27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
09 1512797192 1 alcohol
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகள் உங்களது பாலுணர்ச்சியை அழிக்கும் ?இதை படிங்க…

இன்றைய காலத்தில் திருமணமான தம்பதிகள் பலர் படுக்கையில் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும், உடலுறவில் ஈடுபட நாட்டம் வருவதில்லை என்றும் வருத்தம் கொள்கின்றனர்.

இந்நிலையில் உடலுறவில் நாட்டத்தை அதிகரிக்க பலர் கடைகளில் விற்கப்படும் பாலுணர்ச்சியைத் தூண்டும் பல பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு நமது பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி, சாப்பிடும் சில உணவுகளும் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா?

ஆம், நம்மை அறியாலேயே அந்த உணவுகளை நாம் அதிகம் சாப்பிடுவதால், அவை தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு பாலுணர்ச்சியை அழிக்கும் உணவுகள் எவைவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் உங்கள் பாலுணர்ச்சியை அழித்து, பாலியல் வாழ்க்கைக்கு உலை வைக்கக்கூடியவை. உங்கள் பாலியல் வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், இனிமேல் அந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

மது உடலுறவில் ஈடுபடும் முன் மது அருந்தினால், துணையை குதூகலப்படுத்தலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சிலர் உறவில் ஈடுபடும் முன் ஒரு பெக் மதுவை அருந்துவார்கள். மதுவை அளவாக அருந்தினால் பரவாயில்லை. ஆனால் அது அதிகமாகும் போது, மன அழுத்தம் அதிகரித்து, மனநிலை பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி, உறவில் ஈடுபட முடியாமல் போய்விடும். மேலும் ஆண்கள் தினமும் மதுவை அருந்தினால், அது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை குறைத்துவிடும். பின் துணையை திருப்திப்படுத்த முடியாமல் போய், பாலியல் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகும். எனவே மதுவிற்கு குட்-பை சொல்லுங்கள்.

புதினா பலரும் வாய் துர்நாற்றமின்றி புத்துணர்ச்சியுடன் இருக்க, புதினா சூயிங் கம்மை உறவில் ஈடுபடும் முன் சாப்பிடுவார்கள். ஆனால் புதினா பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் என தெரியுமா? ஆம், அதில் உள்ள மென்தால் என்னும் உட்பொருள் ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாமல் செய்யும். வாய் துர்நாற்றத்தைத் தடுக்க வேண்டுமானால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள்.

சோடா சோடா பாலியல் குறைபாட்டை ஏற்படுத்தும் மோசமான உணவுகளுள் ஒன்று. எனவே எக்காரணம் கொண்டும் உறவில் ஈடுபடும் முன் சோடா பானங்களை அருந்தாதீர்கள். ஏனெனில் இது உடல் வறட்சி, உடல் பருமன், சொத்தைப் பல் போன்றவற்றை உண்டாக்கும்.

செயற்கை சுவையூட்டி அனைத்து வகையான செயற்கை சுவையூட்டிகளிலும் உள்ள அஸ்பார்டேம், உடலில் செரடோனின் வெளியீட்டைக் குறைக்கும். செரடோனின் மனநிலையை சந்தோஷமாக வைத்து, பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒரு கெமிக்கல். இந்த கெமிக்கல் தான் பாலுணர்வைக் கட்டுப்படுத்துகிறது. ஒருவரது உடலில் செரடோனின் அளவு குறைவாக இருந்தால், தலைவலி, எரிச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

கார்ன் ப்ளேக்ஸ் கடைகளில் விற்கப்படும் கார்ன் ப்ளேக்ஸ், ஆண் மற்றும் பெண்களின் பாலுணர்ச்சியைக் குறைக்கும் என்பது தெரியுமா? இதில் உள்ள சர்க்கரை, சர்க்கரையின் அளவை அதிகரித்து, டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பெரிதும் பாதித்து, உறவில் ஈடுபட முடியாமல் செய்துவிடும். எனவே இரவு நேரத்தில் இம்மாதிரியான உணவை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

கேன் உணவுகள் கேன் உணவுகளில் அதிகளவில் சோடியம் இருக்கும். இந்த சோடியம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் பாய்வதைக் குறைக்கும். சோடியம் நிறைந்த கேன் உணவுகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, உடலினுள் உள்ள பொட்டாசியத்தின் அளவும் குறைவதுடன், அந்தரங்க உறுப்புகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவும் குறையும். இதன் விளைவாக பாலியல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

காபி நீங்கள் காபி பிரியரா? அப்படியெனில் படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், காபி குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 5-6 கப் காபி குடித்தால், அது அட்ரீனல் சுரப்பியை பாதித்துவிடும். அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு குறைந்தால், மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரித்தால், பாலுணர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். வேண்டுமானால், ஒரு நாளைக்கு 1-கப் காபி போதுமானது.

சோயா பொருட்கள் ஒவ்வொருவரும் பதப்படுத்தப்பட்ட சோயா பொருட்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். சோயா பொருட்களை பதப்படுத்தும் போது, அதனுள் இருக்கும் அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது. சோயாவில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஆண் மற்றும் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, பாலுணர்ச்சியைப் பாதிக்கும்.

பதப்படுத்தப்பட்ட சீஸ் படுக்கையில் சிறப்பானவராக இருக்க வேண்டுமானால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தையும் தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக சீஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பால் பொருட்களை அதிகமாக பதப்படுத்தும் போது, அது உடலினுள் ஜெனோஈஸ்ட்ரோஜெனை வெளியிடச் செய்து, பாலுணர்ச்சியைக் குறைக்கும்.

அதிமதுரம் உங்களுக்கு அதிமதுர டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், இனிமேல் அதற்கு மாற்றாக க்ரீன் டீயைக் குடிப்பது நல்லது. இதனால் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் அதிமதுரத்தில் உள்ள க்ளைசெர்ஹெக்டினிக் அமிலம் கார்டிசோல் அளவைக் குறைத்து, டெஸ்டோஸ்டிரோன் அளவையும் குறைத்து, பாலியல் வாழ்க்கைப் பாதிக்கும்.09 1512797192 1 alcohol

 

Related posts

இத்தனை நன்மைகளா…!! முளைகட்டி சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள்

nathan

sakkaravalli kilangu benefits in tamil – சக்கரவள்ளி கிழங்கு நன்மைகள்

nathan

அமிலத்தை நீக்கும் 7 ஆல்கலைன் உணவுகள்!

nathan

வாழ்நாளைக் குறைக்கும் ஆபத்தான உணவுகள்!!! கட்டாயம் இதை படியுங்கள்….

nathan

சூப்பர் டிப்ஸ் ! உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினம் பாதாம் உண்ணுங்கள்…!

nathan

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றணுமா? பெண்களே…. இதோ எளிய நிவாரணம்

nathan

சத்து நிறைந்த பழைய சாதம்

nathan

உங்களுக்கு தெரியுமா சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?

nathan

தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்! காளான் பிரியரா நீங்கள்? எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும்?

nathan