30.7 C
Chennai
Tuesday, Jul 15, 2025
24 1466746364 1 men
எடை குறைய

3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

தினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா? அதைக் குறைக்க கண்ட டயட்டைப் பின்பற்றுகிறீர்களா? கவலையை விடுங்கள்.

காலை உணவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை உட்கொண்டு வந்தாலே அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம். மேலும் இந்த காலை உணவு மிகவும் சுவையாக விரும்பி சாப்பிடும் வகையில் தான் இருக்கும். நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.

ஆரோக்கியம் மேம்படும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள காலை உணவு உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலை வலிமையாக்கும். மேலும் இந்த காலை உணவு உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, குடலையும் சுத்தம் செய்யும். இந்த காலை உணவு மலச்சிக்கல், மோசமான குடலியக்கம் மற்றும் உடல் பருமன் இருப்போருக்கு சிறந்த ஒன்று.

தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது இந்த காலை உணவு மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் ஏராளமாக உள்ளது.

ஒரு மாதத்தில் 3 கிலோ குறையும் இந்த காலை உணவை எடையைக் குறைக்க விரும்புவோர் உட்கொண்டு வந்தால், ஒரு மாதத்தில் 3 கிலோ வரை குறைக்கலாம். மேலும் வயிற்றைச் சுற்றி தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் குறைந்து தொப்பை மறைவதையும் காணலாம்.

காலை உணவு செய்ய தேவையான பொருட்கள்: உலர்ந்த ப்ளம்ஸ் – 5-7 குறைந்த கொழுப்புள்ள தயிர் – 1 கப் ஆளி விதை பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை: * இந்த காலை உணவை முதல் நாள் மாலையிலேயே தயார் செய்து கொண்டு, காலையில் சாப்பிட நன்றாக இருக்கும். * அதற்கு உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை 100 மிலி கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். * பின் ஒரு கிண்ணத்தில் கொக்கோ பவுடர், ஆளி விதை பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தயிரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள ப்ளம்ஸை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சேர்த்து நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். * மறுநாள் காலையில் இதனை உட்கொள்ளுங்கள். ஆனால் இதனை சாப்பிட்ட முதல் நாள், சற்று வித்தியாசமான உணர்வை உணர்வீர்கள். அதற்கு அஞ்ச வேண்டாம். தைரியமாக உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

குறிப்பு தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது, தினமும் உடற்பயிற்சி செய்து வருவதோடு, உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.

24 1466746364 1 men

Related posts

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

nathan

உடல் எடையை குறைக்க ஓட்ஸ்? தயாரிப்பது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் உடல் எடையைக் குறைக்கும் காலை உணவுகள்!

nathan

பயனுள்ள தகவல்.. தொப்பையை குறைக்கும் அதிசய ஜூஸ்!!!!

nathan

உடல் பருமனை அதிரடியாக குறைக்கும் “பேலியோ” டயட் முறைக்கு உதவும் சமூக வலைதளம்!

nathan

உடல் எடையை குறைக்கணுமா ? – எளிய வழி

nathan

உடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)

nathan

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான சில டிப்ஸ்.

nathan

மெலிந்த உடல் பருக்க – தந்த ரோகம் – பல்பொடி –

nathan