எல்லோருக்கும் நொருக்குத் தீனி சாப்பிட பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அப்படி அனைவருக்கும் பிடித்த ஒன்று தான் சோளக்கருது. சோளத்தை சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் கடைகளில், இனிப்புச் சோளம் என்று மசாலா , வெண்ணெய் கலந்து செய்யப்படும் வெளி நாட்டு சோளம் நல்லதல்ல. மரபணு மாற்றப்பட்டதாகும். அதற்கு பதிலாக நமது நாட்டு சோளத்தை சாப்பிடுவதால் மிகவும் நன்மைகள் தரும்.
வாருங்கள் இப்போது நாம் சோளத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி படித்து தெரிந்துக் கொள்வோம்
இதய ஆரோக்கியம் சோளத்தை வேக வைத்து சாப்பிடும் போது, அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பார்வையை மேம்படுத்தும் ஸ்வீட் கார்னில் உள்ள லூடின் என்னும் உட்பொருள், பார்வை நரம்புகளை வலிமைப்படுத்தி, பார்வையை மேம்படுத்தும்.
ஆற்றலை அதிகரிக்கும் சோளத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள், உடல் எடையை அதிகரிப்பதற்கு பதிலாக, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். ஆகவே நாள் முழுவதும் உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், ஸ்நாக்ஸாக சோளத்தை சாப்பிடுங்கள்.
மலச்சிக்கல் குறையும் சோளத்தில் உள்ள வளமான அளவிலான நார்ச்சத்து, மலத்தை இளகச் செய்து, குடலியக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் சோளத்தில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மனித உடலில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
எடையைக் குறைக்கும் சோளத்தில் கலோரி மற்றும் சுக்ரோஸ் அளவு மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சோளம் மிகவும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும்.
நல்ல பாக்டீரியா சோளம் குடலில் நல்ல ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை மேம்படுத்தி, செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.
க்ளுட்டன்-ப்ரீ க்ளுட்டன் சகிப்புத்தன்மை கொண்டவர்களுக்கு, கோதுமைக்கு சிறந்த மாற்றாக சோளம் இருக்கும். ஏனெனில் சோளத்தில் க்ளுட்டன் இல்லை.