26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
3 1516782188
ஆரோக்கிய உணவு

நீங்கள் முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

உடல் நலனில் அக்கறை கொண்டுள்ள பலரும் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும் அவற்றில் என்ன மாதிரியான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன போன்ற பல்வேறு தகவல்களை திரட்டுகிறார்கள்.

இங்கே ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் பற்றிய ஓர் தொகுப்பு பட்டியலை எல்லாரும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். உடல் ஆரோக்கியம் என்று சொன்னால் ஏதோ ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்ககூடிய அபூர்வமான ஒரு காயிலோ அல்லது கனியிலோ தான் எல்லாச் சத்துக்களும் அடங்கியிருக்கிறது என்று எண்ணப்படுகிறது அது முற்றிலும் தவறான கண்ணோட்டம்.

நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய சில வகை உணவுகளிலேயே அத்தனைச் சத்துக்களும் நிரம்பியிருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட ஓர் காய் என்றால் அது முட்டைகோசைச் சொல்லலாம்.

முட்டைகோஸ் யாரெல்லாம் சாப்பிடலாம், அதனைச் சாப்பிடுவதால் ஏற்படுகிற நன்மைகள் என்னென்ன போன்றவை குறித்து எல்லாம் ஏற்கனவே நிறைய படித்திருப்பீர்கள்.

இங்கே முட்டைகோஸ் வேக வைத்த நீர் அல்லது முட்டைகோஸ் சூப் ஆகியவற்றை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் அவற்றை ஏன் குடிக்க வேண்டும் என்று உங்களுக்கு மிகவும் அவசியமான சில காரணங்கள் கூறப்பட்டிருக்கிறது.

எடை குறைப்பு :

இன்றைக்கு பலரது முக்கிய உடல் சார்ந்த பிரச்சனை என்று எடுத்துக் கொண்டால் அது உடல் எடை தொடர்பானதாகவே இருக்கிறது. உடல் எடை அதிகரித்தால் பிற பிரச்சனைகள் எல்லாம் தானாக தேடி வரும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு எப்படியாவது எடையை குறைக்க வேண்டும்.

ஒரு வாரத்தில் குறைக்க முடியுமா? இரண்டு வாரத்தில் என்று நாட்களை எண்ணிக்கொண்டு உணவுகளில் பல்வேறு மாற்றங்களையும் விதவிதமான டயட்டுகள், உடற்பயிற்சிகள் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த முட்டை கோஸ் ஜூஸ் சிறந்த பலனை அளிக்ககூடியது. இதனை குடிப்பதால் உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழிக்க வல்லது. இதில் குறைவான கலோரியே உள்ளதால் உங்களுக்கு கொழுப்பும் சேராது.இதனால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.

அல்சர் :

நேரம் மாற்றி மாற்றி சாப்பிடுவது, தொடர்ந்து காலை உணவு தவிர்ப்பது, அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது, ஹோட்டல் சாப்பாடு போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படக்கூடும்.

அல்சர் கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கும். இதிலிருந்து மீளவும் உங்களுக்கு முட்டைகோஸு தண்ணீர் உதவிடுகிறது. இதில் இருக்கும் விட்டமின் சி இதனை கேபேஜென் என்றும் சொல்வார்கள். இது வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.

புற்றுநோய் :

நோய் குறித்த பயத்தை விட, அதனால் ஏற்படுகிற பின் விளைவுகள், சிகிச்சை முறைகளை நினைத்து தான் பலருக்கும் பயமே வருகிறது,இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் யாவருக்கும் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

இதில் இருக்கக்கூடிய சல்ஃப்போரபேன் என்ற சத்து உடலில் கேன்சர் செல்கள் வளராமல் தடுத்திடும். அதோடு முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான ஐசோசியனேட் இருக்கும் இவை உள்ளுருப்புகளில் குறிப்பாக நுரையிரல்,வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுத்திடும்.

காட்ராக்ட் :

வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் தொடர்பான பிரச்சனையிது. கண் புரை என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு இப்போது வெகு சாதரணமாகிவிட்டது. இதனை கவனிக்காமல் விட்டால் சில நேரத்தில் நம் பார்வையையே பறிக்கும் ஆபத்து கூட இருக்கிறது.

ஆரம்ப நிலையில் காட்ராக்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது காட்ராக்ட் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரை குடித்து வர வேண்டும்.

சருமப் பிரச்சனைகள் :

சருமத்தில் ஏற்படக்கூடிய பரு,கரும்புள்ளி,ஆக்னீ போன்றவற்றால் உங்கள் முகமே பொலிவிழந்து காணப்படுகிறதா அப்படியானால் நீங்கள் இதனை பயன்படுத்தி நல்ல பலன் அடையலாம்.

சாதரண பரு தானே என்று நினைத்துக் கொண்டாலும் அது நம் தன்னம்பிக்கையையே சில நேரங்களில் சிதைத்து விடக்கூடியது.இதில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இவற்றை தொடர்ந்து குடித்து வருவதால் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி :

ஒவ்வொரு உயிரினங்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும், ஆரோக்க்கியமாக நோய் நொடியில்லாமல் வாழ வேண்டுமானால் அவர்களுக்கு கண்டிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும்.
முட்டைகோஸ் சாற்றில் இருக்கக்கூடிய ஹிஸ்டிடின் என்ற சத்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும்.

மூளை செயல்பாடுகள் :

உங்கள் மூளையின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும், அவை கொடுக்கும் சமிக்கைகளினால் தான் உங்களது ஒவ்வொரு செயலும் இருக்கின்றன.

முட்டைகோஸ் சாற்றில் இருக்கக்கூடிய விட்டமின் கே மற்றும் ஆந்தோசியானின்ஸ் ஆகியவை மூளையில் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் பிரச்சனை வராமல் தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் இப்போதிருந்தே கண்டிப்பாக முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வர வேண்டும்.

தலைமுடிக்கு :

ஆம், முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரில் உங்கள் கூந்தலை அலசுவதால் அது தலைமுடிக்கு நன்மைகளை கொடுக்கிறது. முட்டைகோஸ் தண்ணீரில் சல்ஃபர் இருக்கும். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

அதோடு இதில் பொட்டாசியம், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் இ இருக்கிறது இவை உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.
மாசு மருவற்ற பொலிவான சருமம் கிடைக்க தொடர்ந்து முட்டைகோஸ் தண்ணீரை பயன்படுத்தலாம்.

தலைவலி :

ஒற்றைத் தலைவலி அல்லது, ஸ்டரஸ் பாதிப்பினால் தலைவலி உண்டானால் அதிலிருந்து மீள, விரைவில் குணமாக இதனைச் சேர்க்கலாம். முட்டைகோஸ் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அதனை ஆவி பிடிக்க வேண்டும்.
ஒரு பக்கம் முட்டைகோஸ் ஜூஸ் குடித்தால் கூட இப்பிடி ஆவி பிடியுங்கள் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வயதான தோற்றம் :

ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடும் போது, நமக்கு வயதாகிவிட்டதே என்ற ஒரு கவலை ஒரு கணம் வந்து போகாமல் இருக்காது. எல்லாருக்கும் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கிறது.

அவர்கள் எல்லாருக்கும் வரப்பிரசாதமாக இருப்பது இந்த முட்டைகோஸ் ஜூஸ் தான்.
இதில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன் ஆகியவை நிறைந்திருக்கிறது. இவை குடிப்பதால் உங்களது விரைவில் வயதான தோற்றம் உண்டாவதை கட்டுப்படுத்தும்.

விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் :

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் அதிகப்படியான மினரல்ஸ் இருக்கிறது. இதனை வேக வைத்த தண்ணீரை தினமும் குடிப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்திடும் தொடர்ந்து உடல் சோர்வடையாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவிடும்.

இதய நோய் :

உடல் எடை அதிகரிப்பது மாரடைப்பிற்கு ஓர் முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர சில நோய்க்கிருமிகளும் காரணமாய் இருக்கிறது.

இதில் இருக்கக்கூடிய விட்டமின் கே மற்றும் சி ஆகியவற்றினால் உடலில் இருக்கக்கூடிய கிருமிகளுக்கு எதிராக போராடக்கூடியது. அதனால் உடலில் ஏரளமான நன்மைகள் நிகழும் அவற்றில் ஒன்று புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

கல்லீரல் செயல்பாடுகள் :

முட்டைகோஸ் ஜூஸில் இண்டோல் 3 கார்போனைல் இருக்கிறது. இவை உங்கள் கல்லீரலில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை தவிர்த்திடும். ப்ரோட்டீன் உற்பத்தி, ஹார்மோன் மாற்றங்கள்,க்ளைகோஜென் ஆகியவற்றிற்கு எல்லாம் கல்லீரல் முக்கியப் பங்காற்றுகிறது.

அவற்றில் ஏதேனும் சிறு பாதிப்பு உண்டானால் கூட ஒட்டு மொத்த உடல் இயக்கமே பாதிக்கப்படக்கூடும்.
இதனைத் தடுக்க முட்டைகோஸ் ஜூஸ் குடிக்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி3 1516782188

Related posts

கோதுமை பாயாசம் செய்வது எப்படி?

nathan

சத்தான வெஜிடபிள் கேழ்வரகு அடை

nathan

சிக் உடலுக்கு ஜி.எம் டயட்!

nathan

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

nathan

மாதுளை பழ தோலில் இவ்வளவு நன்மை இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

கழிவுகளை 5 நிமிடத்தில் அடித்து விரட்டும் கோதுமை புல் ஜூஸ்!தெரிந்துகொள்வோமா?

nathan

சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்வோமா?

nathan

ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும்!!

nathan

கம்பு, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது -எப்படி செய்வது தெரியுமா?

nathan