27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
cancer 27 1482839633
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு இவையெல்லாம் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் எனத் தெரியுமா?

என்ன தான் புற்றுநோயைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தாலும், ஏராளமான மக்கள் இறக்கின்றனர். இதற்கு காரணம் இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் இருப்பது தான். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை கவனித்து ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தால், அதனால் உயிரிழப்பதைத் தடுக்கலாம்.

ஆனால் பலருக்கும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷாராகிக் கொள்ளுங்கள்.

அறிகுறி #1 மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்வார்களாம்.

அறிகுறி #2 பலவகையான புற்றுநோய்களான இரத்த புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிற்கு நாள்பட்ட இருமல் மற்றும் நெஞ்சு வலி ஆரம்ப கால அறிகுறிகளாகும். அதிலும் நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஆரம்பித்து தோள்பட்டை வரை இருக்கும்.

அறிகுறி #3 இரத்த புற்றுநோய் இருந்தால், அடிக்கடி காய்ச்சல் வரக்கூடும். எனவே அடிக்கடி காரணமின்றி காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளுங்கள்.

அறிகுறி #4 உணவு அல்லது நீர் விழுங்குவதில் சிரமத்தை உணர்ந்தால், தொண்டை அல்லது உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது

அறிகுறி #5 நிணநீர் மண்டலத்தில் அடிக்கடி வீக்கங்கள் ஏற்பட்டால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

அறிகுறி #6 அளவுக்கு அதிகமான சோர்வு மற்றும் பலவீனம், பல வகையான புற்றுநோய்க்கு அறிகுறிகளாகும். அதுவும் எந்த ஒரு காரணமும் இல்லாமல், அளவுக்கு அதிகமாக தூக்க உணர்வைப் பெற்றாமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

அறிகுறி #7 பெண்கள் வயிற்று உப்புசத்துடன், அடிவயிற்றில் தொப்பை வர ஆரம்பித்தால், உடனே மருத்துவரை அணுகி கருப்பை புற்றுநோய் உள்ளதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

அறிகுறி #8 எதுவும் சாப்பிடாமல் வயிறு நிறைந்திருப்பதை உணர்ந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள். ஏனெனில் அது கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

அறிகுறி #9 இடுப்பு அல்லது அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டு, வயிற்று உப்புசத்தை உணர்ந்தால், அதையும் சாதாணமாக நினைக்காதீர்கள். அதிலும் பல நாட்களால் இம்மாதிரியான உணர்வு இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

அறிகுறி #10 மலம் கழிக்கும் போது, அதில் இரத்தம் கலந்திருந்தால், அது மலக்குடல் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

அறிகுறி #11 காரணமின்றி உடல் எடை குறைகிறதா? அப்படியெனில் அது குடல் மற்றும் செரிமான மண்டல புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.

அறிகுறி #12 வயிற்று பிடிப்புகள் அல்லது அடிக்கடி வயிறு அசௌகரியமாக இருந்தால், அது குடல் புற்றுநோய் இருப்பதற்கு வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.

cancer 27 1482839633

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மீண்டும் பயன்படுத்த கூடிய துணி நாப்கின்களை பயன்படுத்துவது சரிதானா?

nathan

முதலுதவிகள்… முத்தான அறிவுரைகள்! ஒரு டஜன் யோசனைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம்

nathan

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

nathan

கழிவறையில் 10-15 நிமிஷத்துக்கு மேல உட்கார்ந்து இருப்பீங்களா… உடனே இத கண்டிப்பாக வாசியுங்க….

nathan

வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

nathan

அலர்ஜியை சமாளிப்பது எப்படி?

nathan

இந்த அறிகுறிகள் வந்த பின்தான் ஹார்ட் அட்டாக் வருமாம்… ஜாக்கிரதையா இருங்க…!

nathan

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

nathan