28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201709041350401654 1 Cardamom. L styvpf
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இதை மென்று தின்றால் ஆண்மை அதிகரிக்குமாம்?

விறைப்புத்தன்மை கோளாறு என்பது இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதுதான்.இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, உடல் உழைப்பின்மை, சோம்பேறித்தனம், ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது என பல விஷயங்கள் நம்முடைய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்க்க காரணம்.

முறையான உடற்பயிற்சியும் சரியான ஊட்டச்சத்தமிக்க உணவும் இருந்தாலே போதும்.
அந்தவகையில், ஏலக்காய் பாலுணர்வைத் தூண்டுவதிலும் ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் முக்கிய பங்கு வகிக்கிறது.பாலுணர்வை அதிகரிக்கும் உணவுகள் என சில உள்ளன. அதில் அத்திப்பழம், மாதுளை போன்றவற்றுடன் ஏலக்காயும் சிறப்பாகச் செயல்படும். ஏலக்காயில் உள்ள மூலப்பொருள் தான் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஏலக்காயில் இருக்கும் சினியோல் எனும் மூலப்பொருள் இரத்த ஓட்டம் அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது. இது ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.
அதோடு ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி, மற்றும் சி என நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கொட்டிக் கிடக்கின்றன.

அதற்காக ஏலக்காயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிடக் கூடாது. ஏலக்காய் எப்போதும் சிறிதளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகளவில் உணவில் ஏலக்காயைச் சேர்ப்பது, அளவிற்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பது போல ஆகிவிடும். இதை நீங்கள் டீ அல்லது தேன், சுடுநீரில் கலந்து உட்கொண்டு வரலாம்.

அல்லது தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும்முன் இரண்டு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இது வாய் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்வையும் சேர்த்து கொடுக்கும்.

நீங்கள் தினமும் ஏலக்காயை டீயில் அல்லது தேனில் சேர்த்து குடித்து வந்தால், நரம்பு தளர்ச்சி சரியாகும், நரம்புகள் வலுபெறும். தினமும் காலை, மாலை இருவேளை குடித்துவர அதிகம் பலன்களைப் பெற முடியும்.201709041350401654 1 Cardamom. L styvpf

Related posts

அருமையான ஓட்ஸ் ரொட்டி

nathan

ஆரோக்கியமான வழியில் எடையை குறைக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு

nathan

தெரிஞ்சிக்கங்க…பலரும் கேள்விப்பட்டிராத ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய பழங்களின் தோல்கள்!!!

nathan

நீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்

nathan

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… ப்ராக்கோலி சூப்

nathan

வெந்தயம்… கசப்பு தரும் இனிமை!

nathan

உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கா…? அப்ப இத படியுங்க…

nathan