23.8 C
Chennai
Wednesday, Dec 25, 2024
cover 11 1512973509
மருத்துவ குறிப்பு

மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் கிடைக்கும் நன்மை தெரியுமா?அப்ப இத படிங்க!

வாசனை நிரம்பிய இலைகள் மலர்களை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? வாசம் நாசியை நெருங்கும் வரை, ஆயிரம் கருத்துக்கள் இருந்தாலும், நாசியில் ஏறி சுவாசத்தில் வாசனை கலந்த பின், எதிர்ப்புக் காற்று கூட வராது, மனிதர்களுக்கு இயற்கையின் அன்பளிப்பே, நறுமணம்!

 நறுமண மலர்கள், இலைகளைப் பார்த்திருப்போம், பழங்களைக்கூட பார்த்திருப்போம், ஒரு செடியே நறுமணமாக இருப்பதைப் பார்த்திருக்கிறோமா? தூரத்தில் இருக்கும்போதே, வாசனை மனதை மயக்கும்.

மரிக்கொழுந்து! பசுமை வண்ணத்தில் சிறிய இலைகளுடன், மெலிதான உருவில் தண்டுகளாகக் காட்சியளிக்கும் அவை, இருக்கும் இடங்கள் எல்லாம், நறுமணத்தைப் பரப்பும்!

நமது தேசத்தில் மிக அதிக அளவில் பயிரிடப்படும் மரிக்கொழுந்து, வாசனை மலர் மாலைகளிலும், மலர்ப் பூங்கொத்துக்களிலும் சேர்க்கப்படுகிறது. வாசனை எண்ணை தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவத்திலும், அறை நறுமண மூட்டியாகவும், பயன்படுகிறது. அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மரிக்கொழுந்து, வண்டல் நிலம், கரிசல் நிலம், மற்றும் செம்மண் நிலங்களில் அதிக அளவில் வளரும்.

மிதமான மழை மற்றும் சூரிய ஒளி மரிக்கொழுந்து செடிகளை நன்கு வளர வைக்கும் தன்மை உள்ளவை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, உரம் மற்றும் மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நன்கு செழித்து வளரும் தன்மை மிக்கது. ஓராண்டு காலம் வரை இலைகள் மற்றும் தண்டுகள் மூலம், நறுமணப் பயன்கள் தரும் மரிக்கொழுந்து, அடர்த்தியாக, நிறைய கிளைகளுடன் வளரும்.

மனிதரின் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாகும் தன்மை மிக்கது, சருமத்தில் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக கோளாறுகள், உடல் வலி, தூக்கமின்மை மற்றும் வயிற்று பாதிப்புகளைப் போக்கி, உடலை நலமாக்கக் கூடியது.

மன அழுத்தத்தை போக்கும் :
மன நிலை சார்ந்த மன உளைச்சல், மன வேதனை பாதிப்புகளை சரி செய்து, மன நிலையை சீராக்கும் ஆற்றல் மிக்கது, மரிக்கொழுந்து.

உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாகும் மரிக்கொழுந்து.

உடலுக்கு கெடுதல் செய்யும் வியாதிக் கிருமிகளை அழிக்கும் மரிக்கொழுந்து, சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு, மருந்தாகிறது.

உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது.

உறக்கம் வர: சிலருக்கு மன உளைச்சல்கள் அல்லது உடல் நல பாதிப்புகள் காரணமாக, இரவில் உறக்கம் வராது. ஊரெல்லாம் உறங்கும் நேரத்தில், எனக்கு மட்டும் தூக்கம் இல்லையே, என்று நள்ளிரவில் வருந்திக் கொண்டிருப்பார்கள். இதனால் பணி இடங்களிலும், வீட்டிலும், அவர்களின் பகல் வாழ்க்கை, எதிலும் ஈடுபாடில்லாமல், கழியும். இத்தகைய பாதிப்புகள் நீங்கி, நல்ல தூக்கம் வர உதவும், மரிக்கொழுந்து. தினமும் உறங்கப் போகுமுன், தலையணையின் கீழே, ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளைத் தண்டுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் உறங்கச் செல்ல, இதுநாள் வரை, உறக்கம் இல்லாமல் தவித்த அவர்களின் கண்களைத் தூக்கம் மெள்ளத் தழுவும். வாரம் இரு முறை, மரிக்கொழுந்துகளை மாற்றி, இது போல சில வாரங்கள் செய்துவர, மன நல பாதிப்புகளும் குணமாகி, பின்னர், மரிக்கொழுந்து இல்லாமலேயே, அமைதியான உறக்கம், இயல்பாக வரும்.

மரிக்கொழுந்து இலை நீர்: மரிக்கொழுந்து இலைகளை அரைத்து விழுதாக்கிக் கொண்டு, அதில் ஒரு தம்ளர் தண்ணீர் கலந்து சற்று நேரம் ஊற வைக்கவும். பின்னர், அந்த நீரைப் பருகி வர, வயிற்று வலி குணமாகும். உடல் தோலில் பூஞ்சைகள் தொற்றால், சரும கோளாறு உள்ளவர்கள், இந்த நீரை தினமும் பருகி வர, நச்சுத் தொற்றுகளினால் ஏற்பட்ட சரும பாதிப்புகள் விலகி விடும். மரிக்கொழுந்து, உடல் சூட்டினால் உண்டாகும், வயிற்றுக் கடுப்பு மற்றும் நீர்க்கடுப்பு பாதிப்புகளை தணிக்கும் ஆற்றல் மிக்கது.

மரிக்கொழுந்து எண்ணைய் மருந்து: வாணலியில் நல்லெண்ணை விட்டு சற்று சூடு வந்ததும், விழுதாக அரைத்து வைத்திருக்கும், மரிக்கொழுந்துடன் சிறிது சுக்குத்தூள் கலந்து நன்கு வதக்கவும். இந்தக் கலவையை இறக்கி, சற்று ஆறியதும், நெற்றியில் பற்று போல தடவி வர, தலைவலி விலகும்.

மூட்டு வலிக்கு : கை கால் மூட்டு வலிகளுக்கு, வலியுள்ள இடங்களில் இந்த மரிக்கொழுந்து எண்ணை விழுதை தரவி வர, உடனடியாக, வலிகள் நீங்கும்.வீக்கம் மற்றும் கட்டிகளுக்கும் நல்ல குணமளிக்கும், ஆற்றல் வாய்ந்தது. இதன் இதமான நறுமணம், மனதிற்கு அமைதியை அளிக்கும். உடல் வலியால் உறக்கம் வராமல் தவித்தவர்கள், மரிக்கொழுந்து மருந்தை உடலில் பாதிப்புள்ள இடங்களில் தடவி வர, இழந்த உறக்கத்தைத் திரும்பப் பெற்று வலியின்றி உறங்கலாம்.

மரிக்கொழுந்து தைலம்: வாணலியில் சிறிது தேங்காயெண்ணையை ஊற்றி, அதன் பின்னர் விழுதாக அரைத்த மரிக்கொழுந்தை அதில் சேர்த்து, எண்ணை காய்ந்து, தைலம் போல வரும்வரை காய்ச்சி, பின்னர் ஆற வைக்கவும். இதை சொரியாசிஸ் போன்ற கடுமையான தோல் வியாதிகள் உள்ள இடங்களில் தடவி வர, வியாதிகள் விலகி விடும். மேலும், அரிப்பு மற்றும் வலியைத் தரும் வீக்கங்களின், பாதிப்பை சரியாக்கி, அவற்றை குணமாக்கி, வலிகளையும் போக்கும் வல்லமை மிக்கது, மரிக்கொழுந்து.

புற்று நோயை தடுக்கும் : மரிக்கொழுந்தை கஷாயம் போலக் காய்ச்சி, பருகி வர, உடலில் சேர்ந்த நச்சுக்களை முறிக்கும் சக்தி வாய்ந்தது. புற்று வியாதிகளை அணுக விடாமல், உடலைக் காக்கும் ஆற்றல் மிக்கது.

கருமையான தலைமுடிக்கு சிலருக்கு, வியாதிகளுக்கு உட்கொள்ளும் மருந்துகளினால் அல்லது முறையான பராமரிப்பு இல்லாத காரணங்களால், தலைமுடி செம்பட்டையாக மாறிவிடும். இதனால் இளைய வயதிலேயே, வயது முதிர்ந்தது போலத் தோற்றம் உண்டாகி, மன உளைச்சல் அடைவார்கள். இவர்கள், மரிக்கொழுந்து இலைகளை, நிலாவாரை இலைகளுடன் கலந்து நன்கு மைபோல அரைத்து, அதைத் தலையில் மயிர்க்கால்கள் வரை நன்கு மசாஜ் செய்வதுபோல தடவி, ஊற வைத்து, சற்று நேரம், கழித்து குளித்து வர, தலைமுடி செம்பட்டை வண்ணம் நீங்கி, விரைவில் கருப்பு வண்ணம் தோன்ற ஆரம்பிக்கும். வாசனை எண்ணை தயாரிப்பில் மரிக்கொழுந்து.

ஏற்றுமதி : நமது நாட்டில் தற்காலத்தில், மலர்களால் ஆன மாலைகளில் மரிக்கொழுந்துகளை சேர்ப்பது அவற்றின் விலை காரணமாக, குறைந்துவிட்டது, அதற்கு பதில், மரிக்கொழுந்துவிற்கு சற்று குறைவான வாசனை உள்ள மறுகு எனும் இலைகளை உபயோகிக்கிறார்கள். வாசனை எண்ணை தயாரிக்க, பதப்படுத்தப்பட்ட மரிக்கொழுந்து இலைகள் மற்றும் தண்டுகள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

சுவை மற்றும் நறுமணமூட்டி : வாசனை திரவியங்களின் தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவங்களில் மட்டுமன்றி, வேறு வகைகளிலும், வெளிநாடுகளில் மரிக்கொழுந்து பயன்படுகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தேசங்களில் மரிக்கொழுந்து, கேக் போன்ற பேக்கரி உணவுகளில் சுவை கூட்டவும், நறுமணத்திற்காகவும் சேர்க்கப்படுகின்றன. மேலும் சில நாடுகளில் புகையிலை, ஹுக்கா எனும் வாசனைப் புகைப்பான்களில் மற்றும் சிகரெட்களில் மணமூட்டியாக சேர்க்கப்படுகின்றன.

11 1512973618 1

Related posts

சினைப்பை நீர்க்கட்டி, கருப்பைக்கட்டி- செய்யக்கூடாதவை…செய்யவேண்டியவை…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பல் முளைக்கும் பாப்பாவின் ஈறுகளைப் பாதுகாக்கும் டீத்தர்!

nathan

கர்ப்பம் அடைத்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்,pregnancy tips

nathan

கழுத்து வலிக்கு எளிய சித்த மருத்துவம்

nathan

வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கான வழிகள்!!!

nathan

ஸ்கேன் படங்கள்! கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை

nathan

உங்க உடலுக்கு வலிமை தரும் மசாஜ் தெரபி தெரியுமா

nathan

கருவளத்தை அதிகரிக்க மனைவிமார்கள் குடிக்கவேண்டிய அபூர்வ மூலிகை லிட்சி இலைச் சாறு!!முயன்று பாருங்கள்

nathan

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan