28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் வலி, வயிறு மற்றும் கீழ் வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும் ஈரமாக இருக்கும்.இந்த ஈரத்தன்மையினால் தொடைப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள தோல் உரிந்து அரிப்பு, சொறி ஆகியவை ஏற்படலாம். சிவப்பு நிற புண்களும் வர வாய்ப்புகள் உள்ளன. இவை மிகுந்த வலியை தரும். சொறி மற்றும் புண்களால் மிகுந்த அரிப்பு ஏற்படுகின்றது. இதனால் அந்த இடங்களில் இறுக்கமான ஆடைகளை அணியமுடிவதில்லை.நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் இத்தகைய பிரச்சனைகள் வருவது இயல்பு. ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும். மாதவிடாய் காலத்தில் வரும் சொறி மற்றும் காயங்களை நாம் குணப்படுத்த முயற்சி எடுக்காவிட்டால் அந்த மாதம் முழுவதும் இவை நமக்கு அரிப்பை ஏற்படுத்தும்.இத்தகைய சொறியை குணப்படுத்தவும் மற்றும் அவை மீண்டும் வராமல் தடுக்கவும் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்க்கலாம்..

• சுத்தமாக நமது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நாம் பராமரித்தால் எந்த ஒரு சொறியும் அரிப்பும் அண்ட முடியாது. அவ்வப்போது அந்த இடங்களை கழுவி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். அந்த இடத்தை கழுவி மற்றும் சுத்தமாக துடைத்த பின், சானிட்டரி பேடை பயன்படுத்தினால் நீன்ட நேரம் உலர்வாக இருப்பதையும் சுகமாக இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.

• சொறி மற்றும் அரிப்புகளை ஆற்றிட நமது அங்காடிகளில் கிடைக்கும் நல்ல ஆன்டி-செப்டிக் அல்லது கிருமிகளை கொல்லும் மருந்துகள் திரவ வடிவிலும், பாதியளவு திரவமாகவும் கிடைக்கின்றது. அதை பயன்படுத்தலாம். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்பது சிறந்தது. ஒரு வேளை இதை பயன்படுத்தி எரிச்சல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக கழுவிட வேண்டும். மீண்டும் பயன்படுத்த வேண்டாம். பாராஃபின் எண்ணெயும் சிறந்த குணமளிக்கும் திரவமாக உள்ளது. இதை பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தும் போது மிகுந்த ஆறுதல் கிடைக்கும்.

•  அந்த இடத்தில் கழுவி சுத்தமாக துடைத்து விட்டு, பவுடரை போட்ட பின் சானிட்டரி பேடை பயன்படுத்துவது உகந்தது. இது பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை உலர்வாகவும், சுகமாகவும் வைக்க உதவும். இத்தகைய வழிகளை பயன்படுத்தினாலே போதும் சொறி, வெடிப்பு, புண்கள் ஆகியவற்றை தவிர்க்கமுடியும். ஆன்டி-செப்டிக் பவுடர்களை பயன்படுத்துவது மிகுந்த பலனை அளிக்கும். ஆன்டி-செப்டிக் கிரீமின் மேல் இந்த பவுடரையும் பயன்படுத்தலாம்.

Related posts

வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)

nathan

விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்

nathan

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு

nathan

பெண்களின் கருப்பையை பலமாக்கும் தண்ணீர் விட்டான்

nathan

மனைவி அதிகம் சம்பாதிப்பதால் உங்களுக்குள் இந்த எண்ணங்கள் எழுந்ததுண்டா?

nathan

விஞ்ஞானிகள் தகவல்! புற்றுநோயை அகற்றும் வைரஸ் கண்டுபிடிப்பு!

nathan

குழந்தை பெற்றுக் கொள்வதை நினைத்தாலே பயப்படுபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்களுக்கு சிகிச்சை

nathan