மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பிறகு தழும்புகள் உண்டாகமல் இருக்க இத சாப்பிடுங்க..!

குழந்தை பிறந்ததற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகள் தான். இவை சிவப்பு, பிங்க் அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும். இதற்காக சில க்ரீம்கள், மற்றும் மருந்துகளை பயன்படுத்துவார்கள். அதில் பலன் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக தழும்புகளை குறைக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

மார்பக புற்றுநோய்க்கு பிறகு உடலுறவு எப்படி சாத்தியம்?

1. ஒமேகா 3 S

ஒமேகா 3 S அடங்கி உள்ள உணவு பொருட்கள் தழும்புகளை குறைக்க உதவுகிறது. சருமத்திற்கு பொலிவையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. மீன், மீன் எண்ணெய், வால்நட்ஸ், முட்டை ஆகியவற்றில் ஒமேகா 3 S அடங்கியுள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

2. சியா பட்டர் மற்றும் கோகோ பட்டர்

சியா பட்டர் மற்றும் கோகோ பட்டர் ஆகிய இரண்டும் சருமத்திற்கு மிக சிறந்தவை. இவை சருமத்தை ஈரப்பதமாக பராமரிக்க உதவுகிறது. கோகோ பீன்களில் காணப்படும் கொழுப்பு கோகோ பட்டரில் முழுமையாக உள்ளது. இவை சருமத்தை புதிதாக்கும் வேலையை செய்கின்றன. மேலும் சருமத்தில் இருக்கும் தழும்புகளை நீக்கவும் உதவுகின்றன.

3. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள்

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் சருமத்தில் உள்ள மாசு மருக்களை நீக்கி பளிச்சென மின்னும் சருமத்தை கொடுக்கவல்லது. சக்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. 18 வயதிற்கு குறைவாக இருக்கும் பெண்கள் 2800 mcg RAE அல்லது 9,240 IU-விற்கு குறைவாக விட்டமின் ஏ எடுத்துக்கொள்ள வேண்டும். 19 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3000mcg RAE அல்லது 10,000 IU-விற்கு குறைவாக விட்டமின் ஏ எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

4. விட்டமின் சி நிறைந்த உணவுகள்

விட்டமின் சி சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சரும செல்களை பாதுகாப்பதிலும், புதிய சரும செல்களை வளர வைப்பதிலும் உதவுகிறது. பிரவசவ காலத்தில் விட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது சருமத்தின் சுருக்கங்களை குறைக்க உதவும். சருமம் விரிவடையும் அளவை குறைக்கும்.

5. விட்டமின் ஈ

விட்டமின் ஈ சருமத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள், பருக்கள் ஆகியவற்றை போக்குகிறது. அவோகேடா, கோதுமை, சமைக்கப்பட்ட தக்காளி, ஒட்ஸ் ஆகியவற்றில் விட்டமின் ஈ உள்ளது. இது பிரசவத்தின் போது ஏற்பட்ட தழும்புகளை போக்க உதவுகிறது.

6. ஜிங்க் நிறைந்த உணவுகள்

உடலில் ஜிங்க் குறைபாடு இருப்பது தழும்புகள் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இது முட்டைகள், மீன், நட்ஸ், சிக்கன், முழு தானிய உணவுகளில் இருந்து ஏராளமாக கிடைக்கிறது.

7. ஆண்டி ஆக்ஸிடண்டுகள்

ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இது தோல் சுருக்கம், முதுமை தோற்றம் ஆகியவற்றை குறைக்கும் வல்லமை கொண்டது. இது ஸ்ட்ராபேரி, ப்ளூபேரி மற்றும் மற்ற பழங்களில் அதிகமாக காணப்படுகிறது.

8. தண்ணீர்

தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உங்களது உடல் குளிர்ச்சியடைகிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button