பெண்கள் வேலைக்கு செல்லும் அவசரத்திலும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினாலும், தங்களது அழகு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஆனால் பெண்கள் குடும்ப பொருப்புகளை சுமக்கும் அதே சமயத்தில், தங்களது அழகு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு நேரம் குறைவாக தான் இருக்கும். அவர்கள் வீட்டில் உள்ள அழகுப் பொருட்களை வைத்தே தங்களை அழகுப்படுத்திக் கொள்ளலாம். விரைவான பலன் கிடைக்க வேண்டும் என்று சிலர் அதிக கெமிக்கல் கொண்ட பொருட்களை அழகிற்காக பயன்படுத்துகின்றனர். இதனை பெண்கள் தவிர்த்து, வீட்டிலேயே இருக்கும் இயற்கை பொருட்களை அழகிற்காக பயன்படுத்தலாம்.
ஃப்ரூட் மாஸ்க்
பப்பாளி பழ சாறை, முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதிலிருக்கும் என்சைம்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உங்கள் முகத்தை அப்பழுக்கில்லாமல் பளிச்சென்று காட்டும். முகத்தில் உள்ள கறுமையை போக்க, பப்பாளி சாறுடன் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்தும் தடவலாம்.
மோர் மற்றும் ஓட்ஸ் பேக்
மூன்று தேக்கரண்டி மோர் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். இதை இதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். மோர் உங்கள் சருமத்தில் உள்ள கொப்பளங்களை சரி செய்கிறது. ஓட்ஸ் இரத்த செல்களை நீக்குவதால், உங்கள் சருமம் இளமையாக தெரியும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துங்கள்.
கற்றாழை மற்றும் தர்பூசணி வெயிலால் ஏற்பட்ட சரும பாதிப்புகளை கற்றாழை குணப்படுத்தும். கற்றாழையில் துத்தநாகம் இருப்பதால், இது பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. தர்பூசணி வெயிலால் ஏற்படும் வறட்சியை போக்கி, சருமத்தை புத்துணர்வாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், தர்பூசணி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.
இளநீர் மற்றும் சந்தனம் ஒரு தேக்கரண்டி இளநீர் மற்றும் ஒரு தேக்கரண்டி சந்தனம் எடுத்துகொள்ளுங்கள். இதை பசை போல் செய்துகொள்ளுங்கள். தேவையென்றால் இன்னும் இளநீர் சேர்த்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் சிறிது பாதாம் சாறு சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி காய விட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.
சந்தனம் சந்தனத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இளநீருடன் சேரும் போது, இது வெயிலால் ஏற்படும் கறுமையை போக்குகிறது. இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் சரி செய்கிறது. கறுமையை போக்குவதற்கு இது ஒரு சிறந்த வழி என்று தான் சொல்ல வேண்டும்.
தேன் மற்றும் அன்னாசி ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி அன்னாசி பழ சாறு சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். உங்கள் சருமத்தில் இதை தடவி 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால், இது மிகவும் பலனளிக்கும்.
தண்ணீர் நம்முடைய சருமம் வறண்டுவிடாமல் பாதுகாத்து வந்தாலே பல்வேறு தோல் நோய்களிலிருந்து தப்பிக்கலாம். சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்க வேண்டுமானால் போதுமான அளவு தண்ணீர் சத்து அவசியம். அதனால் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், தண்ணீரைத் தவிர இயற்கையான பழச்சாறுகள், சூப், இளநீர் போன்றவை குடிக்கலாம். செயற்கையான பானங்கள், கேஸ் நிறைந்த பானங்கள், அதிகமாக காபி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன. இத்துடன் கூடுதலாக எந்த பொருளும் சேர்க்கத் தேவையில்லை. இதனை நீங்கள் இரண்டு விதமாக பயன்படுத்தலாம். ஒன்று உருளைக்கிழங்கை பெரிய துண்டாக அறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு உங்கள் முகத்தை துடைத்தெடுக்கலாம். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கிடும். மேலும் சருமத்துளைகளும் புத்தாக்கம் பெறுவதால் பொலிவாக தெரியும். இதே போல உருளைக்கிழங்கை தோல்சீவி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதிலிருந்து சாறெடுத்து அதனையும் முகத்தில் அப்ளை செய்யலாம்.
தயிர் சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றினால் அதற்கு தயிர் சிறந்த மருந்தாக அமைந்திடும். வெறும் தயிரை மட்டுமே கூட பயன்படுத்தலாம் அல்லது தயிருடன் பப்பாளிப்பழக்கூழை பயன்படுத்தினால் உடனடி மாற்றம் தெரிந்திடும். பப்பாளிக்கூழுடன் தயிர் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இதனை சருமத்தில் இரண்டு லேயர்களாக அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவிடலாம்.
ஓட்ஸ் முகத்தில் சுருக்கம், பரு, அல்லது அதிகப்படியான வறண்ட சருமம் இருப்பவர்கள் ஓட்ஸை முகத்திற்கு பயன்படுத்தலாம். ஓட்ஸை முதலில் தனியாக அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அவற்றுடன் காய்ச்சாத பாலை இரண்டு தேக்கரண்டி சேர்த்து குழைத்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவி விடலாம். இதே எண்ணெய் பசையுள்ள சருமம் என்றால் தயிருடன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.
தழும்புகள் மறைய முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.