29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
07 1512643144 4
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அடிக்கடி குமட்டல் வருகிறதா?கவணம் மாரடைப்பிற்கான அறிகுறியா!!

உங்களுக்கு குமட்டல் வந்திருக்கிறதா? உடல் நலம் சரியில்லாத போது, காய்ச்சல், பிடிக்காத உணவுகள், அருவருப்பான விஷயங்களை பார்க்கும் போது, ஒவ்வாத உணவுகளை சாப்பிட்டால் அல்லது அதன் வாசம் வரும் போது ஒமட்டல் ஏற்படும். சில குறிப்பிட்ட நோய்களின் அறிகுறியாகவும் ஒமட்டல் இருக்கிறது. இதைத் தவிர நீங்கள் எதிர்ப்பார்த்திராத காரணங்களும் இருக்கிறது.ஒமட்டல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பதட்டமான சூழல் : நீங்கள் பதட்டமாக இருக்கும் போது குமட்டல் ஏற்படும். திடீரென ஒரு மாற்றத்தையோ அல்லது அதிர்வினையோ சந்திக்கும் போது இப்படியான அறிகுறிகள் உங்களுக்குத் தோன்றிடும். அப்போது உங்கள் ரத்தத்தில் அட்ரனலின் அளவு அதிகரிக்கும். இதனால் செரிமானத்தில் தடை ஏற்படும். இந்த அறிகுறி உங்கள் மூளைக்கு எட்டியதும் உங்களுக்கு குமட்டல் உண்டாகிறது.

டைப் 1 டயப்பட்டீஸ் : வயிற்றில் ஏதாவது பிரச்சனை உண்டானால் வயிற்று வலி, உமட்டல், வாந்தி ஆகியவை உண்டாகும். இது வயிற்றுப் பிரச்சனை மட்டுமல்ல டைப் 1 டயப்பட்டீஸின் ஆரம்ப கால அறிகுறியும் கூட இப்படித்தான் இருக்கும். உங்கள் உடலுக்குத் தேவையான எனர்ஜியாக மாறும் போது கீட்டோன்ஸ் என்ற கெமிக்கலின் அளவு அதிகரிக்கும். இதனால் குமட்டல் உண்டாகும். இதன் போது அதீத தாகம் உண்டாகும், அதே போல அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும்.

அட்ரீனல் சுரப்பி : இது ஹார்மோனல் டிஸ் ஆர்டர். இது நம் கிட்னிக்கு அருகில் இருக்கிறது. இது அட்ரீனல் சுரப்பி சரியாக சுரக்கவில்லை என்றால் Addison என்ற நோய் உண்டாகும். அத்துடன் நம் உடலில் இருக்கும் கார்டிசால் என்கிற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இது நம் உடலின் மெட்டபாலிசம் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது. இந்த சுரப்பி பாதிக்கப்பட்டால் அல்லது அதன் சுரப்பு குறைந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும் உண்டாகும்.

மாரடைப்பு : குமட்டல் உண்டானால் மாரடைப்பு உண்டாவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம். இந்த அறிகுறி ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக தோன்றிடும். சில நேரங்களில் மாரடைப்பிற்கான வலி என்பது நெஞ்செரிச்சல் போலவோ அல்லது, மேல் வயிற்றில் வலி உண்டாவது போன்றோ தோன்றிடும். இதனை சாதரண அஜீரணம் என்று நினைத்து கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். இந்த வலியுடன் சேர்த்து குமட்டலும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

அமிலம் : நம் உடலில் அமிலம் அதிகரித்தால் அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் சில நேரங்களில், முதுகு வலியைக் கூட ஏற்படுத்தும் . அதை விட சில நேரங்களில் அமிலத்தின் அளவு அதிகரித்தால் நம் உடலில் இருக்கும் esophagus அளவு அதிகரிக்கும். இதனால் குமட்டல் உண்டாகும்.

செரிமானம் : இது எல்லாருக்கும் தெரிந்தது தான்.நாம் சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை எனில் இது போன்ற குமட்டல் உண்டாகும். அதே போல வயிற்றில் கேஸ் சேர்ந்தால் கூட ஒமட்டல் உண்டாகும். வயிற்றிலிருந்து உணவு சிறுகுடலுக்குச் செல்லும் போது ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டால் கூட இப்படியான ஒமட்டல்கள் உண்டாகும்.

பித்தப்பை : பித்தப்பையில் கற்கள் உருவானால், அல்லது பித்தப்பையில் ஏதேனும் பாதிப்புகள் உண்டானால் இப்படியான அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் குமட்டலுடன் வயிற்று வலியும் சேர்ந்தே இருக்கும். பித்தப்பை வீங்கியிருந்தாலோ, நோய் தொற்று ஏற்ப்பட்டிருந்தால் கூட இப்படியான அறிகுறிகள் தெரியும். அதிகளவு மது அருந்துவது கூட இதற்கு ஆபத்து.

அலர்ஜி : சிலருக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் கூட இப்படியான குமட்டல் உண்டாகும். உங்களுக்கு பிடிக்காத வாசனை, ஒவ்வாத உணவுகள், மயக்கம் ஏற்படும் சமயத்தில் கூட இப்படியான குமட்டல் ஏற்படும்.

மைக்ரேன் : சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அதன் முன் அறிகுறியாக குமட்டல் உண்டாகும். மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத் திரவத்தை பாதிக்கப்படுவதால் குமட்டல் உண்டாகிறது. இப்படி தலைவலியுடன் குமட்டல் ஏற்பட்டால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது புதிய காற்றை சுவாசியிங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியேறிடுங்கள். இது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை உடனே கொடுப்பதால் தலைவலி கொஞ்சம் குறையும்.

அதீத உணவு : உங்களுக்கு பிடித்தமானது என்று சொல்லி நீங்கள் சாப்பிடும் அளவுக்கு அதிகமான உணவினாலும் குமட்டல் உண்டாகலாம். இதனை தவிர்க்க உங்கள் கையில் தான் இருக்கிறது. எவ்வளவு தான் உங்களுக்குப் பிடித்த உணவாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் வயிறு முட்ட சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். சில உணவுகள் எவ்வளவு சாப்பிட்டாலும் முழுமையான உணர்வைத் தராது என்பதை கவனத்தில் கொள்க.

வலி நிவாரணிகள் : அதிகப்படியான வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டால் கூட சில நேரங்களில் உணவு ஒவ்வாமை ஏற்படும். இரும்புச் சத்துக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளினாலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீங்கள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருக்கும் போது மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் மருந்துகளும் சேர்ந்து வயிற்றுக்கு உபாதைகளை கொடுக்கும் அதன் அறிகுறிகளாக ஒமட்டல் உண்டாகும்.

இஞ்சி : குமட்டல் தொடர்ந்து இருக்கிறது என்றால் நீங்கள் எளிதாக அதிலிருந்து தப்பிக்க இதனை முயற்சித்துப் பாருங்கள். இவை உடனடி நிவாரணம் அளிக்கும். இஞ்சிச் சாறு எடுத்துக் குடிக்கலாம். அல்லது. அல்லது ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சியை துருவிச் சேர்த்து கொத்திக்க வைத்து குடித்திடுங்கள்

எலுமிச்சை : சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சையை முகர்ந்தால் கூட குமட்டல் ஏற்படுவது குறைந்திடும். எலுமிச்சை சாறு எடுத்துக் குடிக்கலாம் இது குமட்டலை குறைப்பதுடன், உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது. நீண்ட தூரப்பயணம்,பஸ் பயணம் ஆகியவற்றின் போது உங்களுக்கு குமட்டல் உணர்வு ஏற்படும் என்றால் கையில் எப்போதும் எலுமிச்சையை வைத்திருப்பது நலம்.

மூச்சுக் காற்று : குமட்டலைக் குறைக்க உங்கள் மூச்சுக்காற்றினை கவனியுங்கள். நிதானமாக மூச்சை உள்ளிழுத்து ஆழமாக சுவாசித்திடுங்கள். இப்படி டீப் ப்ரீத் எடுப்பதனாலும் உங்களுக்கு குமட்டல் உணர்வு குறையும்.

விட்டமின் பி6 : குமட்டல் அதிகமாக தொடர்ந்து நீடிக்கிறது எனும் போது மருத்துவ ஆலோசனையுடன் விட்டமின் பி 6 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஆரம்ப அறிகுறியாக ஒமட்டல் உண்டாகும். அதற்கு மருத்துவர்கள் இதைத் தான் பரிந்துரைப்பார்கள்.

உணவில் கவனம் : நீங்கள் சாப்பிடக்கூடிய உணவில் கவனமாக இருங்கள்.அதிக கொழுப்புள்ள,எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்திடுங்கள். உங்கள் உணவில் அதிகளவில் ப்ரோட்டீன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் அதிகப்படியான் உணவினை உட்கொள்வதுடன் சிறிது சிறிதாக உட்கொள்ளப் பழகுங்கள். உணவு சாப்பிட்டவுடன் தூங்குவது, அல்லது குளிக்கச் செல்வது ஆகியவற்றை தவிர்த்திடுங்கள். மதுப்பழக்கம் வேண்டாம், எப்போதும் உங்கள் உடல் ஹைட்ரேட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை நினைவுகூறுங்கள்.07 1512643144 4

Related posts

உடல் நாற்றம் / நறுமணம் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா???

nathan

குழந்தை ஆணா பெண்ணா..?!

nathan

குழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது?பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஒரு குழந்தைக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் மூன்றாவது பருவ காலத்தில் நிகழும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… முடக்கு வாதத்திற்கு சிகிச்சையளிக்க 5 அற்புதமான அத்தியாவசிய எண்ணெய்கள்..!!!

nathan

குழந்தைகளை தூங்க வைக்க சில யோசனைகள்

nathan

உயர் இரத்த அழுத்தம் இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

nathan

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan