28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
asthma lungs 11 1494479013
மருத்துவ குறிப்பு

ஆஸ்துமா இருக்கா? சரியா மூச்சுவிட முடியலையா? அப்ப இத படிங்க!

ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும். இந்நோயானது நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்கள் வீக்கமடைந்து, மூச்சுக்காற்று செல்லும் வழி சுருங்குவதால் ஏற்படும். நாள்பட்ட நோய்களானது வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படச் செய்யும்.

ஆஸ்துமா இருந்தால், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம், இருமல் போன்ற பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். குறிப்பாக இருமலானது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அடிக்கடி வரும். ஆஸ்துமாவிற்கு பெரும்பாலான மக்கள் இன்ஹேலரைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் எத்தனை நாட்கள் தான் இப்படி இன்ஹேலரைப் பயன்படுத்துவீர்கள். எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் அற்புத பானங்கள் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தாலே இன்ஹேலருக்கு குட்-பை சொல்லலாம்.

ஜூஸ் #1 தேவையான பொருட்கள்:   பச்சை ஆப்பிள் – 2 செலரி – 6 தண்டுகள் பார்ஸ்லி – 1 கட்டு எலுமிச்சை – 1/4

ஜூஸ் #2 தேவையான பொருட்கள்: அன்னாசி – 1/4 சோம்பு – 1 ஸ்பூன் கேல் – 8 தண்டுகள் முள்ளங்கி – 3 துண்டுகள் எலுமிச்சை – 1/2

ஜூஸ் #3 தேவையான பொருட்கள்: அன்னாசி – 1/4 வெள்ளரிக்காய் – 1 மிளகு – 1/2 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் – 1/2 ஸ்பூன் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் – 2 கப் கிரான்பெர்ரி ஜூஸ் – 1 கப் மாதுளை ஜூஸ் – 1 கப்

தயாரிக்கும் முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஜூஸ்களும் ஒரே மாதிரியான செய்முறையைக் கொண்டது. மூன்று ஜூஸ்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

நன்மைகள்: இந்த ஜூஸ்களில் உள்ள மருத்துவ குணங்கள், நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களில் இருக்கும் வீக்கத்தைக் குறைத்து, மூச்சுக்குழாயை விரிவடையச் செய்து, மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை நீக்கி, ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

asthma lungs 11 1494479013

Related posts

நாப்கினால் ஏற்படும் பேராபத்துகள் !பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தைப்பேறு குறையும் காலகட்டங்கள்

nathan

தூக்கமின்மையை விரட்டும் குத்தூசி!

nathan

கருமுட்டை வெளிப்படுதலின் போது பெண்கள் அழகாக தெரிவதற்கான காரணங்கள்!!!

nathan

மூளை காய்ச்சலுக்கு முடிவு கட்டுவோம்!

nathan

மருத்துவ குணம் வாய்ந்த முருங்கை இலைப் பொடி !சூப்பர் டிப்ஸ்..

nathan

இதோ எளிய நிவாரணம்! ஒழுங்கற்ற மாதவிடாயால் அவதியா? அதனை சீராக்க இந்த பயிற்சிகளை செய்திடுங்க

nathan

உடல் சூடு, கண்எரிச்சலை உடனடியாக போக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்!

nathan