத்துவ ரீதியான பக்கவிளைவுகள், மரபணு குறைபாடுகள் மற்றும் நோய்கள் உள்ளவர்களிடமிருந்தும் கருமுட்டையை தானமாகப் பெற முடியாது. கருமுட்டை தானம் கொடுக்கும் பெண் 25 முதல் 30 வயதுக்குள்ளும் ஆரோக்கியமானவராகவும் இருக்க வேண்டும்.

கருமுட்டை ஸ்கேன் வழியே சேகரிக்கப்படும். கருமுட்டை உண்டாவதற்காக அந்தப் பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஹார்மோன் மாத்திரை அல்லது ஊசி கொடுக்கப்படும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. தானம் கொடுப்பதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனையும் ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படும். தானம் கொடுத்ததும் 2 மணி நேரத்தில் சகஜமாக வீட்டுக்குத் திரும்பலாம். கருமுட்டை தானம் கொடுக்கும் பெண்ணுக்கும் பெறுகிற பெண்ணுக்கும் சில பொருத்தங்கள் பார்ப்பார்கள். தானம் கொடுப்பவர் அதற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.

கருமுட்டை பெறப்படும் சூழலில் ஹெபடைட்டிஸ் கிருமிகள் இருக்கின்றனவா, ஹெச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதெல்லாம் சோதிக்கப்படும். இதற்கான கட்டணங்களை கருமுட்டை தானம் தருகிறவர் கொடுக்க வேண்டாம். பெறுகிறவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்… கருமுட்டை தானம் தந்தவர் சட்டரீதியாக குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது.’’201803020859469131 Sperm Embryo Donation SECVPF

Related posts

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கனுமா?

nathan

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

nathan

முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடையை கண்டுபிடிச்சாச்சு!அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… எடை தூக்கும் பயிற்சி பற்றி உங்களுக்கு தெரியாத 9 விஷயங்கள்!!!

nathan

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் இந்த 8 அறிகுறிகள் உடலில் காணப்படும்

nathan

மூக்கடைப்பை சரிசெய்யும் கற்பூரவல்லி

nathan

ஐவிஎஃப் முறை சிறந்த பயனளிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவும் ஆயுர்வேத பரிந்துரைகள்..!!

nathan

ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?

nathan