மனித மூளை என்பது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. மூளையை அடிப்படையாக கொண்டு தான் உடலில் பல இயக்கங்கள் நடக்கின்றன. இதன் அடிப்படையில், நாம் தினசரி சாப்பிடும் நமக்கு பிடித்த உணவுகள் நம் மூளையை பாதிக்கும் என உங்களுக்கு தெரியுமா? மூளையை பாதிக்கும் இந்த வகையான உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
1. மைக்ரோவேவ் பாப்கார்ன் மக்காச்சோளம் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்றாலும், மைக்ரோவ்வேவ்வில் தயாரிக்கப்படும் பாக்கார்ன்களில் அதிக அளவு கொழுப்பு அடங்கியுள்ளது. இந்த கொழுப்பு மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றததல்ல.
2. சோடியம் நிறைந்த உணவுகள் சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதினால், உடலின் செயல் திறன் குறைகிறது. இது மூளைக்கும் உகந்ததல்ல. எனவே அதிக அளவு சோடியம் கொண்ட உணவுகளை தவிர்க்கலாம்.
3. பிரைடு மற்றும் துரித உணவுகள் பிரைடு மற்றும் துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுதல் மூளைக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் உகந்ததல்ல.
4. சீஸ் மற்றும் வெண்ணெய் சிலர் தினமும் அல்லது அடிக்கடி கூட சீஸ் மற்றும் வெண்ணெய்யை சாப்பிடுவார்கள். இதில் உள்ள கொழுப்புகள் மூளையை பாதிக்கும்.
5. டிரென்ஸ் கொழுப்பு டிரென்ஸ் கொழுப்பு உணவுகள் உங்கள் உடலில் அதிகப்படியான கொழுப்புகளை உண்டாக்குகின்றன. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காற்று நிரப்பிய பாக்கெட்களில் கிடைக்கும் திண்பண்டங்களை அதிகம் உண்பதை தவிர்க்கவும்.