27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
weight loss 06 1488775260
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா இந்த கஞ்சியை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும்.

  1. தற்போது உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வளிக்க பல வழிகள் இருந்தாலும், அனைத்துமே அனைவருக்கும் மாற்றத்தைக் காண்பிக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு உடனடி மாற்றங்கள் தெரியும், இன்னும் சிலருக்கு எடையில் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும்

    உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். அதோடு கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைத்து, செரிமானத்தை மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற உடலைப் பெற உதவும். சரி, இப்போது அந்த அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் வேறு சில நன்மைகள் குறித்து காண்போம்.

    தேவையான பொருட்கள்: கைக்குத்தல் அரிசி – 1 கப் தண்ணீர் – 8 கப் சூரியகாந்தி எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 4 ஸ்பூன்

    தயாரிக்கும் முறை: * முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் அரிசியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 15 நிமிடம் அரிசியை வேக வைக்கவும். சாதம் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்கவும்.

    * பின் ஒரு பிளெண்டரை எடுத்து, அதில் இந்த சாதத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, வேண்டுமானால் சிறிது பட்டை தூள் சேர்த்துக் கலந்து கொண்டால், அரிசி பால் கஞ்சி தயார்!

    பயன்படுத்தும் முறை: இந்த அரிசி பால் கஞ்சியை தினமும் 2 டம்ளர் குடிக்க வேண்டும். குறிப்பாக இதை காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால், 2-3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இப்போது இந்த அரிசி பால் கஞ்சியைக் குடிப்பதால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்து காண்போம்.

    நன்மை #1 இந்த கஞ்சியைக் குடித்தால், இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்றவைகளின் தாக்கத்தைத் தடுக்கலாம். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் தான் காரணம்

    நன்மை #2 இந்த கஞ்சியினுள் உள்ள உட்பொருட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டி, உடலுக்கு ஓர் நல்ல பாதுகாப்பு கவசத்தை அளித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

    நன்மை #3 அரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. மேலும் இதைக் குடித்தால், உடலால் உண்ணும் உணவுகளில் உள்ள வைட்டமின் சத்துக்களை எளிதில் உறிஞ்ச முடியும்.

    குறிப்பு உடல் எடையைக் குறைக்க அரிசி பால் கஞ்சியைக் குடித்தால், தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    weight loss 06 1488775260

Related posts

பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான்

nathan

உடற்பயிற்சியும், டயட்டும் இல்லமால் எடையை குறைப்பது எப்படி?..

sangika

உடலில் சேரும் கொழுப்புக்களை விரைவில் கரைய வைக்கும் நேச்சுரல் ஜூஸ்கள்!!

nathan

பேலியோ டயட் என்றால் என்ன?

nathan

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்…

nathan

அசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்!!!

nathan

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க சிறந்த வழிகள்!…

sangika

இவ்வளவு எளிதாக எடையைக் குறைக்க முடியும்…..

sangika

ஆடாமல், அசையாமல் உடல் எடையை குறைக்க உதவும் 7 எளிய வழிகள்!!!

nathan