25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
migraine 06 1491453814
மருத்துவ குறிப்பு

வெறும் உப்பைக் கொண்டு ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி? இதை படிங்க…

சாதாரணமாக தலைவலி வந்தாலே, நாம் பாடுபடுகிறோம். அதிலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், இவ்வுலகில் அவர்களைத் தவிர வேறு யாரும் அம்மாதிரியான வலியை அனுபவித்து உயிர் வாழ முடியாது. அவ்வளவு கொடுமையாக இருக்கும்.

ஒற்றை தலைவலி எப்போது வேண்டுமானாலும் வரும். அதிலும் வலி இருக்கும் போது சூரியக்கதிர்கள் பட்டால், அப்போது தாங்கவே முடியாது. இந்த ஒற்றை தலைவலி தீவிரமாக இருக்கும் போது, குமட்டல், வாந்தி, கால்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு அதிகரிக்கும், பார்வை மங்கலாகும். இப்பிரச்சனைக்கு அவ்வளவு எளிதில் சிகிச்சையின் மூலம் தீர்வு காண முடியாது. இருப்பினும் நம் தமிழ் போல்ட் ஸ்கை உலக சுகாதார தினத்தையொட்டி, ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபட உதவும் ஓர் எளிய வழியைக் கொடுத்துள்ளது. அது என்ன என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல் உப்பு உப்பு பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதில் மிகவும் சிறந்தது. எனவே நல்ல தரமான உப்பை எப்போதும் வாங்குங்கள். அதிலும் இமாலய உப்பு மிகவும் நல்லது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கவும், உடலில் அல்கலைனைத் தக்கவைக்கவும், எலக்ட்ரோலைட்டுக்களை நிலையாக வைத்திருக்கவும் உதவும்.

எலுமிச்சை ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட உதவும் மற்றொரு பொருள் எலுமிச்சை. இது உடலை சுத்தம் செய்வதோடு, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

தேவையான பொருட்கள்: இமாலய கல் உப்பு – 1/2 டீஸ்பூன் எலுமிச்சை – பாதி

செய்முறை: முதலில் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒற்றை தலைவலியின் போது குடித்தால், சில நிமிடங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு ஒற்றை தலைவலி வருவதற்கு மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளும் ஓர் காரணம் என்பதால், இனிமேல் அந்த தவறை செய்து இந்த கொடுமையான பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

migraine 06 1491453814

Related posts

வயோதிகத்தின் வாசல் கண்களை கவனியுங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…வரும் முன் காத்து, கண்களை பாதுகாப்போம்

nathan

சூப்பர் டிப்ஸ்..சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை…

nathan

எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம்

nathan

விருந்து வையுங்கள் குணம் தெரிந்துவிடும்

nathan

கருக்குழாய் அடைப்பும் நவீன சிகிச்சைகளும்

nathan

அவசியம் படிக்க.. கர்ப்ப கால மூலநோய் – தவிர்க்கும் வழிமுறைகள்

nathan

இதோ எளிய நிவாரணம்! வறட்டு இருமலை முற்றிலும் நீக்கும் மஞ்சளின் மருத்துவ பயன்கள்…!!

nathan

உண்மையில் எந்த வயதில் ஆண்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சியடைகிறது?

nathan