27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201802141426209307 1 soakalomen. L styvpf
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கணக்கிட முடியாத அளவு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

பாதாமில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.

பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

கர்ப்பிணி பெண்கள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் போலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். போலிக் அமிலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்.201802141426209307 1 soakalomen. L styvpf

Related posts

கால்சியம் சத்து குறைபாடா? நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

மணத்தக்காளிக்காய்

nathan

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளையெல்லாம் நீங்க தள்ளி வச்சுடுங்க!!

nathan

மணத்தக்காளி கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

nathan

தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்! காளான் பிரியரா நீங்கள்? எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும்?

nathan

உருளைக் கிழங்கின் மகத்துவம்

nathan

சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்!

nathan