29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1fgdff 16087
ஆரோக்கிய உணவு

தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு சுடுதண்ணீர் குடியுங்கள்.

தினமும் காலை எழுந்து பல் துலக்கிய பின்னர் என்ன செய்வீர்கள்? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு பதில் இருக்கும். சிலர் ஒரு சொம்பு நிரைய தண்ணீர் குடிப்பீர்கள், சிலர் காஃபி குடித்தால் தான் அந்த நாள் வேலையே ஆகும் என்பார்கள், வேறு சிலர் நேராகக் காலை உணவைச் சாப்பிடுவார்கள்.

இதுவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது, பாலில் தேன் கலப்பது, அருகம் புல் ஜூஸ், வாழத்தண்டு ஜூஸ் எனப் பல வீட்டு மருத்துவத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

ஏனென்றால் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் எந்தவொரு உணவும் நமது உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டது.

பெரும்பாலும் யாரும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காரமான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிட மாட்டோம், அதே போல் நெய் சாப்பிடுவதையும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

ஆனால் சமீபத்திய பல ஆராய்ச்சி முடிவுகளும், நமது ஆயுர்வேதமும் நாம் எதிர் பாராத ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதில் பல நன்மைகள் கிடைக்கும் என்பதே அது.

ஒரு ஸ்பூன் நிறைய நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டு ஒரு 30 நிமிடங்கள் கழித்தே வேறு எந்த உணவையும் சாப்பிட வேண்டும். முதலில் இதனால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும்:

நமது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருப்பதின் படி பார்த்தால் நெய்யில் இருக்கும் ‘ரசா’ என்னும் சத்து உடலில் இருக்கும் செல்களை புத்துயிர் அடையச் செய்கிறது. ஆகையால் காலையில் நெய் சாப்பிடுவதன் மூலம் நமக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் செல்களை பராமரித்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

சருமத்தை பொலிவடைய செய்யும்:

செல்கள் இறந்து போவதால் நமது சருமம் பொலிவிழந்து வாடிப் போய் விடிகிறது. நெய் சாப்பிடுவதால் செல்கள் புத்துயிர் பெற்று சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது. மேலும் சருமம் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள நெய் உதவுகிறது. சொரியாஸிஸ் போன்ற தோல் நோய்களையும் இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மூட்டு வலி மற்றும் வாத நோயில் இருந்து காப்பாற்றும்:

நெய் ஒரு இயற்கையான மசகு எண்ணெய் ஆகும், ஆதனால் இது முட்டி போன்ற எலும்புக் கூடும் பகுதிகளில் இருக்கும் தசைகள் வறட்சி அடையாமல் பாதுகாத்து வழுவழுப்பு தன்மையை தக்க வைக்கிறது. இதனால் மூட்டு வலி அல்லது வாதங்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம். நெய்யில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு சத்து எலும்புகளின் வலிமை அடையச் செய்யும்.

மூளை செல்களை சுறுசுறுப்படைய செய்யும்:

காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது மூளையில் உள்ள அணுக்களைத் தூண்டிவிட்டு மூளையைச் சுறு சுறுப்படைய செய்யும். மூளை வேகமாகச் செயல்படுவதால் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெற்று ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மூளையைப் பாதிக்கும் நோய்க்குறிகளிடம் இருந்து நம்மை இது பாதுகாக்கும்.

உடல் எடையைக் குறைக்கும்:

பல ஆண்டுகளாகச் சொல்லப்படும் நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்கிற கூற்றுக்கு மாறாகத் தினமும் காலை 5-10 மி.லி நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது ஆராய்ச்சி முடிவுகள்.

மெடபாலிக் அளவை அதிகரித்து உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை இது வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கிறது.

முடி உதிர்வைத் தடுக்கும்:

தினமும் காலை எழுந்தவுடன் நெய் சாப்பிடுவது உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முடியை மிருதுவாகவும், நீளமாகவும் மாற்றி வேர்கால்களை வலிமை அடையச் செய்யும். இதனால் முடி உதிர்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.

பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடுவதையே வெறுப்பவர்கள் கூட எந்தவொரு பயமும் இல்லாமல் நெய்யைச் சாப்பிடலாம்.

பால் தொடர்பான பொருட்களைச் சாப்பிடுவதால் வாந்தி வரும் என்பவரா நீங்கள், கவலை வேண்டாம் ‘லேக்டோ இண்டாலரன்ஸ் உள்ளவர்கள் கூட நெய்யைச் சாப்பிடலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. நமது உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதைத் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியும் இதனால் அதிகரிக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி1fgdff 16087

Related posts

இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் நெய்யும் வெல்லமும் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும்!!

nathan

நீண்ட நாட்கள் பொருட்கள் கெடாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

தயிர் சாதம் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இதோ எளிய நிவாரணம்! மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் நார்ச்சத்து உணவுகள்

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.சூப்பர் டிப்ஸ்

nathan