26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
jala neti 6 17285
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன

கபாலபதி கிரியா பயிற்சி

இந்தப் பயிற்சி, நுரையீரலில்  தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும். மெதுவாக மூச்சை மூக்கு வழியாக உள்ளே இழுத்து, வெளியேவிட வேண்டும். இப்படி ஒரு நிமிடத்துக்கு 120 முறை  மூச்சை வெளியேற்ற வேண்டும். தினமும் நாம் சுவாசிக்கும் அசுத்தக் காற்றிலிருக்கும் தூசிகள் கழிவுகளாக உடலில் தேங்கியிருக்கும். இந்தப் பயிற்சியைச் செய்தால், அவை அனைத்தும் வெளியேறும். நாள்பட்ட சளி மற்றும் மூச்சுவிட சிரமப்படுவர்கள் இதை தொடர்ந்து செய்யலாம். 10-15 நிமிடங்கள் இதைச் செய்யலாம்.

 

jala neti 6 17285

ஜல நேத்தி – கிரியா பயிற்சி

ஜல நேத்திக் குவளையைக் கொண்டு இந்தக் கிரியா பயிற்சியைச் செய்யலாம் (படத்தில் காட்டியுள்ளதுபோல்). ஜல நேத்திக் குவளையை எடுத்து அதில் இளஞ்சூடான நீரை நிரப்ப வேண்டும். ஒரு நாசிக்குள் நீரைச் செலுத்த வேண்டும். அடுத்த நாசியின் வழியாக நீர் வெளியேறிவிடும். இதேபோல் மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும். (இரு பக்கமும் தலா ஒருமுறை செய்தால் போதுமானது). நீருடன் சிறிது உப்பு கலந்து பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சியால் மூக்கடைப்பு, சளி, தும்மல் போன்றவை குறையும். வாரம் ஒருமுறை செய்தால் சைனஸ், ஆஸ்துமாவிலிருந்து மெள்ள மெள்ள விடுபடலாம்.

இந்த இரண்டு கிரியா பயிற்சிகளும் எளிமையாகச் செய்யக்கூடியவை.  ஆனாலும் இவற்றை ஒரு யோகா மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது. முதன்முறை செய்யும்போது யோகா மருத்துவரின் கண்காணிப்பில் செய்வது சிறந்தது. நேத்தி பயிற்சிகளும், தவுத்தி (dhouti) பயிற்சிகளும் சுவாசம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களின் தீவிரத்தைக் குறைக்கும். இவை தவிர பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.

பிராணயாமம்

பஸ்திரிகா பிராணயாமம்

தரையில் ஆசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து, முதுகு போன்றவற்றை நேராக வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கைகளை நேராக வைத்துக்கொண்டு இரு நாசித்துவாரங்களின் வழியாக வேகமாக மூச்சை உள்ளிழுத்து, வேகமாக வெளியே விட வேண்டும். இப்படி ஒருவேளைக்கு 10 முறை செய்ய வேண்டும். இதைச் செய்வதால், நெஞ்சில் கட்டியாக இருக்கும் சளி மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கு அடைத்துக்கொண்டு சுவாசிக்கச் சிரமப்பட்டு, வாயால் சுவாசிப்பவர்கள் இந்தப் பயிற்சிகளின் மூலம் நல்ல பலன் பெறலாம். இவை நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும்.

நாடி சுத்தி பிராணயாமம்

நாடி சுத்தி பிராணயாமம்

வலது கை ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் மடித்து வைத்து, வலது நாசியில் கட்டை விரலும், இடது நாசியில் மோதிர விரலாலும் மூடிக்கொள்ள வேண்டும். இடதுபக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வலப்பக்க நாசியின் வழியாக வெளியேவிட வேண்டும். பிறகு வலது பக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வெளியேவிட வேண்டும். இதேபோல் 20 முறை செய்யலாம். இந்தப் பயிற்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்தும். மனதை ஒருநிலைப்படுத்த உதவும். இதை எல்லா வயதினரும் செய்யலாம்.

பிராமரி பிராணயாமம்

இரண்டு கையின் ஆள்காட்டி விரலைக் கொண்டு அதனதன் பக்கம் உள்ள காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிடும்போது `ம் கார…’ (M kara) என்று உச்சரிக்க வேண்டும். இதேபோல் 10 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், அடிக்கடி தொண்டையில் வரும் தொற்றுகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொண்டை கரகரப்பாக இருப்பது, தொண்டையில் சளிஅடைத்துக்கொள்வது போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Related posts

எடை இழக்க சிறந்த 9 பயனுள்ள வழிகள்

nathan

இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்…

nathan

இதோ 5 சூப்பர் டிப்ஸ்! எதிர்மறை சிந்தனை அதிகமா வருதா? நேர்மறையா சிந்திக்க ஆசையா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இருபது வயதுகளில் பெண்கள் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!!

nathan

இந்த ஒரு விஷயத்தை கரெக்ட்டா செஞ்சுட்டு வந்தா 1/2 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம் தெரியுமா?

nathan

கண் இமைகளின் முடி வளர்ச்சி குறைவாக உள்ளதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சாதாரண வெயில் தானே என்று எப்போதுமே எண்ணி விடாதீர்கள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா திருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி இந்திய பெண்கள் நினைக்கக்கூடிய பொதுவான 9 விஷயங்கள்

nathan

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கட்டாயம் இதை படியுங்கள்….

sangika