34 C
Chennai
Wednesday, Jul 2, 2025
184 3 cc8734f89866de672c4efe96c8507555
மருத்துவ குறிப்பு

ஒரே வாரத்தில் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற… இதை முயன்று பாருங்கள்

ஊளைச சதையை குறைக்கும் சக்தி கொள்ளு பருப்புவில் உள்ளது. மேலும் கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.

உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது.

கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. ஊறவைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால், முதலில் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்துவிட்டு பிறகு வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் வசதிக்கேற்ற மாதிரி தொடரலாம்.

ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். மிளகு, சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது. கொள்ளை ஆட்டி பால் எடுத்து தண்ணீர்க்குப் பதில் அதை சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.184 3 cc8734f89866de672c4efe96c8507555

Related posts

அருமையான பானம்! கொழுப்பை கடகடவென கரைக்கும் அற்புதம்

nathan

ஆஸ்துமா இருக்கா? சரியா மூச்சுவிட முடியலையா? பிரச்சனைக்கான தீர்வுதான் இது.!

nathan

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

nathan

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

nathan

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால், மன அழுத்தம் குறையுமாம்! – ஆய்வில் தகவல்

nathan

பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா வெரிகோஸ் வெயினை குணமாக்குவது எப்படி?அப்ப உடனே இத படிங்க…

nathan

சலரோகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க!….

sangika

உங்களுக்கு ஆஸ்துமா தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

nathan